Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரியாகவே செய்திருக்காரு விஜய்? அன்று ரொம்ப தவறா இருக்குன்னு டைரக்டர் சேரன் சொன்னாரே? இப்ப திடீர்னு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் 7 ஆம்னி பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, மகாபலிபுரம் விடுதியில் தங்கவைக்கப்பட்ட நிலையில், அவர்களை தவெக தலைவர் விஜய் தனித்தனியாக தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வானது அரசியல் களத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து டைரக்டர் சேரன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

ஆரம்ப காலங்களில் அவ்வளவாக அரசியல் பேசாத இயக்குநர் சேரன், பிறகு மெல்ல மெல்ல அரசியல் கருத்துக்களை பதிவிட துவங்கினார்.

Television Cheran Vijay

கடந்த 2019 தேர்தலின்போது சேரன் பதிவிட்டிருந்த ட்வீட் ஒன்று, இணையத்தில் பேசுபொருளானது.. ""மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி கொதிப்படையச் செய்து வாக்கு சேகரிப்பதும் ஒருவகையில் தவறான அணுகுமுறைதான். பேச்சிலும் கவர்ச்சியிலும் மயங்கித்தான் 50 வருடங்கள்...

டைரக்டர் சேரன்

நிதானமாக ஒவ்வொரு தலைவரின் உரை, இருக்கும் பிரச்சனைகள், அவர்கள் எடுத்து வைக்கும் தீர்வு என அலசுங்கள். அதுவே சரியான மாற்றம் காண வழி.

வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை முதலில் போட்டியிடும் தொகுதிக்கு வந்து வசிக்கச் சொல்லுங்கள். மக்களின் பிரச்சனைகளை உடனடியாகப் பார்க்க, தீர்க்க மக்கள் இலகுவாக அணுக வசதியாக இருக்கும். மக்களோடு வாழாத வேட்பாளர்களுக்கு அந்தத் தொகுதி பிரச்சனை வெறும் செய்திதானே'' என்று சேரன் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

ரொம்ப தவறா இருக்கு

இப்போதுகூட விஜய் அரசியல் குறித்தும் தன்னுடைய கருத்துக்களை கூறி வருகிறார்.. கரூர் சம்பவம் நடந்தபோது, "உயிரிழந்தவர்கள் குடும்பங்களை கூட வரவைச்சுத்தான் ஆறுதல் சொல்லுவிங்களா சார்... ரொம்ப தவறா இருக்கு @actorvijay. நேர்ல ஒவ்வொருவர் வீட்டுக்கு போறதுதான் மரியாதை.. அப்போதான் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் களங்கம் விலகும். அது முடியாதுன்னா எதுக்குமே உங்களால மக்களோட நிக்கமுடியாது" என்று குறிப்பிட்டிருந்தார்.

சேரனின் இந்த கருத்து அப்போது இணையத்தில் விவாதத்தை எழுப்பியிருந்தது.. 'இது நடைமுறை சாத்தியமா? விஜய் எப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக போக முடியும்? கூட்டம் சேராதா? என்று ஒரு நெட்டிசன் கேட்டிருந்தார்.

அதற்கு சேரன், ஒரு தலைவன் எப்பவும் என் பக்கத்துல வந்து எனக்காக நிப்பான்ற நம்பிக்கை உருவாக்கனும்.. முடியலைன்னா அத வளர்த்துக்கனும்.. ரசிகர் மன்றம் இருக்கவரை யாரும் கேட்கலை. எங்களை எப்போ ஆளனும்னு வர்றிங்களோ அப்போத்தான் இந்த கேள்வி. நல்லது சொல்ல கூட இருங்க .. தவறா சொல்லி ஏத்திவிட வேண்டாம் என்று நறுக்கென பதிலளித்திருந்தார்.

உலகத்தில் எங்காச்சும் நடக்குமா

ஆனால், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை மகாபலிபுரம் ரிசார்ட்டுக்கே நேற்றுமுன்தினம் வரவழைத்து ஆறுதல் சொல்லியிருந்தார் விஜய். அவர்களிடம் விஜய் மன்னிப்பு கோரியிருக்கிறார்.. கதறி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் உறுதி தந்திருந்தார்.

சாவு வீட்டுக்காரர்களை தேடி சென்று ஆறுதல் சொல்லாமல், அவர்களை வரவழைத்து ஆறுதல் சொல்வது உலகத்தில் எங்காச்சும் நடக்குமா? என்ற விமர்சனங்கள் கடந்த 2 நாட்களாகவே எழுந்து வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலில், விஜய்யின் இந்த நகர்வு தொடர்பாக மீண்டும் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் டைரக்டர் சேரன்.

கவனச்சிதறல் + இடைஞ்சல்

தன்னுடைய பதிவில், "நானும் கரூர் சென்றிருக்க வேண்டும் என வலியுறுத்தியவன் தான். ஆனால் அனைவரின் கருத்துக்களையும் மீறி அவர்களை அழைத்து வந்து அவர்களோடு அமர்ந்து எந்த இடைஞ்சலும் கவனச்சிதறலும் இல்லாமல் துயரத்திற்கு நிம்மதியான ஆறுதலை வார்த்தைகளாகவும் நம்பிக்கையாகவும் கொடுத்திருக்கும் விஜய் அவர்களை பாராட்டுகிறேன்.

கரூர் சென்றிருந்தால் கூட இத்தனை நெருக்கத்தில் மனம் விட்டு பேசி அமைதி கண்டிருப்பார்களா என்பது சந்தேகமே. நீங்கள் செய்ய நினைத்ததை சரியாக செய்திருக்கிறீர்கள். இனி இதை இந்த உலகம் உற்று கவனிக்கும். நீங்கள் உருவாக்கும் குழு என்றும் தவறிவிட்டு விடக்கூடாது. அதில்தான் உங்கள் அரசியல் வளர்ச்சி உள்ளது.

கண்ணசைவுக்கு கட்டுப்பாடு

உங்கள் தொண்டர்களை ஒழுங்கு செய்யுங்கள். கட்டமைப்பை வலுப்படுத்துங்கள். எல்லாம் இதுவரை உங்களை ரசித்தவர்கள்.. இனி அவர்களை சமூக பாதுகாவலர்களாக மாற்றும் கடமை உங்களது.. உங்கள் கையசைவுக்கும் கண்ணசைவுக்கும் கட்டுப்படுத்த தயார் செய்யுங்கள்.

நடந்த நிகழ்வும் அதன் கறைகளும் முற்றுமாக அகற்றப்படவில்லை.. அவையெல்லாம் மாறுவதென்பது தொடர்ந்து உங்கள் கட்சி தொண்டர்கள் நடத்தையில் இருக்கிறது. மக்களுடன் இறங்கி, பழகி இலகுவாகுங்கள். உங்கள் இலக்கு 2026 ஆக அல்லாமல் 2031 ஆக குறிவைத்து களம் ஆடுங்கள். முடியும்" என்று நம்பிக்கை ஊட்டியிருக்கிறார் டைரக்டர் சேரன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+