இளையராஜா வீட்டுக்கு மருமகள்.. என்ன அர்த்தத்தில் சொன்னார் வனிதா? ஒரே வார்த்தையில் சிக்கிட்டாரே!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் எழுதி நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் கடந்த வாரத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தில் "ராத்திரி சிவராத்திரி" என்ற பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு தொடர்ந்து இருக்கிறார். ஆனால் அது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது வனிதா நான் "இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போயிருக்க வேண்டும்" என்று சொல்லி இருந்தார். இது இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. திடீரென சொன்ன ஒரே வார்த்தை வனிதாவுக்கு எதிராக இப்போது கிளம்பி இருக்கிறது.
நடிகை வனிதாவையும் சர்ச்சையையும் பிரித்து பார்க்க முடியாது என்று சொல்வது போலத்தான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய திருமண வாழ்க்கை குறித்த சர்ச்சைகள் அடிக்கடி பரபரப்பு ஏற்படுத்தும். ஆனால் சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வரும் வனிதா தன்னுடைய மகள் தயாரிப்பில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் கதையை எழுதி இயக்கியதும் வனிதா தான். அதே நேரத்தில் இந்த திரைப்படம் கடந்த வாரத்தில் வெளியான நிலையில் இப்போது வனிதாவிற்கு புது பிரச்சனை வந்திருக்கிறது. ஏற்கனவே இளையராஜா தன்னுடைய பாடல்களை சில திரைப்படங்களில் அனுமதி இன்றி பயன்படுத்துகிறார்கள் என்ற வழக்கு தொடர்ந்திருக்கிறார். சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம், அதற்கு முன்பு வெளியான மஞ்சுமெல்ஸ் பாய்ஸ் போன்ற திரைப்படங்களில் தன்னுடைய பாடலை பயன்படுத்தியதற்காக வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது
இந்த நிலையில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலும் இளையராஜா இசை அமைத்த ராத்திரி சிவராத்திரி என்ற பாடல் பயன்படுத்தியிருந்தது இது குறித்து வனிதாவிடம் கேட்டபோது ஏற்கனவே நான் இளையராஜாவை சந்தித்து அதற்கு அனுமதி வாங்கிவிட்டேன் என்று சொல்லி இருந்தார். ஆனாலும் திரைப்படம் வெளியான நாளில் இளையராஜா தனக்கு நஷ்ட ஈடுபட வேண்டும் அல்லது அந்த பாடலை நீக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
இது குறித்து விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் கடந்த வாரத்தில் இந்த தான் இயக்கி நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தை கமலா தியேட்டரில் பார்த்து விட்டு வெளியே வந்த வனிதாவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டிருந்தனர். அப்போது கண்கலங்க வனிதா பேசியிருந்தார். அதாவது நான் இளையராஜாவிடம் நேரில் சந்தித்து அனுமதிக்காக கேட்டிருந்தேன். அதுபோல அந்த பாடல் உரிமத்தை வைத்திருந்த சோனி நிறுவனத்திடமும் அனுமதி வாங்கி இருக்கிறேன்.

இளையராஜா கடவுள் போன்றவர் கடவுள் நம் மீது கோபப்பட்டால் என்ன பண்ணுவது என்று கண்கலங்கியே வனிதா கிளம்பும் நேரத்தில் எனக்கு இளையராஜா வீட்டில் பெரிய பந்தம் இருக்கிறது. நான் அவருடைய வீட்டில் அவருடைய மனைவியிடம் இருந்து வீட்டு சாவியை வாங்கி நகைகளை எடுத்து பூஜை பண்ணி இருக்கிறேன். அந்த வீட்டிற்கு நான் மருமகளா போயிருக்கணும் என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்து விட்டார். இதுதான் இப்போது ட்ரோல் ஆகி கொண்டிருக்கிறது.
வனிதா என்ன அர்த்தத்தில் இப்படி சொன்னார்? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. அதோடு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவும் வனிதாவும் காதலித்தார்களா? அதனால் தான் வனிதா இப்படி சொன்னாரா? என்றெல்லாம் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில் இதற்கு வனிதா தன்னுடைய twitter பக்கத்தில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் கார்த்திக் என்னுடைய நண்பர், அவருடைய மனைவியும் என்னுடைய நல்ல நண்பர்தான், இந்த விஷயத்தில் கார்த்திக்கை இழுக்க வேண்டாம், இளையராஜா எனக்கு கடவுள் போன்றவர் நடக்கும் பிரச்சனையை நான் சட்ட ரீதியாக சகித்துக் கொள்கிறேன் என்று விளக்கம் கொடுத்திருந்தார். ஆனாலும் இணையத்தில் நெட்டிசன்கள் வனிதா என்ன அர்த்தத்தில் நான் இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போயிருக்க வேண்டும் என்று சொன்னார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications