தண்டட்டி காது.. விஜய், சிவகார்த்திகேயன் படங்களில் நடித்த மூதாட்டி பெருமாயி காலமானார்!
மதுரை: பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள மூதாட்டி பெருமாயி காலமானார். பாரதிராஜாவின் தெக்கத்தி பொண்ணு சீரியல் மூலம் பிரபலமானவர் பெருமாயி. விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் படங்களில் நடித்துள்ளார் பெருமாயி. இந்நிலையில் அவர் மாரடைப்பால் காலமாகியுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் மூதாட்டி பெருமாயி. 73 வயதான இவர் இயக்குநர் பாரதிராஜா இயக்கிய தெக்கத்தி பொண்ணு சீரியல் மூலம் பிரபலமானவர். தண்டட்டி அணிந்த காதுடன் இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கிராமத்து கதைக் களங்களில் பாட்டி வேடத்துக்கு பொருத்தமாக வாழ்ந்தவர் பெருமாயி.

விஜய் நடித்த வில்லு, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் பெருமாயி. பல முன்னணி நடிகர்களுடன் 30க்கும் மேற்பட்ட கிராமப்புற களம் சார்ந்த திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இறுதியாக நடிகர் பசுபதியின் தண்டட்டி படத்தில் நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, உடல்நலக் குறைவு காரணமாக சமீபகாலமாக அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெருமாயி பாட்டிக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications