Aranmanai Kili Serial: வாசுகி பாம்பு வரும்போது ஒரு தலைதான் ஆனால்..!
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில், அர்ஜுன் கால் ஒரு விபத்தில் நடக்க முடியாமல் போய்விடுகிறது.பணக்கார தொழிலதிபர் மீனாட்சிம்மா மகன் இந்த அர்ஜுன்.
அர்ஜுனும் இன்ஜினியர் என்பதால், நல்ல மூளைக்காரன். சக்கர நாற்காலியில்தான் வலம் வர முடியும். சுத்தமா இடுப்புக்கு கீழே உணர்ச்சி இருக்காது.
இப்படிப்பட்ட அர்ஜுனை காதலித்தவள் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு வெறுத்துட்டு போயிடறா.. இப்போது அர்ஜுனுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்பது மீனாட்சி அம்மாவின் பிரஸ்டீஜ் விவகாரம்.

வீட்டில் வேலை
உடனே தோட்டத்தில் வேலை செய்பவரின் முதல் பெண் ரேணுவை கல்யாணம் பேசி முடிக்கறாங்க. ஏற்கனவே இஷ்டமில்லாமலிருந்த ரேணு, துர்காவின் துஷ்ட செயல்களால் கல்யாணத்து அன்று ஓடிப்போயிடறா. உடனே ரேணுவின் தங்கை ஜானுவை அர்ஜுனுக்கு கல்யாணம் செய்து வச்சுடறாங்க ஆனால், கல்யாணமான அடுத்த சில நாட்களில் இருவருக்கும் விவாகரத்துக்கு விண்ணப்பிச்சுடறாங்க.

அர்ஜுனுக்கு அபிப்ராயம்
ஜானுவின் மீது அர்ஜுனுக்கு நல்ல அபிப்ராயம் வரும் போது, இவளுக்கு விவாகரத்து கொடுத்துட்டா, இவ வேற யாரையாவது கல்யாணம் செய்துகிட்டு நல்லா இருப்பான்னு அர்ஜுன் நினைக்கிறான். கொஞ்சம் சகஜமா பேசிகிட்டு இருக்கும்போது, அர்ஜுனை நடக்க வைக்க வேண்டும் என்று பல விதங்களில் போராடிகிட்டு இருக்கா.

டெல்லிக்கு போனதும்
மீனாட்சி அம்மா டெல்லிக்கு போனதும், அர்ஜுனை கட்டாயப்படுத்தி, வைத்தியர் குடிலுக்கு அழைச்சுட்டு வந்துடறா.கால் அசைந்தாலும் புருஷனை நடக்க வைக்க முடியும்னு வைத்தியர் சுவாமி சொல்ல, அதே போல ஜானு காலில் ஏதோ செய்ய, விரல்கள் அசையுது.உடனே காலை குணமாக்கி நடக்க வைக்கிறேன்னு சொல்றார்.

பாம்பு வாசுகி
மூலிகை மருந்துன்னு எடுத்து வந்த போதும், அதை மீனாட்சி அம்மா தட்டி விட்டுடறாங்க. கடைசி வைத்தியமாக, நாக தேவர்கள் வாழும் மலைக்கு சென்று வாசுகி பாம்புக்கு பூஜை செய்துட்டு வரணும். பிறகு அஞ்சு தலை வாசுகி பாம்பு நம்ம குடிலுக்கு வந்து அர்ஜுனின் காலலைத் தீண்டி விட்டு போனால் அர்ஜூன் எழுந்து நடந்துருவான்னு சொல்லி அதே போல செய்யறா ஜானு.

வாசுகிப்பாம்பு
மீனாட்சி அம்மா ரூமில் ஜானுவிடம் கத்திக் கொண்டு இருக்க, இங்கு வாசுகி பாம்பு ஒரு தலையுடன்தான் வருது. ஆஸ்ரமத்தில் சுவாமிஜியின் அறையில் தனியாகப் படுக்க வச்சு இருக்கும் அர்ஜுனை நோக்கி அந்த பாம்பு வருது.அவனைப் பார்த்து படம் எடுக்கும்போது அஞ்சு தலை பாம்பா மாறி அவனின் கால்களை பின்னிக் கொள்ளுது.
அவன் பயத்தில் அம்மா அம்மான்னு கத்த, ஓடி வர்றாங்க மீனாட்சி அம்மா. வேலையை முடிச்சுட்டு போன பாம்பு, திரும்பி வந்து மீனாட்சி அம்மாவின் நெத்தியில் கொத்திட்டு போயிருது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications