வெற்றிமாறனுக்கு ஒரு கேள்வி.. விடுதலை 2-ன் முந்திரிக்காட்டு ஹீரோக்கள்.. மிஸ்ஸான வரலாறு: பிரபலம் நறுக்
சென்னை: எத்தனையோ ரத்தம் சிந்தக்கூடிய பல வரலாறுகள் தமிழரசனுக்கு இருக்கின்றன. அவைகளில் ஏதாவது ஒரு சீனை வைத்திருந்தால்தானே அது விடுதலை 2 படம்?" ஏன்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
BBTCinema யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "விடுதலை 1 பணத்தில், முழுமையாக கலியபெருமாள், தமிழரசன் இருவருமே முந்திரிக்காட்டு ஹீரோக்கள்.. இருவரின் வரலாறையுமே முழுமையாக பதிவு செய்யவில்லை வெற்றிமாறன்.

கமர்ஷியல்: கமர்ஷியலாக பல விஷயங்களை மறைத்துவிட்டார். வெற்றிமாறன் ஒரு சினிமாக்காரராக இருக்கிறாரே தவிர, ஆவணப்பட சத்யஜித்ரேவாக இல்லை. விடுதலை 1-ல் ரயில் கவிழ்ப்பில், குற்றவாளி, காவல்துறைதான்.. ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ரயில் தண்டவாளம் தகர்க்கப்படும் என்று முதல்நாளே போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டார்கள். அப்படியானால் ரயிலை முன்கூட்டியே நிறுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், இந்த இயக்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு வரவேண்டும், இந்த இயக்கத்தை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக, தண்டவாளம் கழட்டிவிடப்பட்ட து என்ற தகவலை ஸ்டேஷன் மாஸ்டரிடம் தமிழ்நாடு விடுதலை படை குழுவினர் சொல்லிவிட்டார்கள்.. அப்படி சொல்லியும்கூட, கழட்டிவிடப்பட்ட தண்டவாளத்தில் புகைவண்டியை ஓட்டிய குற்றவாளி யார்? காவல்துறைதான்.
விடுதலை 1 : அந்த படத்தில் ரயில்வே பில்லரில் அந்த போஸ்டரும் ஒட்டப்பட்டிருக்கும். தண்டவாளத்தை கழட்டிவிட்டோம், ரயிலை நிறுத்திடுங்க என்பதுதான் செய்தி. அப்படியிருந்தும் ரயிலை இயக்கிய குற்றவாளிகள் காவல்துறையும், ரயில்வே துறையும்தான். இதை விடுதலை 1 பதிவு செய்யப்படவே இல்லை. முழுக்க முழுக்க விடுதலை 1 என்பது, பல விஷயங்களை அழுத்தமாக பதிவு செய்யப்படாத ஒன்று.. படம் ஓடணும், புரடியூசருக்கு பணம் வரணும்.
பல வெற்றிமாறன்கள் இங்கே இருந்தும், பல ரஞ்சித்கள் இருந்தும், பலமாரி செல்வராஜ் இருந்தும் ஒரு சத்யஜித்ரே எங்கே? அரசையும், காவல்துறையின் போக்கையும் கண்டிக்கும் படங்களை யாரும் எடுக்கவில்லையே.. இதற்கு தயாரிப்பாளர்கள் அனுமதி தரவில்லையா? அல்லது இதுதான் இவர்களது ஒரிஜினல் சிந்தனையா?
காவல்துறை தொடர்ந்து பல வருடங்கள் தேடப்பட்ட குற்றவாளிதான் தமிழரசன். அப்படிப்பட்ட தமிழரசனை கொன்றுவிடும்படி, தாயிடம் விஷத்தை தந்துவிட்டு போகிறது காவல்துறை.
தமிழரசன்: அந்த தாய் விஷத்தை தரவில்லை.. 2 நாள் தங்கியிருந்துவிட்டு தமிழரசன் கிளம்பி போய்விட்டார்.. அதற்கு பிறகு போலீஸ் அந்த தாயை அழைத்து செல்கிறது. ஏன் தமிழரசனுக்கு விஷத்தை தரல? என்று கேட்டு, கையை நீட்ட சொல்லி, ரூல் தடியை கொண்டு அந்த வயசான பாட்டியை அடிக்கிறார் ஒரு டிஎஸ்பி. கையெல்லாம் ரத்தம் வடியுது.. பெத்த பிள்ளை எப்படி விஷம்தருவாள் என்று கேட்கிறாள் அந்த தாய். இப்படியொரு சீன் வெக்க இருக்குமா? நான் வெற்றிமாறனை பார்த்து இந்த கேள்வியை கேட்கிறேன்.
மனிதமே இல்லாத மரத்து போன மனிதன் தேவாரம், நக்சர்பாரிகள் என்று நரவேட்டையாடினார். ஒரு வழக்குகூட பதியவில்லை. வழக்கை பதிய ஒருத்தருக்கும் தெம்பு திராணி இல்லை. தமிழரசனின் தாயார் மரணத்துக்கு நானும் போயிருந்தேன். பல்லாயிரக்கணக்கானோர் வந்திருந்தாங்க.. மகனை தேடிப்போகும் போலீஸ்காரர்கள் எல்லாருமே அந்தம்மாவை அடிப்பாங்க..
கேள்வி: இப்படியெல்லாம் ரத்தம் சிந்தக்கூடிய பல வரலாறுகள் இருக்கு.. அப்படி ஏதாவது ஒரு சீன் வெச்சிருந்தா தானே அது விடுதலை படம்?" என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications