வாய்ப்புக்காக போன இடத்தில் அசிங்கப்படுத்திய வித்தியாசாகர்.. "அந்த” பாடலால் பதிலடி கொடுத்த யுகபாரதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய ஆக்சன் ட்ரீட்டாக அமைந்த படம் "ரன்" அதுவரை சாக்லேட் பாயாக இருந்த மாதவனை வேறொரு பரிமாணத்தில் ஆக்சன் அவதாரம் எடுக்க வைத்திருந்தார் இயக்குனர் லிங்குசாமி.

வித்தியாசாகர் இசையமைப்பில் படத்தின் அத்தனை பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து இருந்தது. ரன் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த "காதல் பிசாசு" என்ற பாடல் 90ஸ் கிட்ஸ்களின் ப்ளே லிஸ்ட் களில் கண்டிப்பாக இருக்கும் பாடல் ஆகும்.

Vidhyakar Humiliated Yuga Bharthi in run movie song

இந்தப் பாடல் வந்த சமயத்தில் உதித் நாராயணனின் பாடல் உச்சரிப்பு விதத்திற்காகவும் கவிஞர் யுகபாரதியின் வித்தியாசமான பாடல் வரிகளுக்காகவும் கொண்டாடப்பட்டது. இந்தப் பாடல் உருவான விதம் குறித்து கவிஞர் யுகபாரதி சமீபத்தில் சுவாரசியமாக பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து கவிஞர் யுகபாரதி கூறியுள்ளதாவது..."இயக்குனர் லிங்குசாமியின் முதல் படமான ஆனந்தம் திரைப்படத்தில் நான் எழுதியிருந்த பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடல் மிகப் பெரிய ஹிட் ஆகி பல விருதுகளையும் வாங்கி இருந்தது. அதனால் தன்னுடைய இரண்டாவது படத்திலும் நான் பாடல் எழுதினால் நன்றாக இருக்கும் என சென்டிமெண்டாக நினைத்து ரன் பட இசையமைப்பாளர் வித்தியாசரிடம் அழைத்துச் சென்று என்னை அறிமுகப்படுத்தினார்.

என்னை பற்றி வித்தியாசகரிடம் கூறும் பொழுது இவர்தான் என்னுடைய முந்தைய படத்தில் பல்லாங்குழி வட்டம் பார்த்தேன் என்ற பாடலை எழுதிய கவிஞர் என்று லிங்குசாமி கூறினார். அதைக் கேட்ட வித்தியாசாகர் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்... ஒற்றை நாணயமா..!!? என்னையா பாட்டு இது உவமையே சரியில்லையே என்று கிண்டலாக கூறினார்.

வித்தியாசாகரின் கிண்டல் பேச்சை கேட்டு சற்று உணர்ச்சிவசப்பட்ட நான் என்ன சார்?..நிலா போன்ற முகம் தாமரைப் போன்ற முகம்...என்று உவமையாக கூறுகிறோம். அதற்காக தாமரை போலவா முகம் இருக்கிறது என்று சூடாக கேள்வி கேட்டேன். என் கேள்வியை கேட்டு சற்று டென்ஷனான வித்தியாசாகர் லிங்குசாமியிடம் இவர்தான் கண்டிப்பாக பாடல் எழுத வேண்டுமா..!?என்று கேட்டுக்கொண்டே பாடலுக்கான சுச்சுவேஷனை கூறினார்.

காதல் கடிதம் எழுதுவது போல் பாடலாக இருக்க வேண்டும் ஆனால் வழக்கமான கடிதத்தில் வரும் வார்த்தைகள் எதுவும் இருக்கக் கூடாது என்று சொன்னார். இதைக் கேட்ட நான் வேண்டுமென்றே இப்படி ஒரு சிச்சுவேஷனை கூறி வித்யாசாகர் என்னை புறக்கணிக்க முடிவு செய்துவிட்டார் என்று நானும் கோபித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பி வந்து விட்டேன்.

அன்று இரவே எனக்கு போன் செய்த லிங்குசாமி யுகபாரதி நீங்கள் கோபித்துக் கொண்டதில் தவறில்லை ஆனால் அதற்காக படத்திற்கு பாடல்களை எழுதாமல் மட்டும் இருந்து விடாதீர்கள்.பாடல்களை எழுதிக் கொண்டு வாருங்கள் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.இசையமைப்பாளருக்கு நான் பாடல் எழுவதில் விருப்பமில்லை ஆனால் லிங்குசாமியும் என்னை விடுவதாக இல்லை என்ன செய்வது என்ற மன குழப்பத்தில் சித்தர் பாடல்களை எடுத்து படித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது சித்தர் பாடல் வரிகளில் 'பெண் என்னும் மாய பிசாசு மனதை ஆட்கொண்டால்' என்ற வரியை படிக்கும் பொழுது எனக்குள் உதித்த கவிதையின் வெளிப்பாடு தான் காதல் பிசாசு என்ற வார்த்தை.பாடலின் முதல் வரியை எழுதி விட்ட பின்பு அடுத்த வரிக்காக யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது என் நண்பனிடம் இருந்து போன் வந்தது.

Vidhyakar Humiliated Yuga Bharthi in run movie song

மறுமுனையில் பேசிய அவன் என்ன நண்பா..!! எப்படி இருக்கிறாய்..? என கேட்டான் குழப்பம் கலந்த கோபத்தில் இருந்த நான் ஏதோ இருக்கிறேன் என்று சொல்ல மறுமுனையில் பேசிய எனது நண்பன் டென்ஷனாகி என்னப்பா ஒரு கவிஞன் நீ இப்படி நெகட்டிவாக பேசலாமா என செல்லமாக முறைத்துக் கொண்டான். அப்பொழுது எனக்குத் தோன்றிய வார்த்தை தான் நலம் நலமா என்ற வார்த்தையை தாண்டி இருக்கும் ஏதோ சௌக்கியம் பரவாயில்ல என்ற மற்றொரு வார்த்தை.ஒரு வழியாக வித்தியாசகரை திட்டிக்கொண்டே பாடலை முடித்து மறுநாள் அவரிடம் சென்று காண்பித்தேன்.

பாடலைப் படித்துப் பார்த்த வித்தியாசாகர் என்னை கட்டி அணைத்து இனி நான் இசையமைக்கும் அத்தனை படங்களுக்கும் நீ பாடல் எழுதுவாய் என கூறினார். அதுபோல் தற்போது வரை வித்தியாசாகர் இசையில் 300 பாடல்களை நான் எழுதியிருக்கிறேன்"... என்று காதல் பிசாசு பாடல் உருவான விதத்தை குறித்தும் அதனால் தனக்கும் வித்தியாசாகருக்கும் ஏற்பட்ட நட்பு குறித்தும் சுவாரசியமாக கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+