அப்பா மகள் பாசத்தை அழகாக கூறிய விக்னேஷ் சிவன்.. புரியாத நெட்டிசன்களால் கடுப்பான ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் தற்போது அப்பா, மகளின் பாசம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அது ரசிகர்களை மட்டுமல்ல பிரபலங்களையும் கவர்ந்து உள்ளதாம்.
நீயா நானா நிகழ்ச்சியில் சரியாக தீர்ப்பு வழங்கியதற்காக கோபிநாத்துக்கு பல்வேறு தரப்பட்டவர்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பலரும் அப்பா மகள் பாசத்தை குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அப்பா மகள் பாசத்தை அழகாக பதிவிட்டுள்ளார். இதுதான் தற்போது நெட்டிசன்களால் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

நெகிழ வைத்த நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த உருக்கமான ஒரு நிகழ்வு அனைத்து தரப்பினரையும் மனம் நெகிழ செய்துள்ளது. ஒரு பாசமான தந்தைக்கும் அந்த அன்பை புரிந்து கொண்ட மகளுக்கும் இடையே இருக்கும் பிணைப்பை இந்த வார எபிசோடு அனைவருக்கும் காட்டி இருந்தது. தற்போது அந்த எபிசோடை விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து அதற்கு கொடுத்த கேப்ஷன் தான் நெட்டிசன்களால் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று
இயக்குனர் விக்னேஷ் சிவனும் தன்னுடைய ட்விட்டர் பதிவில் "மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று" என்று பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவை ஹை ஸ்பீடில் படித்த நெட்டிசன்கள் சேர்ந்ததன்று என்ற வார்த்தையை தவறாக புரிந்து கொண்டு விக்னேஷ் சிவனை ஏகத்துக்கும் வசைப்பாடி வருகின்றனர். சேர்ந்ததன்று- சேர்ந்ததென்று இரு வார்த்தைகளுக்கு இடையே உள்ள புரிதல் குழப்பம் காரணமாக ஒரு பக்கம் இனைய வாசிகள் விக்னேஷ் சிவனை அர்ச்சித்து வந்தாலும், அவரே ஒரு எழுத்தர் அவருக்கு தெரியாத தமிழா..!!என்று விக்னேஷ் சினக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆதரவாக ரசிகர்கள்
தான் என்னதான் இயக்குனராக இருந்தாலும் தனக்குள் இருக்கும் பாசத்தை வெளிப்படையாக விக்னேஷ் சிவன் காட்டியுள்ளார். நீயா நானா நிகழ்ச்சியை குறித்து தான் இவர் தற்போது வெளியிட்ட பதிவு இருக்கிறதா? ? என்று பலர் கேள்விகளை எழுப்பி இருக்கின்றார்கள். ஆனால் ஒரு சிலர் தற்போது புதியதாக திருமண முடிந்த விக்னேஷ் சிவனுக்கு குழந்தைகள் மேல் அவ்வளவு பாசம் போல, அதனால் தான் தனக்கு பெண் குழந்தை வந்தால் தனது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நினைத்து கொண்டிருப்பாராக இருக்கும். அதனால் தான் தனக்கும் தன்னுடைய வருங்கால மகளுக்கும் இருக்கும் பிணைப்பை பற்றி இவ்வளவு அழகாக கூறியிருக்கிறார் என்று விக்னேஷ் சிவனின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

குழப்பத்தை ஏற்படுத்தும் நெட்டிசன்கள்
விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஒற்றை போஸ்டால் எவ்வளவு பேர் சமூக வலைத்தளத்தில் என்ன நடக்கிறது என்று சரியாக புரிந்து கொள்ளாமல் வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்று துல்லியமாக புரிந்து கொள்ள முடிகிறது என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் தங்களுடைய மனதில் இருக்கும் வக்கிரங்களை அடுத்தவர்களின் மீது காட்டுவது தான் விக்னேஷ் சிவனின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் சிலர் செய்து வருவதாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications