“கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை” ஆக்ரோஷமாக பாடிய பாடகர்.. கண்கலங்கி அழுத வித்யாசாகர், சரிகமபவில் நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் வித்தியாசாகர் ஸ்பெஷல் ரவுண்டு நடைபெறுகிறது. அதில் வித்தியாசாகர் பாடல்களுக்கு போட்டியாளர்கள் பாடுகின்றனர். அப்போது அருண் என்ற போட்டியாளர் பாடிய பாடலை கேட்டு வித்யாசாகர் கண்கலங்கி அழுது இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜீ தமிழில் சரிகம நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சரிகமப சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் சமீபத்தில் தான் ஜூனியர்களுக்கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக திவினேஷ் வெற்றி பெற்றிருந்தார்.

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 முடிவடைந்த அடுத்த வாரமே சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு அதிகமான வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்த சீசனில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் தங்களுடைய திறமையால் அனைவரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இநத வாரம் மெலோடி கிங் வித்தியாசாகர் ரவுண்டு நடந்துள்ளது. அதில் இந்த வாரம் வித்யாசாகரும் அவருடைய மனைவி மற்றும் மகனும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.
அதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய பாடலை பாடும் போதெல்லாம் அந்த பாடலுக்கு பின்னால் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து வித்யாசாகர் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது அருண் பாடிய பாடலைக் கேட்டு கண்கலங்கி அழுது இருக்கிறார். "புத்தம் புது பாட்டெடுத்தேன் தாண்டவன்கோனே" என்ற பாடலை அருண் பாடி இருந்தார். பாடலின் கடைசியில் ஒட்டுமொத்த அரங்கத்தினரும் எழுந்து நின்று அருணுக்கு பாராட்டு தெரிவித்து இருந்தனர்.
அந்த பாடலை அருண் பாடுவதை கேட்கும் அனைவருடைய மனதிலும் ஒருவிதமான வலியும் வேதனையும் ஏற்பட்டது. இதனை நேரடியாக பார்த்த வித்யாசாகர் ஒரு இடத்தில் தன்னையும் மீறி கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் தன்னுடைய மனைவி மற்றும் மகனோடு அந்த நிகழ்ச்சியில் சந்தோஷமாக கலந்து கொண்ட வித்யாசாகர் இந்த பாடலை கேட்டதும் கதறி அழுதிருக்கிறார்.
இதை பாடலைக் கேட்கும் ரசிகர்களும் எங்களுக்குள் ஒரு விதமான உணர்வு ஏற்படுகிறது, பாட்டை கேட்கும் போது கண்ணீர் வருகிறது என்றும் சிலர் கூறியிருக்கிறார்கள். ஒரு சிலர் பாடுவதை கேட்கும் போது புல்லரிக்கிறது என்று கூறியிருக்கிறார். சிலர் அருண் உடைய குரல் அருமையாக இருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் ஒவ்வொரு வாரமும் அருண் அவருடைய வித்தியாசமான பாடலை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அருளுடைய பாடலுக்கு வித்யாசாகர் அழுததை பார்த்து இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் ஸ்வேதா மேனன் ஒரு பாடலை இசை அமைத்தவர் முன்பு அவருடைய பாடலை பாடி அவரையே அழ வைத்தது பாடலுக்கு கிடைத்த வெற்றி என்று நான் சொல்லி இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications