"டேய் தம்பி சொல்றதை கேளு"! விக்னேஷ் சிவனை மிரட்டிய மகன் "உயிர்"! சிரித்த நயன்தாரா! சமத்து "உலகு"!
சென்னை: விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதியின் இரட்டை குழந்தைகளில் ஒருவரான உயிர், காரில் செல்லும் போது தனது தந்தையுடன் வம்பிழுத்துக் கொண்டே செல்லும் காட்சி அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. தந்தையர் தினத்தில் விக்கி சொல்வதையே திருப்பி திருப்பி பேசி அவரை ஒரு வழி செய்துவிட்டான் உயிர்!
தந்தையர் தினத்தில் ஆம்ஸ்டர்டாமில் தனது மனைவி நயன்தாரா, குழந்தைகள் உயிர், உலகம் ஆகியோருடன் காரில் சென்றுக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த உயிர் எனும் வாண்டுவிடம் சிக்கியதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மகன் உலகத்தை தூக்கி, "டேய் இங்க வாடா, என்னை ஏன்டா இவன் (உயிர்) பேச விடமாட்டேங்கிறான் என விக்னேஷ் சொல்லும் போதே "இந்த பஞ்சாயத்திற்கு நான் வரவில்லை" என்பதை போல் அந்த "உலகம்" வாண்டு நழுவி விடுகிறது.
உயிர்
அப்போது உயிரிடம், "என்னை பேச விடுடா" என்கிறார். அதற்கு உயிர், "நான் பேச மாட்டேன்" என்கிறான். "நான் பேசணும் நீ கேக்கணும் என்கிறார். அதற்கு உயிர், நோ நீ கேட்கணும் நான் பேசணும் என்கிறான். உடனே காரில் இருந்த நயன்தாரா, அவர்களது குழந்தை பராமரிப்பாளர்கள் எல்லாம் சிரித்து விடுகிறார்கள்.
விக்கி
மொக்கை வாங்கியும் விடாத விக்கி, நான் பேசணும், நீ கேட்கணும் என்கிறார். அதற்கு அந்த உயிர், "நீ கேட்கணும் நான் பேசணும்" என சொல்கிறான். அதற்கு விக்கி, "என்னடா சொல்றே" என்கிறார். அதற்கு அந்த குழந்தையும், "என்னடா சொல்றே" என திருப்பி சொல்கிறது.
டேய் தம்பி
விக்கி சொடக்கு போட்டு,"டேய் தம்பி சொல்றதை கேளு" என்கிறார். அப்போது உயிரும், சொடக்கு போடுவது போல் கை விரல்களை வைத்து கொண்டு விக்கி சொன்னதையே ரிப்பீட்டு செய்கிறான். கேட்க மாட்டீயா என்கிறார். அதையே அந்த குழந்தையும் சொல்கிறது.
மிஸ்டர் உயிர்
உடனே விக்கி, "Are you playing with me?" என்கிறார். அதற்கு உயிரும், அதையே சொல்கிறான். "Mr Uyir! சொன்ன பேச்சை கேளுங்க" என்கிறார். அதற்கு அந்த சிறுவனும் ஏட்டிக்கு போட்டியாக பேசுகிறான். உடனே குங்குபூ வீரர் போல் விக்கி கைகளை வைத்துக் கொண்டு டேய் என சொல்ல அதற்கு உயிரும், அதே போல் கைகளை வைத்துக் கொண்டு டேய் என்கிறான். இப்படியாக தனது மகனுடன் விளையாடிக் கொண்டே சென்ற வீடியோவை பதிவிட்ட விக்கி, தந்தையர் தினத்தில் ஒரு தந்தையின் தற்போதைய நிலை என கேப்ஷன் போட்டுள்ளார்.
குழந்தை பிறப்பு
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் என். சிவன், உலக் தெய்வீக் என்.சிவன் என பெயரிட்டனர். இந்த குழந்தைகள் 8 மாதங்களில் பிறந்து பிறகு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தனர். தற்போது தந்தையிடம் வாய் அடித்து வருகிறார்கள். இதை நயன்தாராவும் ரசித்து வருகிறார்கள். ஏம்மா புள்ளையை இப்படியா வளர்ப்பீங்க என நெட்டிசன்கள் கிண்டலாக கேட்டு வருகிறார்கள்.
நயன்தாராவின் குழந்தைகள்
நயன்தாரா தனது குழந்தைகளை பார்த்துக் கொள்ள இரு கேர் டேக்கர்களை வைத்துள்ளார்கள். அவர்கள் குழந்தைகளுடன் எப்போதும் இருப்பார்கள். நயன்- விக்கி வெளிநாட்டுக்குச் சென்றாலும் அங்கும் குழந்தைகளை அழைத்துச் செல்கிறார்கள். இருவருக்கும் ஒரே நிறத்தினால் ஆன உடைகள் அணிவிக்கப்பட்டுள்ளன.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications