ராதிகா செய்ததை மறக்க முடியாது! கண் கலங்கி பேசிய வரலட்சுமி! சரத்குமாரின் முதல் மனைவி சாயா சொன்ன வார்த்தை!
சென்னை: வரலட்சுமி சரத்குமார் (Varalaxmi Sarathkumar) இயக்குநராக அறிமுகமாகும் படம் சரஸ்வதி. இந்த படம் வரும் மார்ச் 6ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வரலட்சுமி நடித்ததோடு தயாரிப்பிலும் பங்கு கொண்டுள்ளார். அவருடன் பிரியாமணி, பிரகாஷ்ராஜ், (Priyamani, Prakash Raj) உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசுகையில் வரலட்சுமி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். குறிப்பாக ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar) குறித்து பேசியபோது மேடையிலேயே கண்கலங்கினார்.

வரலட்சுமி மாற்றம்
வரலட்சுமி முன்பே ஒரு பேட்டியில், "நான் ராதிகாவை ஆண்ட்டி என்றுதான் அழைப்பேன். அவர் என் அப்பாவின் இரண்டாவது மனைவி. அதற்காக நான் அவரை அம்மா என்று அழைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் எங்களுக்குள் எப்போதும் அன்பும் மரியாதையும் தான் இருந்தது. ராதிகாவின் குழந்தைகளும் நாங்களும் ஒன்றாகத்தான் வளர்ந்தோம்" என்று வெளிப்படையாக கூறியிருந்தார். அந்த பேச்சு அப்போது பெரிதாக பேசப்பட்டது.
வரலட்சுமி பேச்சு
ஆனால் இந்த முறை புரோமோஷன் மேடையில் அவர் சொன்ன வார்த்தைகள் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. "சில நேரங்களில் நீங்கள் குடும்பத்திற்காக நிற்கவில்லை என்றாலும், குடும்பம் உங்களுக்காக நிக்கும். அப்படி எனக்காக நின்றவர் ராதிகா. அவர் எனக்கு மூன்றாவது பெற்றோர்," என்று கூறியபோது அவர் குரல் தளர்ந்தது.
மேலும், "இன்று நான் என் அம்மாவையும் ராதிகாவையும் ஒரே மேடையில் பார்க்கிறேன் என்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். எனக்கு இப்போது 40 வயது. ஆனால் அப்பாவும் ராதிகாவும் திருமணம் செய்து கொண்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட என் வாழ்க்கையின் பாதி காலம் அவர்களுடன் தான் சென்றுள்ளது.
கண் கலங்கிய வரலட்சுமி
அந்த காலத்தில் நீங்கள் இருவரும் எனக்கு பெற்றோராகவே இருந்தீர்கள். எல்லாவற்றிற்கும் நன்றி. நான் அழக்கூடாது என்று நினைத்தேன். ஆனாலும் அழுதுவிட்டேன்," என்று பேசினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் வரலட்சுமியின் அம்மா சாயாவும் கலந்து கொண்டிருந்தார். அவர் பேசும்போது, "ராதிகாவும் சரத்குமாரும் வரலட்சுமிக்கு எப்போதும் பக்கபலமாக இருக்கிறார்கள்" என்று பாராட்டினார். இது குடும்பத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியது.
சரத்குமார் குடும்பம்
Sarathkumar தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்ததோடு அரசியலிலும் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில் நடிகை சாயாவை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு வரலட்சுமி பூஜா என்ற மகள்கள் இருந்தனர். ஆனால் பிறகு சாயாவை விவாகரத்து செய்துவிட்டு 2001ஆம் ஆண்டு ராதிகாவை திருமணம் செய்தார். அதன் பிறகு இந்த குடும்பம் திரையுலகில் ஒரு ஒற்றுமையான குடும்பமாக பார்க்கப்படுகிறது.
ராதிகா பல தசாப்தங்களாக தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நடிகையாய் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வெற்றி கண்டவர். பல ஹிட் சீரியல்களை தயாரித்தவர். குடும்பத்தை சமநிலைப்படுத்தியும் தொழிலையும் கவனித்தும் வருகிறார்.
வரலட்சுமியின் ஆரம்பம்
வரலட்சுமி தனது சினிமா பயணத்தை போடா போடி படத்தின் மூலம் தொடங்கினார். ஆரம்பத்தில் காதல் கதாபாத்திரங்களில் நடித்த அவர், பின்னர் வில்லி மற்றும் வலுவான கேரக்டர் ரோல்களில் தனித்துவமான இடத்தைப் பிடித்தார். தமிழைத் தாண்டி தெலுங்கு சினிமாவிலும் கவனம் பெற்றார். இப்போது இயக்குநராகவும் தன்னை நிரூபிக்க தயாராக இருக்கிறார்.
வரலட்சுமியின் வளர்ச்சி
'சரஸ்வதி' படம் அவருக்கு ஒரு புதிய அத்தியாயம். நடிகையாக வெற்றி கண்டவர், தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் எப்படிப் பதியப் போகிறார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் இந்த படத்தின் ப்ரோமோஷன் மேடையில் நடந்த அந்த உணர்ச்சி தருணம், படத்தை விட அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
ஒரே மேடையில் முன்னாள் மனைவி சாயா, தற்போதைய மனைவி ராதிகா, மகள் வரலட்சுமி ஆகியோர் இருந்த தருணம் பலருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது. சினிமாவைத் தாண்டி குடும்ப பந்தங்கள் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த குடும்பம் ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
-
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்














Click it and Unblock the Notifications