நச்னு சொன்ன விஜய் சேதுபதி.. "நல்லகண்ணு வாழ்க்கை பாடப்புத்தகத்தில் இணைக்க முடிவு? அன்பில் மகேஷ் பதில்
சென்னை: நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பாடப் புத்தகத்தில் இணைப்பது தொடர்பாக முதல்வர் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும் என நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது நல்லக்கண்ணு நூற்றாண்டு வாழ்க்கை வரலாற்றை விளக்கக்கூடிய சிறப்பு பாடலும் வெளியிடப்பட்டது.

விஜய் சேதுபதி: இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "காலில் செருப்பு, தீபாவளி - பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை, இதெல்லாம் நல்லகண்ணு போன்றவர்கள் ரத்தம் சிந்தி பெற்றுத் தந்தது. இது பற்றி தெரியாத பலரில் நானும் ஒருவன். இதனால் பலனடைந்த பலர்களில் நானும் ஒருவன். இதனால், நல்லக்கண்ணு அவர்களின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் இடம்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மேடையிலே
ஐயா நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு நடிகர் விஜய்சேதுபதி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழக பள்ளி பாடப் புத்தகத்தில் நல்லகண்ணுவின் வரலாற்றை இணைப்பது குறித்து முதல்வரின் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை வரலாறு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா, சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய்சேதுபதி, நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப் புத்தகங்களில் தமிழக அரசு சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதே கோரிக்கையை சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களிலும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், நல்லகண்ணுவின் வரலாற்றை பாடநூலில் இணைப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
முடிவு செய்யப்படும்: இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதமாக அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப் புத்தகத்தில் இணைப்பது குறித்து முதல்வரின் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications