Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளையராஜா வீட்டுக்கு வனிதா விஜயகுமார் மருமகளா? மாப்பிள்ளை யார்? செய்யாறு பாலு பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜாவின் வீட்டிற்கு மருமகளாக செல்ல வேண்டியவள் என வனிதா விஜயகுமார் கூறியதன் அர்த்தம் என்ன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். சிவராத்திரி பாடல் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

இதுகுறித்து செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில் கூறியிருப்பதாவது: எந்த ஒரு பொருளாக இருந்தாலும் நாம் யாரிடமாவது கொடுத்திருந்தால், அதை திருப்பி கேட்க மாட்டோம். இதற்கு காரணமாக அவர்களது முக தாட்சனைக்காக விட்டு வைப்போம். இன்னொரு நம் பொருளை யாராவது எடுத்துவிட்டால், நாம் இருக்கும் தகுதிக்கு இவர்களிடம் இருந்தெல்லாம் அதை வாங்க வேண்டுமா, அவர்களே வைத்துக் கொள்ளட்டும் என்ற மனப்பான்மை இருக்கும்.

television vanitha vijayakumar

இளையராஜாவுக்கு கோடி கோடியாக வருமானம் வந்து கொண்டிருக்கிறது. அவர் எப்போதோ போட்ட பாட்டுகள் உலகில் எந்த மூலையில் ஒலித்தாலும் அதற்கு உண்டான ராயல்டி அவருடைய வங்கிக் கணக்கில் வந்து கொண்டே இருக்கும். இதைத்தான் கங்கை அமரனும் சொன்னார்.

குட் பேட் அக்லியில் இளையராஜா பாடலை பயன்படுத்தியமைக்காக கங்கை அமரன் ஒரு மேடையில், "உங்கள் இசையமைப்பாளருக்கு ரூ 7 கோடி சம்பளம் கொடுக்கறீங்க. ஆனால் எங்கள் பாட்டைத்தான் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். நாங்கள் இதை பணத்திற்காக கேட்கவில்லை. எங்களிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் முக தாட்சணைக்காக அனுமதி கேட்டு பயன்படுத்தலாமே என்பது கூட உங்களுக்கு தெரியவில்லையா" என ஆவேசமாக பேசியிருந்தார்.

கஸ்தூரி ராஜாவும் அதைத்தான் சொல்லியிருந்தார். குட் பேட் அக்லியில் பயன்படுத்தப்பட்ட ஒத்த ரூபா தாரேன் பாடல் நன்றாக ஹிட் கொடுத்தது. நான் எழுதிய பாடல், நான் தயாரித்த படம். ஆனால் இது என்ன பாடல் என சில ரசிகர்களிடம் கேட்ட போது அவர்கள் அஜித் பாடல்" என்றார்கள். அந்த பாடலுக்காக ஒரு தேங்க்ஸ் கார்டு போட்டிருக்கலாமே என கோபித்துக் கொண்டார். ஒரு வார்த்தை தன்னிடம் கேட்டு அந்த பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்ற மரபு கூட உங்களுக்கு ஏன் தெரியவில்லை என கேட்டிருந்தார்.

தற்போது மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் படத்தை வனிதா விஜயகுமார் மகள் தயாரித்து ரிலீஸாகியுள்ளது. இதில் மைக்கேல் மதன காமராஜ் என்ற படத்தில் இடம் பெற்ற சிவராத்திரி என்ற பாடல் பயன்படுத்தப்பட்டது. இதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்து, நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதற்கு வனிதா விஜயகுமார் கண் கலங்கி அழுதிருக்கிறார். "நான் இளையராஜாவின் வீட்டிற்கு மருமகளாக போக கூடியவள்" என தெரிவித்திருந்தார். வனிதா கூறுகையில் "இந்த படம் எடுத்த போது இதற்கு அந்த பாட்டு தேவைப்படுகிறது என்பதற்காக இளையராஜா அங்கிளை சந்தித்தேன். நான் இந்த பாடலை பயன்படுத்திக் கொள்கிறேன் என கேட்டேன், அதற்கு அவர் யூஸ் பண்ணிக்கோங்க என வாய்மொழியாக தெரிவித்தார்.

இதை நம்பித்தான் நாங்கள் இந்த பாடலை பயன்படுத்தினோம். ஆனால் இப்போது எங்களிடம் நஷ்ட ஈடு கேட்கிறார். இது எந்த விதத்தில் நியாயம், நாங்களே மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறோம். நான் சிறுவயதில் இளையராஜா அங்கிள் வீட்டில் வளர்ந்த பெண்.

ஜீவா ஆண்ட்டி (இளையராஜாவின் மனைவி) என்னை மகாலட்சுமி என்றுதான் அழைத்தார். ஒரு தட்டு நிறைய நகையை என்னிடம் கொடுத்து சாமி ரூமில் வை என்பார், அதை கொண்டு போய் பீரோவில் வை என்பார். அந்த அளவுக்கு நான் உரிமையாக இருந்திருக்கேன். அந்த வீட்டிலேயே நான் விளையாடி இருக்கிறேன், சாப்பிட்டிருக்கிறேன்.

அப்படிப்பட்ட எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பறீங்களே, நான் உங்களிடம் கேட்காமல் இருந்தால் கூட அனுப்பலாம். நான் கேட்டுத்தானே பயன்படுத்தினேன். நான் இளையராஜா வீட்டிற்கு மருமகளாக போக வேண்டியவள், இதற்கு மேல் பேசினால் எல்லா உண்மைகளையும் பேச வேண்டிருக்கும். அது சரியாக இருக்காது" என வனிதா உச்சபட்ச கோபத்தில் பேசியிருக்கிறார்.

குட் பேட் அக்லி பெரிய பட்ஜெட் படம், அதற்கு இளையராஜா கேட்ட ராயல்டி சரியானது. ஆனால் வனிதாவின் படம் சிறிய படம், இதற்கு நோட்டீஸ் அனுப்பினால் எப்படி? தண்ணீர் கருத்திருச்சி என்ற பாடலை பயன்படுத்தலாமா என நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு கேட்டதற்கு, "யார் யாரோ பயன்படுத்துகிறார்கள். நீ என் தம்பி மகன், பயன்படுத்திக் கோடா" என நான் சொன்னதாக இளையராஜாவே தெரிவித்திருந்தார்.

அப்படியிருக்கும் போது வனிதாவிடம் மட்டும் வாய்மொழியாக சொல்லிவிட்டு நோட்டீஸ் அனுப்பியது ஏன்? இளையராஜாவுக்கு நிறைய கச்சேரிகளை வாங்கி கொடுத்தது எஸ்பிபிதான். அவரே தனது பாடலை ஒரு மேடையில் அனுமதி இல்லாமல் பாடி விட்டார் என அவருக்கே இளையராஜா எதிர்ப்பு தெரிவித்தவர். இதனால் எஸ்பிபியே நிலைகுலைந்து போய்விட்டார்.

இளையராஜாவின் எந்த மகனுக்கு வனிதா மனைவியாக வேண்டியவர் என தெரியவில்லை, இதை வனிதாதான் சொல்ல வேண்டும். இப்படியிருக்கையில் மொத்த பணத்தையும் ஒரு படத்தில் போட்டு , அது ஓடுமா, ஓடாதா என தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இளையராஜா இப்படி நோட்டீஸ் அனுப்பியதால் யாராக இருந்தாலும் கலங்கி போவார்கள். அதன் வெளிப்பாடுதான் வனிதா சொன்ன அந்த மருமகள் விஷயம். இவ்வாறு செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+