செந்தாமரையின் மகள் பூரிப்பு.. 2 பிரபல தூண்கள்? கூண்டைவிட்டு வெளியேறி.. நெகிழ்ந்த மனைவி நடிகை கௌசல்யா
சென்னை: பழம்பெரும் நடிகர் செந்தாமரையின் மகள் மற்றும் மனைவி இருவரும் ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்கள்.. அந்த பேட்டியில் செந்தாமரையின் குணநலன்கள், மற்றும் அவரது உயர்வான பண்புகள் குறித்து பேசியிருக்கிறார்கள். இந்த பேட்டி இணையத்திலும் வைரலாகி வருகிறது.
சேனலுக்கு தந்துள்ள பேட்டியில், "தன்னை இன்னாருடைய மகள் என்று சொல்வதைகூட என் அப்பா விரும்பமாட்டார். என் அப்பா மிகப்பெரிய லெஜண்ட்.. சினிமாவில் அவருக்கு தெரியாத விஷயமே கிடையாது.. இணைந்து நடிக்காத பிரபலங்களே கிடையாது. ஆனாலும், "லெஜண்ட்ரி" என்ற வார்த்தைக்கேற்றவாறு, வாழ்க்கையிலும் நடந்து கொண்டவர்.

எத்தனையோ பிரபலங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.. மிகப்பெரிய பிரபலங்களிடம் பேசக்கூட முடியாது என்று சொல்பவர்களிடம்கூட, அப்பா மிக சாதாரணமாக பழகுவார். தன்னை பற்றி எப்போதுமே வெளியில் சொல்லிக் கொள்ள மாட்டார். நாங்கள் வெளியில் அவரை பற்றி சொல்வதையும் விரும்ப மாட்டார்.
இதுதான் அவார்டு: விருதுகளில் பெரிதாக ஆர்வம் இல்லாதவர். மேடையில் தான் நிற்கும்போது, மக்கள் கைதட்டுவதையே தனக்குரிய மிகப்பெரிய அவார்டாக நினைத்தவர்.. வில்லனாக நடிப்பதால் பலரும் திட்டுகிறார்கள் என்று நான் சொன்னாலும், "அப்படி ரசிகர்கள் திட்டுவதுதான் எனக்கு அவார்டுதான்..ம்மா" என்பார்.
அதுமட்டுமலல, அப்பாவை பற்றி தவறாக யாரும் பேசிவிடக்கூடாது என்று நான் நினைப்பேன்.. அவரை பற்றி எதுவுமே தெரியாமல் தவறாக பேசும்போது, எனக்கு நிச்சயம் கோபம் வரும். அதனால்தான் பேட்டிகளை நான் தருவதில்லை. காரணம்.
எனக்கு நண்பர்: நானும் அப்பாவும் நண்பர்களாக பழகுவோம். நான் ஸ்கூல் முடிந்து வரும்போதே, வீட்டு வாசலில் எனக்காக காத்திருப்பார். அவருடன் சேர்ந்துதான் சாப்பிடுவேன். அன்றைய தினம் ஸ்கூலில் நடந்த விஷயத்தை நான் அப்பாவிடமும், ஷூட்டிங்கில் நடந்ததை அப்பா என்னிடமும் சொல்வார்" என்றெல்லாம் பூரித்து சொல்கிறார் செந்தாமரையின் மகள்.
அதேபோல, செந்தாமரையின் மனைவியும் பிரபல நடிகையுமான கௌசல்யா செந்தாமரை கூறும்போது, "அவரை பற்றின கிசுகிசு பற்றியெல்லாம் கவலைப்பட்டதில்லை.. காரணம், என் கணவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும்.. அவரை எப்படி சந்தேகப்பட முடியும்? எது நடந்தாலும் வீட்டில் வந்து அப்படியே என்னிடம் சொல்லிடுவார்.. மிகவும் வெளிப்படையானவர்.. ஆனால், தன்மானம் மட்டும் பாதிக்கக்கூடாது என்று நினைப்பவர்.. சுயமரியாதை முக்கியம் என்பார்.. இதற்காக பல எதிர்ப்புகளை சந்தித்தார்..
2 தூண்கள்: அப்படி அவருக்கு தொந்தரவு தந்தவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள். அவர்கள் இறந்துவிட்டதால், அவர்களை பற்றி இப்போது சொல்வதில் பிரயோஜனம் இல்லை. ஆனால், சினிமா உலகில் என் கணவரை, நிறைய பேர் பின்னுக்கு தள்ளியிருக்கிறார்கள்.. குறிப்பாக அந்தக்காலத்தில் 2 பிரபலமான தூண்களை சொல்லலாம். இவர்கள் இருவருமே சினிமாவில் அன்று ஜாம்பவான்கள்.
இவர்களின் கூட்டுக்குள்ளிருந்தவரை, என் கணவரால் வெளியே வரமுடியவில்லை. அவரது நடிப்புத் திறமைக்கேற்ற கேரக்டர்களும் கிடைக்கவிடாமல் தடுத்தனர்.. போதுமான அங்கீகாரமும் கிடைக்கவில்லை. பிறகுதான், அவர்களின் கூட்டைவிட்டு வெளியே உடைத்து கொண்டு வந்தார்... அதற்கு பிறகுதான் நிறைய படங்களில் நடித்தார்..
துணிச்சல்: அவர்களை அன்று எதிர்த்ததுதான் என் கணவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாகிவிட்டது. சாவு ஒருமுறைதானே வரும்? என்ன பண்ணட்டுமா பண்ணிட்டு போகட்டும் என்று அனைத்தையும் எதிர்கொண்டார். அதற்காக யாரையுமே கெஞ்சி வாய்ப்பு கேட்கவில்லை.. ஆனால், அவர்கள் 2 பேருமே என் வீட்டுக்காரருக்கு கடைசிவரை எதையுமே செய்யவில்லை" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications