விஜய்யுடன் தனி விமானத்தில், ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்ற 2 பெண்கள் யார் தெரியுமா? லீக்கான ஆதாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் இப்போது விஜய் பற்றி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தேர்தல் சூழ்நிலையோடு சேர்ந்து, அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு நகர்வும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், அவர் இன்று சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தது பெரிதாக பேசப்பட்டு வருகிறது. அவருடன் இரண்டு பெண்கள் தனி விமானத்தில் பயணித்திருந்த நிலையில் யார் அவர்கள் என்ற விபரம் வெளியாகி இருக்கிறது.

Vijay Shirdi Sai Baba Kollywood Tamil Politics

திருச்செந்தூரில் தொடங்கிய ஆன்மீக பயணம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று அதிகாலை நேரத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று சாமி தரிசனம் செய்தார். கோவில் அர்ச்சகர்கள் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து, வேல் வழங்கியதும், அதை ஏந்திக்கொண்டு விஜய் தரிசனம் சென்ற காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று, சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட சன்னதிகளில் வழிபட்ட விஜய், தனது அரசியல் பயணத்திற்கும் தேர்தல் வெற்றிக்கும் வேண்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.

சீரடியில் சாய்பாபா தரிசனம்

அதனைத் தொடர்ந்து, இன்று சீரடி சாய்பாபா கோவில் சென்று சாமி தரிசனம் செய்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் புறப்பட்ட விஜய், அங்கிருந்து காரில் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவரைக் கண்ட ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

சாய்பாபா வழிபாடு மத எல்லைகளை கடந்து அனைவராலும் பின்பற்றப்படும் ஒன்றாக இருப்பதால், முக்கியமான முடிவுகளுக்கு முன் பலரும் இங்கு தரிசனம் செய்வது வழக்கம். விஜய்க்கும் இது புதிய விஷயம் இல்லை-இதற்கு முன்பும் பலமுறை அவர் சீரடி சென்று வழிபட்டுள்ளார்.

Vijay Shirdi Sai Baba Kollywood Tamil Politics

யார் அந்த பெண்கள்?

இந்த பயணத்தின் போது வெளியான ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையாக மாறியது. விஜய் தனி விமானத்தில் செல்லும்போது, அவருடன் இரண்டு பெண்கள் நடந்து செல்லும் காட்சி வைரலானது.

இதையடுத்து, "அவர்கள் யார்?" என்ற கேள்வி பல இடங்களில் எழுந்தது.சிலர், அது திரிஷா மற்றும் அவருடைய அம்மா என்று கூட வதந்திகளை பரப்பத் தொடங்கினர். ஆனால், பின்னர் வெளிவந்த தகவல்களின் படி, அந்த இரண்டு பெண்கள் விஜய்யின் நெருங்கிய நண்பரும் தொழில் அதிபருமான விஷ்ணு ரெட்டியின் மனைவியும் மகளும் தான் என கூறப்படுகிறது. அதேபோல், அந்த பயணத்தில் கலந்து கொண்டவர்களின் பட்டியலும் வெளியாகி, இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

விஜயின் ஆன்மீக நம்பிக்கை

விஜய்க்கு சாய்பாபா மீது உள்ள பக்தி புதிதல்ல. அவரது குடும்பத்திலும், குறிப்பாக அவருடைய அம்மாவிற்கு சாய்பாபா மீது அதிக ஈர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காகவே அவர் சாய்பாபா கோவில் கட்டித்தந்ததாகவும் சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் பரவின.

இதனால், சீரடி பயணம் என்பது அரசியல் கணக்கை விட, அவருடைய தனிப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது.

சர்ச்சைகள்

சமீப காலங்களில் விஜய் குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக அவருடைய மனைவி விவாகரத்து வழக்கு தொடர்ந்தது, அவருடைய மகன் விஜய் பெயரை தன்னுடைய இனிசியலாக வைக்காமல் தன்னுடைய அம்மாவின் பெயரை இன்சியலாக பயன்படுத்தியது மற்றும் திரிஷாவுடன் கல்யாண பங்க்ஷன் ஒன்றில் கலந்து கொண்டது போன்ற பல விஷயங்கள் அவரைப் பற்றி அதிகமாக பேச வைத்து வருகிறது.

விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு முடிவையும் மிகவும் திட்டமிட்டு எடுத்து வருகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள இந்த முக்கிய கட்டத்தில், அவர் மேற்கொள்ளும் கோவில் தரிசனங்கள் மன அமைதிக்காகவா?.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+