சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம்
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜய், தற்போது முழு கவனத்தையும் அரசியலுக்கு திருப்பியுள்ள நிலையில், அவரது குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை, மகன் குறித்து புதிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜய்யுடன் பல வருடங்களாக ஒன்றாக பயணித்த PT செல்வகுமார் விஜய் மற்றும் அவருடைய மகன் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அரசியலில் முழு ஈடுபாடு
சினிமாவில் இருந்தபோதே ரசிகர் மன்றங்கள் மூலம் பல நலத்திட்டங்களை செய்து வந்த விஜய், இப்போது முழுநேர அரசியல்வாதியாக களம் இறங்கியுள்ளார். அவரது கட்சி தமிழக வெற்றி கழகம் வரும் தேர்தலை முன்னிட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த மாற்றமே அவரைச் சுற்றி பல புதிய சர்ச்சைகளுக்கும் காரணமாகியுள்ளது.
குடும்ப வாழ்க்கை சர்ச்சை
கடந்த சில ஆண்டுகளாகவே சங்கீதா மற்றும் விஜய் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில், சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியதாகவும், தனது மனுவில் கணவருக்கு மற்றொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டதாகவும் பேசப்படுகிறது.
இந்த விவகாரத்தில் திரிஷா பெயரும் இழுக்கப்பட்டதால், சமூக வலைதளங்களில் பரபரப்பு அதிகரித்தது. மேலும், இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஒரே நிற உடையில் வந்ததும் இந்த வதந்திகளை மேலும் தூண்டியது.
மகன் சஞ்சய் போராட்டம்
இதே நேரத்தில், விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பற்றிய விவாதமும் கிளம்பியுள்ளது. வெளிநாட்டில் சினிமா தொடர்பான படிப்பை முடித்த அவர், சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்தாலும், இதுவரை வெளியாகாமல் உள்ளது. இதனால், "ஸ்டார் நடிகரின் மகன் என்றாலும், சஞ்சய் தனியாகவே போராடி வருகிறார்" என்ற கருத்து பரவியது.
முன்னாள் மேனேஜர் கடும் விமர்சனம்
இந்த நிலையில், விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி. செல்வகுமார் கூறிய கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது.
அவர் கூறுகையில், "சஞ்சய் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு படத்துக்காக போராடிக் கொண்டிருக்கிறார். ஒரு தந்தையாக விஜய் 'என்ன பிரச்சனை? என்ன உதவி வேணும்?' என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை" என்று குற்றம்சாட்டினார்.
மேலும், "அன்று எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் தானாக வளரட்டும் என்று இருந்திருந்தால், இன்று விஜய் இந்த உயரத்தை அடைந்திருக்க முடியாது" என்றும் அவர் நேரடியாக விமர்சித்தார்.
அதோடு சினிமா துறையில் இருக்கும் பலர் தங்களுடைய மகன்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இயக்குனர் பாக்கியராஜை சொல்லலாம். அதேபோல நடிகர் தனுஷுக்கே அவருடைய அப்பா தான் ஆரம்பத்தை தொடக்கி வைத்தார். டி ராஜேந்திரன் தன்னுடைய மகன் வளர்ச்சிக்காக உறுதுணையாக இருக்கிறார். படத்தில் ஹீரோவாக நடிப்பது பெரிது இல்லை.
நிஜத்திலும் தன்னுடைய குழந்தைகள், மனைவிக்கு துணை நிற்க வேண்டும். அவங்க தான் ஹீரோ. ஆனால் விஜய் நிஜ ஹீரோவாக இல்லை. அவர் தந்தையாக தோற்று விட்டார் என்று செல்வகுமார் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.
சொத்து விவரம்
இதற்கிடையில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில், தனது மகனுக்கே கடன் வழங்கியிருப்பதாக விஜய் குறிப்பிட்டிருந்தது கூட சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. இதையும் இணைத்து பலரும் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
அரசியல் vs தனிப்பட்ட வாழ்க்கை
ஒரு பக்கம் அரசியலில் பெரிய இலக்குடன் முன்னேறி வரும் விஜய், மறுபக்கம் குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளால் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வருகிறார். முன்னாள் மேனேஜர் கூறிய இந்த கருத்துகள் சாதாரண விமர்சனமா?
அல்லது உள்ளே இருக்கும் உண்மைகளா? என்பது குறித்து ரசிகர்கள், அரசியல் வட்டாரங்கள் என அனைவரும் ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications