அப்படி போய் இப்படி வந்த சிவாங்கி..ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சென்னை : அடடா நொடிப்பொழுதில் ஆளே மாறி, வேற கெட்டப்பில் களம் இறங்கிய சிவாங்கியை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் 'வாவ்' கொட்டி வருகின்றனர்.
இப்படியும் அப்படியுமாக இவர் ஆடிய ஆட்டத்தை பார்த்து சிலிர்த்து போன ரசிகர்களால் கமெண்டுகளில் கவிதைகள் உருப்பெறுகிறது.
எப்படியோ ஒரு சில நாட்களுக்கு பிறகு மீண்டும் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிவாங்கியை பார்த்ததும் மனசு துள்ளுகிறது என்று இவருடைய ரசிகர்கள் வரிசைகட்டி ஓடி வருகின்றனர்.

என்ன மேஜிக்லாம் பண்றீங்க
அழகு ஆர்ப்பரிக்க அடக்க ஒடுக்கமாக சிவாங்கியின் கியூட்னெஸ் சிரித்துக் கொண்டிருக்க ரீல்ஸ்ஸ் வீடியோவை வெளியிட்டு கலக்கிவிட்டார். இவருடைய லேட்டஸ்ட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கின்றனர். இவருக்குள் இப்படி ஒரு திறமையா என்று சொல்கிற மாதிரி மேஜிக் செய்வது போலவே தன்னுடைய ரீல்ஸ் வீடியோவில் டக்கென்று உடையை மாற்றி கிக் ஏற்றிவிட்டார். அவருடைய லேட்டஸ்ட் தரிசனத்தை பார்த்த ரசிகர்கள் பலர் நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறீர்களா என்று சந்தேகத்தை கேட்டு வருகின்றனர். சும்மாவே இவருடைய ஒரு போஸ்டுக்கு கமெண்டுகள் ஆயிரங்களை தாண்டி நொடிபொழுதில் ஏறி விடுவதுபோல இந்த போஸ்ட்க்கும் மளமளவென கமெண்டுகள் உயர்கிறது.

வளர்ந்த குழந்தை சிவாங்கி
விஜய் டிவியில் ஒரு பாடகராக அறிமுகமாகி தன்னுடைய க்யூட்டான காமெடியால் ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்ட சிவாங்கியை அவருடைய ரசிகர்கள் ரொம்பவே மிஸ் பண்ணி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கண்டஸ்டன்களில் ஒரு சில ரசிகர்களின் மனதில் ஆழ்ந்த இடத்தை பிடித்து விட்டனர். அதில் சிவாங்கியும் ஒருவர். தன்னுடைய டைமிங் காமெடியும் குழந்தைத்தனமான செய்கைகளாலும் அனைவருக்கும் சுட்டிக் குழந்தையாக தான் தெரிந்து கொண்டிருக்கிறார். இவர் கல்லூரியை முடித்துக்கொண்ட பருவப் பெண்ணாக இருந்தாலும் இவருடைய கேரக்டரை பார்த்து பலர் கொஞ்சி வருகின்றனர்.

அடடா என்ன ஒரு ஆட்டம்
ரசிகர்களின் மனதில் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்துவிட்ட சிவாங்கிக்கு தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது. இவருடைய குரலுக்கும் பாட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று இதுவரை பலர் கலாய்த்து வந்திருந்தாலும், தற்போது தன்னுடைய குறைகளெல்லாம் குறைகூறிக் கொண்டிருப்பவர்களை கண்டுகொள்ளாமல் முன்னேறிக் கொண்டிருக்கும் இவருடைய தைரியம் வேற லெவல் தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி விட்டாலும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக தான் இருந்துவருகிறார். தன் ரசிகர்களிடம் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் லைவில் பேசி வருவது இவருக்கு பெரிய பொழுது போக்கு தான். அது மட்டுமல்லாமல் இவரை மிஸ் பண்ணும் ரசிகர்களுக்கும் இவரை இப்படி பார்க்கும் போது ஆறுதலாக இருக்கிறதாம்.

வருவாரா? மாட்டாரா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் அஸ்வினுடன் செய்யும் காமெடியாக இருந்தாலும் சரி புகழுடன் செய்யும் அண்ணன் தங்கச்சி பாச சேட்டைகளாக இருந்தாலும் சரி ரசிகர்கள் இவரை ரசித்துக் கொண்டே இருக்கின்றனர். தற்போது இவர் வெள்ளித்திரைக்கு போனாலும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஆனால் மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு வருகின்றனர். ரசிகர்களின ஆசை நிறைவேறுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும். ஆனால் தற்போது இவருடைய லேட்டஸ்ட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படியே அடிக்கடி ரீல்ஸ் போட்டுக் கொண்டே இருங்கள் அதுவும் இந்த பிளாக் அண்ட் ஒயிட் டிரஸ் மனதை கொள்ளை கொள்ளுகிறது. அப்படியே இதில் ஒரு சில ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து போடுங்க என்று அன்பு கட்டளை இடுகின்றனர்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications