Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடைஞ்சு போய் அழுதுட்டு இருந்தேன்.. அப்போ விஜய் செய்த செயல்! மறக்க மாட்டேன், வனிதா உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் முதல் முதலாக சினிமாவில் விஜய்யுடன் நடித்திருந்தார். இருவரும் சந்திரலேகா திரைப்படத்தில் தான் ஒன்றாக நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் இவர்கள் நடிக்கும் போது மட்டுமல்லாமல் இவர்கள் இருவருடைய குடும்பத்திற்குள் ஏற்கனவே நல்ல நட்பு இருந்திருக்கிறது. ஒரு முறை வனிதா அழுது கொண்டிருந்த போது விஜய் சொன்ன வார்த்தையை என்னால் எப்போதும் மறக்க முடியாது என்று சமீபத்தில் பேட்டியில் வனிதா நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜய் உடன் சந்திரலேகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்த வனிதா கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு திருமணம் முடிந்துவிட்டது.

Vanitha Vijayakumar Vijay

சினிமாவை விட்டு விலகல்

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார். ஆனால் அவருடைய திருமண வாழ்க்கை வனிதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கி இருக்கிறார். தன்னுடைய மகள் தயாரிப்பில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக வனிதா நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தின் கதை மற்றும் இயக்கம் வனிதா தான்.

நடிகை வனிதா பேட்டி

இந்த நிலையில் வனிதா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அப்போது விஜய் பற்றி சில தகவல்களை கூறி இருக்கிறார். வனிதா கலந்து கொள்ளும் பேட்டிகளில் விஜய் பற்றி கேள்விகள் கேட்பது உண்டு அப்போதெல்லாம் வனிதாவும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பார். அதுபோல நான் இப்போதும் விஜய் பற்றி வனிதா பெருமைக்காக பேசி இருக்கிறார். அதாவது சந்திரலேகா திரைப்படத்தில் வனிதா விஜயுடன் நடித்துக் கொண்டிருக்கும் போதும் ராஜ்கிரணுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தாராம்.

வனிதா பற்றிய கிசுகிசுப்பு

அப்போது வனிதாவிற்கு 15 வயது தான் இருக்குமாம். ஆனால் ராஜ்கிரணுக்கு 40 வயதுக்கு மேலே இருக்குமாம் இவர்கள் இருவரையும் சேர்த்து அப்போது பத்திரிக்கையில் கிசுகிசுகள் வெளியாகி இருக்கிறது. அதை பார்த்து சந்திரலேகா படப்பிடிப்பில் அழுது கொண்டு இருந்தாராம். அப்போது விஜய் அதை பார்த்துக்கொண்டே இருந்தார். முதலில் எதுவும் சொல்லாமல் நோட் பண்ணி இருக்கிறார். பிறகு சிறிது நேரம் கழித்து இப்போ உனக்கு என்னதான் பிரச்சனை என்று கேட்டாராம்.

விஜய் கொடுத்த அட்வைஸ்

அதற்கு வனிதா ஒன்றுமில்லை என்று சொல்ல, இப்ப சொல்ல போறியா இல்லையா என்று விஜய் கேட்டு இருக்கிறார். அதற்கு பிறகு தான் தன்னை பற்றி தவறாக எழுதிட்டாங்க, அதை பார்த்தாலே எனக்கு கஷ்டமா இருக்கு என்று வனிதா சொன்னாராம். அதற்கு விஜய் "உன்னை பற்றி எழுதவில்லை என்றால் நீ இந்த சினிமாவில் இல்லை என்று அர்த்தம். உன்னை பற்றி எழுதுகிறார்கள் என்றால் நீ பிரபலமாக இருக்கிறாய் என்று அர்த்தம். எந்த ஒரு விமர்சனத்துக்காகவும் கவலைப்படாத, அடுத்தடுத்து வேலைகளை பார்த்துக் கொண்டே இரு" என்று விஜய் அட்வைஸ் கூறினாராம்.

ராஜ்கிரண் பற்றி வனிதா

மேலும் வனிதா பேசும் போது ராஜ்கிரண் சார் அவ்வளவு ஜெனியூனான பெர்சன். அவருடைய கேரக்டர் அவ்வளவு சுத்தமாக இருக்கும். ஆனால் அவரோடு என்னை தவறாக இணைத்து பேசியது என்னால் அந்த நேரத்தில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் அழுது கொண்டு இருக்கும்போது கூட விஜய் உடனே என்ன ஆச்சுன்னு கேட்கவே இல்லை. இந்த விஷயத்தில் மட்டுமல்ல விஜய் எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதை கொஞ்ச நேரம் நோட் பண்ணி பார்த்துவிட்டு தான் பிறகு என்னவென்று கேட்பார். கேட்கும் வார்த்தைகள் குறைவாக இருந்தாலும் அதற்கு தீர்வு சரியாக சொல்லுவார் என்று வனிதா கூறி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+