அருண் விஜயை பார்ட்டியில் நேருக்கு நேர் பார்த்தேன்.. நடந்தது என்ன? போட்டு கொடுத்த வனிதா விஜயகுமார்
சென்னை: என் குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு காரணம் என் ரத்த சொந்தங்கள் அல்ல, வெளியே இருந்து வந்தவர்கள்தான் என வனிதா விஜயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமாரை கடந்த 2010 களில் தாய் மஞ்சுளாவிற்கும் தந்தை விஜயகுமாருக்கும் இடையே நடந்த சொத்து தகராறில்தான் அனைவருக்கும் தெரியவந்தது. அவர் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். எனினும் அவர் குடும்பச் சண்டையால் பிரபலமடைந்தார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி மூலம் வனிதா ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது ஒரு குக்கிங் சேனல் வைத்து நடத்தி வருகிறார். விஜய் டிவியில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அது மட்டுமல்லாமல் அவர் சினிமா வாய்ப்பு தேடும் பெண்கள் போட்டோஷூட் நடத்துவதற்காகவே பிரத்யேக ஆடை, அணிகலன்களை விற்பனை செய்யும் கடையை எடுத்து நடத்தி வருகிறார்.

வெள்ளித்திரை
இந்த நிலையில் அவர் தற்போது வெள்ளித்திரையிலும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் தனது குடும்ப பிரச்சினை குறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கும் என் அப்பாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அம்மா இறந்த பிறகு என் அப்பாவை கைப்பாவையாக சிலர் மாற்றி விட்டார்கள்.

ரத்த சொந்தங்கள்
என் ரத்த சொந்தங்கள் மீது எந்த தவறும் இல்லை. வெளியே இருந்து வந்தவர்களால்தான் எங்களை ஒட்ட விடாமல் பிரித்துக் கொண்டே இருக்கிறார்கள். கடவுளும் என் அம்மாவும் என்னுடன் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் இந்த வயதில் எனக்கு இது போன்ற வாழ்க்கை கிடைத்திருக்குமா, இன்று நான் நன்றாக இருக்கிறேன். சாகும் தருவாயில் கூட என் அம்மா என்னை பற்றிதான் கவலைப்பட்டார்கள்.

வழக்கறிஞரை அழைக்க சொன்ன அம்மா
என் அப்பாவிடம் என்னை விட்டு விட வேண்டாம் என சத்தியம் வாங்கினார்கள். ராம்ஜேத்மலானியை அழைத்து என் பெயருக்கும் சில சொத்துகளை எழுதி தர முயற்சித்தார்கள். ஆனால் சாகும் தருவாயில் இதை செய்ய நான் ஒப்புக் கொள்ளவில்லை. என் அப்பாவும் என் மீது பாசமாகத்தான் இருந்தார். ஆனால் என் அம்மா இறந்தவுடன் அவர் மாறிவிட்டார். இறந்த அம்மாவின் முகத்தை கூட பார்க்க என்னை அனுமதிக்கவில்லை. ரஜினிகாந்த் அங்கிள்தான் என்னை உள்ளே அழைத்து சென்றார்கள்.

மூத்த மகள்
அது போல் தலைச்ச மகளாக நான் செய்ய வேண்டிய சடங்குகளை கூட செய்யவிடாமல் சிலர் தடுத்தனர். அப்போது சரத்குமார் அண்ணாவும் , ராதாரவி அங்கிளும்தான் என்னை முன்னாடி வந்து சாங்கியங்களை செய்ய வைத்தார்கள். அருண் விஜய் அண்ணாவுக்கு என் மீது பாசம் அதிகம். அது போல் என்னை வளர்த்தது என் பெரியம்மாதானே (அருணின் அம்மா). அவருக்கும் என் மீது பாசம்.

அருண் அண்ணா
ஒரு நாள் பார்ட்டியில் அருண் அண்ணாவை நேருக்கு நேர் பார்த்தேன். உடனே அண்ணா எப்படியிருக்கீங்கன்னு கேட்டேன், அவர் உடனே நான் நல்லாயிருக்கேன்மானு சொன்னார், எனக்கு கண்களில் தண்ணீர் வந்தது. ஏன்னா இப்படி நான் என்ன செய்தேன், எத்தனை நாளைக்குத்தான் நாம் சண்டை போட்டுக்கிட்டே இருக்க போகிறோம் என்றேன். உடனே அருண் அண்ணா , வனிதா இங்க வேண்டாம், வேற இடத்தில பேசிக்கலாம். உன் ப்ரெண்ட்ஸ்களுடன் வந்திருக்கே! பார்ட்டியை என்ஜாய் செய், நான் வீட்டுக்கு போக வேண்டும் என கூறிவிட்டு கிளம்பினார்.

2 நிமிடங்கள் பேசிய அருண் விஜய்
அது போல் இன்னொரு பார்ட்டியிலும் பார்த்தேன். பேசினேன். அப்போதும் 2 நிமிடங்கள் பேசிவிட்டு போய்விட்டார். என் அண்ணன் சினிமாவில் நடிக்க நான் என் கிரெடிட் கார்டில் துணி வாங்கியிருக்கிறேன். கடையின் ஷட்டரை சாத்த போகும் நேரத்தில் கூட கடைக்கு போய் துணி வாங்கிக் கொண்டு வருவேன். இதெல்லாம் அவருக்கு திருமணம் ஆவதற்கு முன்பு! என் ரத்த சொந்தங்கள் நல்லவங்கதான். ஆனால் புதிதாக வந்தவர்கள்தான் குழப்புகிறார்கள். திருமணமான புதிதில் ஆகாஷ் , என் அம்மாவையும் தங்கச்சியையும் பற்றி ஏதாவது கூறுவார், நான் உடனே கோபத்துடன் பல்லை உடைத்துவிடுவேன், என் அம்மா பற்றி பேச நீ யார் என கேட்பேன். நம் ரத்த சொந்தங்களுடன் பேச கூடாது என சொல்லும் உரிமையை புதிதாக வந்தவர்களுக்கு தரக் கூடாது.

வந்தவர்கள் செய்யும் குழப்பம்
ஸ்ரீஹரி மீதுள்ள கோபத்தால் ஜோவிகா, இனி அவனுடன் பேசக் கூடாது என என்னிடம் சொல்வாள், நான் கோபத்தில் அவளை திட்டிவிடுவேன். என் மகனுடன் பேசக் கூடாதுனு சொல்ல நீ யார், எனக்கு உன்னை பிடிக்கும், உன்னை மதிக்கிறேன், அதற்காக நீ சொல்வதை நான் கேட்க முடியாது. உன் லிமிட்டை பார்த்து நட என்பேன். அதாவது என் கூட இல்லாவிட்டாலும் அவனும் என் மகன்தான். என் மகன், மகள்கள் இடையே நான் எந்த பிரிவினையையும் பார்ப்பதில்லை. இந்த பேட்டியை பார்ப்பவர்கள் கவனத்திற்கு அருண் அண்ணா என்னுடன் பேசிவிட்டார். (நான் அவர் வீட்டில் போட்டு கொடுக்கிறேன் என சொல்லிவிட்டு சிரிக்கிறார் வனிதா). புதிதாக வந்தவர்கள் செய்யும் குழப்பம் என வனிதா சொல்வது அருண் விஜய்யின் மனைவி, ப்ரீத்தாவின் கணவர் இயக்குநர் ஹரி உள்ளிட்டோரை என தெரிகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications