சாச்சனா இது என்ன உன் வீடா? நீ என்ன குழந்தையா? என்ன நினைச்சிட்டு இருக்க! விளாசிய விஜய் சேதுபதி
சென்னை: சாச்சனா நீ என்ன குழந்தையா என பிக்பாஸ் வீட்டில் அவர் சாப்பாட்டுக்கு சண்டை போட்டதை விஜய் சேதுபதி கடுமையாக வறுத்தெடுத்துவிட்டார். மேலும் நான் இரண்டு முறை சாப்பாடு கேட்டும் தராமல் தன்னை அவமானப்படுத்தியதாகவும் சாச்சனா அழுதபடியே கூறியிருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது scripted one என அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தற்போது டிஸ்னி ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கு நடக்கும் விஷயங்களை எடிட் செய்யும் போது சில சீன்களை பார்க்கும் போது அய்யய்யோ இப்படியா நடக்குது என அதிர வைக்கும்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 6 ஆம் தேதி முதல் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களை அறிமுகப்படுத்திய போதே விஜய் சேதுபதி அப்லாஸ் வாங்கினார்.
கடந்த வாரம் முதல் எவிக்ஷன் பிராசஸ் நடந்தது. அப்போது முதலே போட்டியாளர்களை வறுத்தெடுத்தார். அதில் உச்சகட்டமாக ஜாக்குலின் சிக்கி வருகிறார். எல்லாவற்றுக்கும் பிரியங்கா போல் கத்தி கத்தி பேசி தனது செயலை நியாயப்படுத்துகிறார் என மக்கள் கருதுகிறார். அந்த வகையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2ஆவது வாரம் என்பதால் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்புகிறார்.
நேற்றைய தினம் 2ஆவது ப்ரோமோவில் சாப்பாட்டுக்காக சாச்சனா அழுத விவகாரத்தை கையில் எடுத்தார். அப்போது சாச்சனாவிடம் , சம்பந்தி உணவு விவகாரத்தில் ஏதோ ஒரு பஞ்சாயத்து நடந்ததே அது என்ன என கேட்கிறார். அதற்கு சாச்சனா, நான் இரண்டு முறை சம்பந்தி கேட்டேன். ஆனால் எனக்கு தராமல் அசிங்கப்படுத்தினார்கள்.
2 முறை கேட்டு 3ஆவது முறையும் கேட்க எனக்கே ஒரு மாதிரி இருந்தது சார் என அழ ஆரம்பித்துவிட்டார். இதையடுத்து விஜய் சேதுபதி அன்ஷிதாவின் கருத்தையும் கேட்கிறார். இருவரது கருத்தையும் கேட்டுவிட்டு சாச்சனாவை விஜய் சேதுபதி விளாசினார். " இது என்ன உன் வீடா, மற்றவர்கள் உன்னை குழந்தை போல் நடத்த வேண்டும் என நினைக்கிறியா. உனக்கும் இதில் பங்கு இருக்கிறது.
உரிமை இருக்கிறது. உனக்கு வேண்டும் என்றால் நீ தான் கேட்க வேண்டும். எடுத்துக் கொள்ள வேண்டும். அதை மற்றவர்கள் உனக்காக செய்வார்கள் என நீ எதிர்பார்க்கக் கூடாது" என வறுத்தெடுத்துவிட்டார். இதிலிருந்து டைனிங் டேபிளில் இருந்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட இத்தனை சண்டை என தெரிகிறது. அதிலும் சாச்சனா, உணவை கோபத்தில் கொட்ட சென்றது, அதை விட பெரிய அதிர்ச்சி.
வழக்கம் போல் பிக்பாஸ் வீட்டில் சாப்பாட்டுக்காக சண்டை போட்டு கொண்டிருப்பது ஊர்ஜிதமாகிறது. அத்துடன் சாச்சனா, மகாராஜன் படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்துள்ளார். அறிமுக நாளிலேயே சாச்சனாவுக்கு அறிவுரை கூறும் விஜய் சேதுபதி, நீ என்னை சார், அப்பா, டேடி என எதுவேண்டுமானாலும் கூப்பிடலாம்.
ஆனால் பிக்பாஸ் வீட்டில் ஏதாவது பிரச்சினை செய்துவிட்டு அப்பா என்றால் விட மாட்டேன் என சிரித்தபடியே கூறினார். அது போல் சத்யாவையும் தெரியும் என கூறும் விஜய் சேதுபதி, யாராக இருந்தாலும் என்னிடம் சலுகையை எதிர்பார்க்கக் கூடாது என்கிறார்.












Click it and Unblock the Notifications