பிக் பாஸ் 8: நேற்று விஜய் சேதுபதி செய்த சிறப்பான செயல்! பலருக்கு பாடம்! “அந்த” இடத்தில் தடுமாற்றம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நேற்றைய ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி செய்த சில செயல் பாராட்டுக்குரியதாக இருக்கிறது. அதே நேரத்தில் தீபக்கிடம் நடந்து கொண்ட விதம் மட்டும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் நேற்று 35 வது நாள் எபிசோடு ஒளிபரப்பானது. நேற்றைய தினம் ரசிகர்கள் கடந்த வாரத்தில் இருந்து கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்த கேள்விகளை விஜய் சேதுபதி சரியாக கேட்டிருந்தார். அதிலும் சௌந்தர்யா தரையில் அமர்ந்து போராட்டம் செய்ததை தலைவராக இருந்த சத்யா, "நீ எல்லாம் படிச்ச பொண்ணா? புடவை கட்டிட்டு இப்படி அமர்ந்திருக்கிற?" என்று ஆணாதிக்க முறையில் பேசியது பலரையும் எரிச்சல் அடைய வைத்தது.

இது குறித்து விஜய் சேதுபதி கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அது பற்றி நேற்று சரியான இடத்தில் விஜய் சேதுபதி கேள்வி கேட்டு இருந்தார். அதோடு சத்யாவிற்கு டோஸ் விட்டதும் சிறப்பாக இருந்தது. சத்யா நாள் முழுக்க அரைகுறை உடையோடு தான் பிக் பாஸ் வீட்டிற்குள் சுற்றிக் கொண்டிருக்கிறார். காலை நேரத்தில் சட்டை கூட அணியாமல் வெறும் பாக்ஸர் மட்டும் போட்டுக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்.
அவர் அப்படி சுற்றுவது பார்க்கும் பெண்களுக்கு சங்கடமாக இல்லை. ஆனால் புடவை கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்து சௌந்தர்யா போராட்டம் செய்வது நின்று கொண்டு பார்த்த சத்யாவிற்கு சங்கடமாக இருந்ததாம். ஏற்கனவே கடந்த வாரத்தில் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. அதற்கு பிறகு இது பற்றி விஜய் சேதுபதி கேள்வி எழுப்பும் போது கூட சத்யா தான் பேசியது தவறு என்று புரிந்து கொள்ளவில்லை.
நிகழ்ச்சி முடிந்த பிறகு நான் தான் உன்னிடம் ஏற்கனவே மன்னிப்பு கேட்டு விட்டேனே இதை எதற்கு நீ சபையில் கேள்வி எழுப்பின என்று சௌந்தர்யாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தார். சௌந்தர்யாவிற்கு தன்னை பற்றி சத்யா பேசிய முழுமையான விஷயங்கள் தெரியவில்லை.
ஆனாலும் அவர் தன்னை பற்றி நீ எல்லாம் படித்த பொண்ணா என்று பேசியதுதான் தன்னை பாதித்துவிட்டது, ஏற்கனவே தனக்கு படிப்பு சரியா வராது என்று கதை சொல்லும் டாஸ்க் சொல்லியதை வைத்துதான் இப்போது சத்யா இப்படி பேசுகிறாரா? என்று எனக்கு சந்தேகம் இருந்தது என்று சத்யாவிடமே சௌந்தர்யா சொல்லி இருக்கிறார்.
ஆனால் இவர்கள் எல்லாம் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகுதான் எல்லா உண்மைகளும் தெரிய வரும். ஆனால் விஜய் சேதுபதி நேற்று சத்யாவிற்கு சரியாக டோஸ் கொடுத்து இருந்தார். அதோடு சத்யாவிற்கு சப்போர்ட்டாக வந்த விஜே விஷாலுக்கும் நீங்க பேசுறது எல்லாம் சரி கிடையாது. நீங்க 24 மணி நேர எபிசோடில் ஒருத்தர பத்தி மோசமா கமெண்ட் பண்ணி இருக்கீங்க.
நாகரிகம் கருதி அதை சொல்ல விரும்பல, நீங்க ஒன்னும் தெருமுனையில் உட்கார்ந்து பேசல ஞாபகம் வச்சுக்கோங்க.. அடுத்தவங்களை கேரக்டர் பற்றி தப்பா பேசுறதை பாத்துட்டு இருக்க முடியாது என்று வார்னிங் கொடுக்க, அதுவரைக்கும் முறைப்பா பேசிக் கொண்டிருந்த விஷாலின் முகம் இருண்டு போய்விட்டது.
அது வந்து சார்.. என்று சமாளிக்க பார்த்தார். தான் சௌந்தர்யாவை பற்றி பேசியதுதான் வெளியே எதுவும் தப்பா போகிறது என்று புரிந்து கொண்டாலும் தான் பேசியது தப்பு இல்லை என்பது போலத்தான் விஷால் பேசிக் கொண்டு இருந்தார். ஆனாலும் தன்னைப் பற்றி ஏதோ தப்பா போயிருக்கிறது என்று புரிந்து கொண்டு நிகழ்ச்சி முடிந்த பிறகு சாச்சனா மற்றும் தர்ஷிகா இருவரிடமும் மன்னிப்பு கேட்டு தான் மீது எந்த தப்பும் இல்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு சாச்சிகா மற்றும் தர்ஷிகா இருவரும் முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தனர். இதுதான் ஆணாதிக்க மனப்பான்மைக்கு சில பெண்களும் வழி போகிறார்கள் என்று காட்டியது. இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும் சத்யா மற்றும் விஜே விஷாலை கண்டித்த விஜய் சேதுபதி தீபக்கிடம் மட்டும் பெரிய அளவில் கோபத்தை காட்டவில்லை.
விஜய் சேதுபதி பேசும்போது கூட தீபக், "அப்படித்தான் சார் கேட்டேன்.. கேப்பேன்" என்று விஜய் சேதுபதியை மதிக்காதது போல தான் மேனலிசம் காட்டி இருந்தார். இந்த இடத்தில் கமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் பேசுவதற்கு தீபக் மறுத்து பேசி இருக்க மாட்டார். தீபத்தை சௌந்தர்யா விளையாட்டாக தொட்டதற்கு அவர் ஓவர் ரியாக்சன் செய்து இருந்தார்.
அது பற்றி விசாரிக்கும் போது கூட விஜய் சேதுபதியிடம் தீபக் நக்கலாகதான் நடித்துக் காட்டியிருந்தார். இது குறித்து விஜய் சேதுபதி தீபக்கை கடுமையாக எதுவும் திட்டாமல் விட்டுவிட்டார். இதுதான் இப்போது விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? தீபக் சௌந்தர்யா பற்றி பேசியது சரியா? இல்லையா? கமாண்டை தட்டி விடுங்க.












Click it and Unblock the Notifications