இனி இளையராஜா தான் பேசணும்.. நான் காலில் விழுந்தேன்! கூப்பிட்டு திட்டி இருக்கலாம், ஆனா? வனிதா ஆதங்கம்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் கதை எழுதி, இயக்கி நடித்த மிஸஸ் அண்டு மிஸ்டர் திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த "ராத்திரி சிவராத்திரி" என்ற பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு தொடர்ந்திருக்கிறார். இது குறித்து வனிதா செய்தியாளர்களிடம் பேசும் போது நான் என்னுடைய தரப்பு நியாயத்தை சொல்லிவிட்டேன் .இனி இளையராஜா தான் மைக் பிடிச்சு இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கோபமாக பேசி இருக்கிறார்.
சமீபகாலமாகவே சில திரைப்படங்களில் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்து வருகிறார். தன்னுடைய பாடல்களை பயன்படுத்தும் திரைப்படங்கள் மீது அவர் வழக்கு தொடர்ந்து வருகிறார். இசையமைப்பாளர் தேவா உட்பட சிலர் எங்களுடைய பாடலை இப்போது உள்ள தலைமுறையினரும் கேட்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. எங்களுடைய பாடலை பயன்படுத்துவதற்கு நான் யாரிடமும் காப்பிரைட் கேட்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இளையராஜா நான் செய்த வேலைக்கு எனக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து தன்னுடைய பாடல்களை பயன்படுத்துபவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் போன்ற படங்களில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு தொடர்ந்தது இன்னும் நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில் நடிகை வனிதா விஜயகுமார் கதை எழுதி இயக்கி நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இளையராஜா இசை அமைத்த ராத்திரி சிவராத்திரி என்ற பாடலை பயன்படுத்தி இருந்தார். இது குறித்த ட்ரெய்லர் வெளியான போது வனிதாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு வனிதா தான் இளையராஜாவை நேரில் சந்தித்து அவரிடம் ஆசி வாங்கிவிட்டு தான் பயன்படுத்தி இருக்கிறேன். அவருக்கு இது ஏற்கனவே தெரியும். அவர் அனுமதி தந்துவிட்டார் இந்த பாடலின் உரிமையை வைத்திருந்த சோனி மியூசிக் இடமும் அனுமதி வாங்கிட்டோம் என்று சொல்லியிருந்தார். ஆனாலும் இந்த திரைப்படம் வெளியான அதே நாளில் இளையராஜா வனிதா தன்னுடைய பாடலை பயன்படுத்தியதற்காக நஷ்டஈடு தரவேண்டும் அல்லது அந்தப் பாடலை நீக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.
இதற்கு ஒரு வாரத்திற்குள் வனிதா பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான நிலையில் வனிதா சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது அவரிடம் இந்த பிரச்சனை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு வனிதா நான் என்னுடைய தரப்பு நியாயத்தை ஏற்கனவே சொல்லிவிட்டேன். இளையராஜா சாரிடம் நேரில் சென்று அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி விட்டுதான் இந்த பாடலை நான் பயன்படுத்துகின்றேன். ஆனால் அவர் எதற்காக இப்போது வழக்கு தொடர்ந்தார் என்று எனக்கு தெரியாது.
ஏற்கனவே குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள் இருக்கிறது. இந்த பாடலின் உரிமை சோனி மியூசிக் இடம் இருக்கிறது. இந்த பாடலை உருவாக்குவதற்கு உரிமை கொடுத்தது என்னுடைய பெரியப்பா தான். ஏற்கனவே குடும்பத்திற்குள் பிரச்சனை இருப்பதால் இப்படி வழக்கு தொடர்ந்து இருக்கிறார். நான் இளையராஜாவிடம் நேரில் சொல்லிவிட்டு தான் பயன்படுத்தினேன். என் மீது கோபம் இருந்தால் என்னை கூப்பிட்டு திட்டிருக்கலாம். ஆனால் எதற்காக அவர் நீதிமன்றத்திற்கு போனார்?
அந்த பாடலுக்கான உரிமை யாரிடம் இருக்கிறது என்று அவர்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அவரிடம் இதற்கு கேள்வி கேளுங்கள் அவர் மைக் பிடித்து பதில் சொல்லட்டும். அவர் இப்போது நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார் நானும் இனி லீகலாக இதற்கு பார்த்துக் கொள்கிறேன். பெத்த அப்பனையே பார்த்து விட்டேன் இனிமே என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் என்று அந்த பேட்டியில் வனிதா பேசியிருக்கிறார்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
"நான்கு” தலைமுறையாக மாஸ் காட்டும் "இசைஞானி..” இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்த 10 ஆச்சரிய சம்பவங்கள்! -
83 வயதில் இசைஞானி இளையராஜாவின் காப்பி ரைட்ஸ் போராட்டம்.. இளைஞர்கள் அறிய வேண்டிய பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications