எல்லாத்தையும் போட்டு மறைச்சிட்டியே சித்ரா.. குமுறும் வெங்கட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லாவற்றையும் உள்ளுக்குள் போட்டு மறைத்து விட்டாயே.. எங்களிடம் சொல்லியிருக்கலாமே. உள்ளுக்குள் கோழையாக இருந்திருக்கிறாயே சித்ரா என்று அவருடன் ஜீவா வேடத்தில் நடித்த வெங்கட் குமுறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்த சித்ராவின் இறப்பு பற்றி பல்வேறு வதந்திகளும் பரவி வந்த நிலையில் தற்போது அவரது கணவரை போலீஸ் கைது செய்துள்ளது.

இந்த நிலையில் அவருடன் ஜீவா கேரக்டரில் நடித்த வெங்கட், சித்ரா தற்கொலை செய்திருப்பது பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கடுமையாக போஸ்ட் போட்டு இருக்கிறார்.

ஏன் இந்த முடிவு

ஏன் இந்த முடிவு

எதற்கு இப்படி ஒரு முடிவு எடுத்தே சித்ரா. உன்னோட கஷ்டத்தை நீ எங்க கிட்ட ஷேர் பண்ணி இருக்கலாம். எல்லாருமே எவ்வளவு கஷ்டத்தில் இருந்து தான் வெளியில் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நீ எதையுமே எங்களிடம் ஷேர் பண்ணாமல் இருந்து விட்டாயே. உன் எங்கேஜ்மெண்ட்டில் கூட நீ எங்க கிட்ட சொல்லல.

தைரியம் இல்லாத பொண்ணா நீ

தைரியம் இல்லாத பொண்ணா நீ

நாங்க எல்லாருமே உன்னை இப்படிப்பட்டவர் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை .நீ அந்த அளவிற்கு வெளியில் தைரியம் சொல்லி உள்ளுக்குள் கோழையாக இருந்து இருக்கிறாய் என்று கூறியிருக்கிறார் என்று குமுறியுள்ளார் வெங்கட். அதற்கு ரசிகர்கள், சித்ரா கேமராவுக்கு முன்னாடி மட்டும் நடிக்காமல் எப்பவுமே வெளியில் நடித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது எங்களுக்கு யாருக்குமே தெரியாமலேயே போய்விட்டது என்று கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள்.

இது தீர்வு அல்ல

இது தீர்வு அல்ல

எந்தப் பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வு கிடையாது என்று சொன்ன நீயா இந்த மாதிரி பண்ணி இருக்கிறாய் என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எப்போதுமே சந்தோஷத்தை வெளியே காட்டிவிட்டு உள்ளுக்குள் இவ்வளவு கஷ்டத்தையும் அனுபவித்து வந்திருக்கிறார். உனக்கு பிடிக்காத வாழ்க்கை என்றால் அதிலிருந்து நீ வெளியில் வந்து இருக்கலாம் .அதற்கு இந்த ஒரு தண்டனை பதில் கிடையாது.

இதெல்லாம் புதுசா

இதெல்லாம் புதுசா

மீடியா பீல்டில் இருக்கும் அதிகமானவர்கள் ஃபேஸ் பண்ணும் ப்ராபளம் தான் இது .அது உனக்கு மட்டும் புதிதானது அல்ல. அதில் இருந்து வெளியே வந்து இருக்க வேண்டுமே தவிர இப்படி ஒரே அடியாக முடங்கிப்போய் இருக்கக்கூடாது. எல்லோருக்குமே ஆறுதல் கூறிய சித்ரா இந்த மாதிரி செய்வார் என்று எதிர்பார்க்காத நிலையில் சித்ராவை பற்றி ஹேமந்த் தற்போது வெளியிட்ட செய்தியை கேட்டதும் அதிர்ச்சியில் வெங்கட் இந்த மாதிரி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார்.

கவலையில் வெங்கட்

கவலையில் வெங்கட்

ஏற்கனவே சித்ரா இதற்கு முன்பு ஒரு முறை தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்னும் செய்தியை ஹேமந்த் கூறியதாக காவல்துறையினர் வெளியிட்டிருக்கிறார்கள். இதனை கேள்விப்பட்ட அந்த சீரியலில் அவர் கூட நடித்த வெங்கட் தான் தற்போது தன்னுடைய மனக்கவலைகளை ஸ்டேட்டஸ்சாக இன்ஸ்டாகிராமில் போட்டு இருக்கிறார் .

இந்த தண்டனை ஏன்

இந்த தண்டனை ஏன்

அப்படி ஒரு வாழ்க்கை வேண்டாம் என்று நீ நினைத்து இருந்தால் அந்த வாழ்க்கையை விட்டு நீ வெளியே வந்து இருக்கலாம் அதற்காக உன் வாழ்க்கையை முடித்து இருக்க வேண்டாம் .நீ அப்படி வெளியே வந்து இருந்தால் இது உன்னை மட்டும் அல்லாமல் உன்னுடைய குடும்பத்தையும் ரசிகர்களையும் இந்த அளவிற்கு கஷ்டத்தில் ஆழ்த்தி இருக்காது.

இதற்காகவா கஷ்டப்பட்டே

இதற்காகவா கஷ்டப்பட்டே

இப்படி பாதியிலே போவதற்காக நாம் இந்த அளவிற்கு கஷ்டப்பட்டோம் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்து விட்டு திடீரென்று இப்படி ஒரு முடிவை எதற்காக எடுத்தாய் என்று திட்டி ஸ்டேட்டஸ் போட்டு இருக்கிறார் .இதைப் பார்த்த அவருடைய ரசிகர்களும் ஆமாம் அண்ணா சித்ரா அக்கா இப்படி எல்லாம் பண்ணி இருக்க கூடாது அவருடைய தேர்வு சரியில்லை என்றால் அதிலிருந்து வெளியே வந்து இருந்தா நாமெல்லாம் ஆறுதலாக இருந்திருக்கும் என்று வெங்கட்டுக்கு ஆறுதலை கூறி வருகிறார்கள்.

தவற விட்டுட்டியே

தவற விட்டுட்டியே

இந்த மாதிரி உனது 28 வருட வாழ்க்கையை முடித்து இருக்க வேண்டாம். இந்த சின்ன வயதிலேயே உன் வாழ்க்கையை முடித்து விட்டு போவதற்கா நீ இவ்வளவு கஷ்டப்பட்டு மேலே வந்து இருக்கிறாய் என்றும் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சித்ரா இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததும் வெங்கட்டிடம் நமக்கு நல்ல ஒரு பிளாட்பாரம் கிடைத்திருக்கிறது. இதை பிடிச்சுகிட்டு அழகா முன்னேறி மேல வந்துரு.

நீ போய் விட்டாயே

நீ போய் விட்டாயே

எந்த காலத்திலும் நாம் இத தவற விட்டு விடவே கூடாது. கிடைக்கிற வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று இவருக்கு கூறியிருக்கிறார் .அந்த வார்த்தை இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது .எனக்கு இந்த மாதிரி சொல்லிக்கிட்டு உனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை இப்படி தட்டி விட்டு சென்று விட்டார் என்றுதான் பெரும் வருத்தத்தில் போஸ்ட் போட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+