வாரிசு நடிகர் வாயில் பபுள்கம் மென்னுட்டே.. விக்ரம் பிரபு, மனோஜ் படாத பாடா.. சூப்பர்ஹீரோ வீழ்ந்த கதை
சென்னை: படவிழாவில் பேசிய விஜய் சேதுபதியின் மகன் சூர்யா; 'அப்பா வேற நான் வேற' என்று பேசியிருந்தார். இதை தலைக்கனத்தின் உச்சம் என்று நெட்டிசன்கள் அப்போது டிரோல் செய்திருந்தனர். இப்போது டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பபுள்கம்மை மென்றபடி சூர்யா பேசியிருப்பது, ஆட்டிடியூட் காட்டுவதாக உள்ளதாக மீண்டும் விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, வாரிசுகள் சினிமாவுக்கு நடிக்க வருவது குறித்து, பேட்டியொன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "அந்த காலத்தில், தியாகராஜ பாகவதர் தங்கத்தட்டில் சாப்பிட்டார், வெள்ளி டம்ளரில் பால் குடித்தார்" என்றெல்லாம் சொல்வார்கள்..

அன்று பெண்களே விரும்பக்கூடிய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்.. ஒருகட்டத்துக்கு பிறகு லட்சுமிகாந்தன் பத்திரிகையாளர் கொலை வழக்கில் சிறை சென்றார் தியாகராஜ பாகவதர்... பிறகு சிறையிலிருந்து வெளிவந்து வழக்கையும் எதிர்கொண்டார்.. எனினும் இறுதியில் வறுமையில் வாடிதான் இறந்தார்.
நான் கேட்பது, அந்த சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் வாரிசுகள் இப்போது எங்கே? இந்த 70 வருடத்தில், அவரது 3வது தலைமுறையாவது இருக்க வேண்டுமே? எங்கே இருக்கிறார்கள்?
மாயாஜாலம்
சினிமா என்பது மாய உலகம்.. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அதற்கு பிறகு வந்த நடிகர்களாகட்டும் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கிறார்கள்.. கமல், ரஜினியின் அப்பா நடிகரா?
வெற்றிமாறனின் அப்பா டைரக்டரா? தனுஷ், சிம்புவின் அப்பாக்கள் டைரக்டர்கள்.. ஆனால், விஜய சேதுபதியின் அப்பா நடிகரா? சமுத்திரகனி, சேரனின் அப்பா இயக்குனரா? மிஷ்கின் போன்று சிந்திக்கக்கூடியவர்கள் இன்று மிகவும் குறைவு,. அவரது அப்பா டைரக்டரா?
பாரதிராஜா - மனோஜ்
தனக்கு கிடைத்தது அனைத்தும் தன்னுடைய பிள்ளைக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்து, பலபேர் மண்ணில் கவிழ்ந்த கதையை கண்டுள்ளோம். பாரதிராஜா மனோஜை எப்படியாவது பெரிய நடிகராக கொண்டுவர முயன்றார்.. ஆனால் அது முடியவில்லை..
தன்னைதானே செதுக்கி கொண்டதாக அஜித் சொல்கிறார்.. அதுபோல விஜய்யால் சொல்ல முடியுமா? அந்த வரிசையில்தான் விஜய் சேதுபதி மகனையும் சேர்க்க முடியும்.. விஜய் சேதுபதி ஒன்றும் மகா கலைஞன் கிடையாது.. மகாராஜா படத்தில் அவருக்கு பதில் யார் நடித்திருந்தாலும் அந்த படம் ஓடியிருக்கும். காரணம், மகாராஜா படத்தின் ஸ்கிரிப்ட் அவ்வளவு பலம் பொருந்தியது.,
விஜய் சேதுபதி மகன்
விஜய் சேதுபதியை ரசிப்போர், அவரது மகனையும் ரசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், விஜய் சேதுபதி மகன் நன்றாக நடித்தால் அனைவருமே ஏற்றுக் கொள்வார்கள்.
முதலில் அவரது மகன் வாயை அடக்க வேண்டும்.. எற்கனவே இப்படித்தான், தன்னுடைய செலவுக்கு, அப்பா வெறும் 500 ரூபாய்தான் தருவார் என்று மகன் சொன்னார்.. தத்துவம் பேச இன்னும் காலம் உள்ளது.. அப்பாவின் அடையாளத்தில் தற்போது மகன் நடிக்க வந்துள்ளார்.. இதைத்தான் ஏற்கனவே தன்னுடைய அறிக்கையில் தனுஷை விமர்சித்திருந்தார்..
அப்பாவை பின்பற்றுவது தவறு கிடையாது.. அப்பாவை தொடர்ந்து அதே துறைக்கு வருவதும் தவறு கிடையாது.. ஆனால், அந்த துறையில் நிலைத்து நிற்க வேண்டும்.
சிவாஜி கணேசன் - பிரபு
பிரபு சிவாஜி கணேசனுடன் சேர்ந்து 10 படம் நடித்தார்.. அதற்கு பிறகு தானே சொந்த காலில் நின்றார்.. ஆனால் விக்ரம் பிரபுவால் நிற்க முடியல.. வாரிசு நடிகராகவே இருந்தாலும், திறமை இருந்தால்தான் இங்கே நிற்க முடியும்.. அதுபோல விஜய் சேதுபதி மகனும் தன்னுடைய திறமையில் நின்றால் அதை வரவேற்றேயாக வேண்டும்.வெறும் அடையாளப்படுத்துவதன் மூலமாக மட்டுமே ஒருவரால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது.
தமிழ்சினிமாவின் ஒரிஜினல் சகலகலா வல்லவன் டி.ராஜேந்தர்.. ஆனால், டி.ஆர் மகன் என்பதற்காகவே குழந்தையில் நடிக்க வைத்தார்.. அதற்கு பிறகு இடைவெளி வந்துவிட்டது. இந்த இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தபோதுதான், சிம்புவின் திறமை என்னவென்று அனைவருக்கும் தெரியவந்தது.
எனவே, திறமையிருப்பவர்களை மட்டுமே தமிழ் சினிமா தன்னுடைய பக்கத்தில் வைத்து கொள்ளும். வாரிசு என்பதால் மட்டுமே தொடர்ந்து சினிமாவில் நிற்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications