விடாமுயற்சிக்கு விடாமல் எதிர்ப்பு! மாணிக்கமாக இருந்த அஜித் , பாட்ஷாவாக மாறாதது ஏன்?
சென்னை: விடாமுயற்சி படத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது தெரியுமா? அஜித் - த்ரிஷா ஜோடி நடிப்பில் ஒரு துடிப்பே இல்லாமல் இருக்கிறது.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: விடாமுயற்சி' அப்படி ஒன்றும் கொடுமையாக இல்லை. ஆனந்த் பாபு நடனம் ஆடுபவர் என்பதாலும், கமல் நன்றாக நடனம் ஆடுவார் என்பதாலும் அதை மையப்படுத்தி உள்ள கதைகளை தமிழ் திரையுலகம் எடுத்து வந்தது ஒரு காலத்தில்.'

சுதா சந்திரன் நடனப் பெண்மணி என்பதால் மயூரி எனப் படமெடுத்தார்கள். அஸ்வினி நாச்சப்பா ஓட்டப் பந்தய வீராங்கனை என்பதால் அஸ்வினி என்கிற படமெடுத்தார் மௌலி. அப்படி அஜித் கார் ரேஸர் என்பதால் கார் கதைகளாக எடுக்கிறார்களோ எனத் தோன்றுகிறது.
கபாலி படத்தில் ரஜினி தன் மனைவியை தேடுவதும், வேட்டையாடு விளையாடு கமல் ஜோதிகாவை தேடுவதும் ஏனோ நினைவுக்கு வந்தது. படத்தின் நாயகன் அஜித். பல வயது வித்தியாசங்களில் வருகிறார். ஆனால் த்ரிஷா மட்டும் மாற்றமே இல்லாமல் இருக்கிறார். பொதுவாக அஜித்-த்ரிஷா ஜோடி தமிழ் ரசிகர்கள் ரசிக்காத ஜோடி.
நாயகியாக வேறு யாரையாவது வைத்திருந்தால் படத்துக்கு வேறொரு வாசம் வந்திருக்கும். அஜித் மாணிக்கமாக படத்தில் வருகிறார். பாட்சாவாக மாறுவார்..மாறுவார் என ரசிகர்கள் க்ளைமேக்ஸ் வரை காத்திருந்தது அவர்களுக்கு எரிச்சலை தந்திருக்கிறது.
அஜித்தை ஏதாவது ஒரு பலகீனமாகவோ அல்லது ஒரு கால் முடியாதவராகவோ காட்டி இருந்தால் தொடக்கம் முதலே ஆடியன்ஸ் கன்வின்ஸ்டாகி படத்தை பார்ப்பார்கள். இந்த அளவு எதிர் கமெண்ட்டுகள் இருந்திருக்காது. அப்போது இந்த சண்டைகளின் அளவீடும் ரசித்து ஏற்றுக்கொள்ளப்படும்.
அஜித்-த்ரிஷா காதல் Flashback காட்சிகளில் பெரிய அழுத்தம் இல்லை. அவர்கள் Arranged marriage ஜோடியாக காட்டி இருந்தாலும் கதைக்கு பாதிப்பில்லை. 'நம்ம நாட்டிலேயே எடுத்திருக்கலாமே' என சிலர் சொல்லி இருந்தார்கள். .அஜர்பைஜான் தான் இந்தப் படத்தினை வேறொரு தளத்துக்கும், அமானுஷ்யத்துக்கும் நம்மை இட்டுச்செல்கிறது.
ஆனால் புதிதாக சுற்றுலா வந்தவர்கள் போல் நடந்து கொள்வது ஏன் அஜித் சார்... அங்கேயே வேலை செய்யும் ஆள் போலவே நடவடிக்கைகள் இல்லையே. படத்தில் ஆச்சர்யம் அர்ஜுன்- ரெஜினா ஜோடி. அவர்கள் காதலில் சொன்ன அழுத்தம் கூட அஜித் - த்ரிஷா காதலில் இல்லை. ரெஜினா வளவள பேச்சு கொஞ்சம் சோதிக்கிறது.
முகத்தை மாற்றி பின் விற்பனை செய்வதாக சொல்வது கையை காலிடுக்கில் விட்டு காதை தொடுவது போலிருக்கிறது. இன்னும் வேறு காரணங்களை சொல்லி இருக்கலாம். ரெஜினாவின் முகம் மாறும் போதும் அர்ஜுன் காதலிப்பதாக கூறும் போது அர்ஜுனின் காதல் அழகாகிறது.
ஆனாலும் படம் ரசிக்கத்தக்கதாகவே இருந்தது. அஜித் மட்டுமே படத்தை தாங்குகிறார். அதை நினைத்து இன்னும் அவர் பாத்திரத்தை வலுவாக்கி இருக்கலாம். த்ரிஷாவை இனியாவது விடுங்கய்யா... பிரியாணியாகவே இருந்தாலும் தினமும் என்றால் திகட்டி விடும்...
கிழவன்- பாட்டி வீட்டு காட்சிகள் படத்தில் தேவையில்லாததாக தோன்றியது. வங்கியில் பணம் எடுக்கும் காட்சிகளும் தேவையற்ற குப்பை சஸ்பென்ஸ்கள். அனிருத் இசையும், ஓம் பிரகாஷ் கேமிராவும் படத்தை ரசிக்க வைக்கின்றன. அவ்வளவு மோசமில்லை... ஆனால் எல்லாக் காட்சிகளுமே வேறு படங்களில் பார்த்து விட்டோமே மகிழ்.... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications