சத்தம் இல்லாமல் சாதித்த பாக்கியலட்சுமி சீரியல்.. இத்தனை வெற்றிகளா?கடைசியில் இப்படி ஆகிவிட்டது
சென்னை: விஜய் டிவியில் 8வது டெலிவிஷன் விருது வழங்கும் விழா நடைபெற்று இருக்கிறது.
அதில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் நடிகைகளுக்கு அதிகமான விருதுகள் கிடைத்திருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகி மற்றும் வில்லி இருவருக்கும் கிடைத்த விருதுகளோடு அவர்கள் பல புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார்.
விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் சிறந்த சீரியல்கள் மற்றும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம் தான். அந்த வகையில் தற்போது எட்டாவது டெலிவிஷன் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. அதற்காக பல்வேறு கேட்டகிரியில் பலருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

நேற்று நடந்து முடிந்த இந்த வருடத்திற்கான விருது வழங்கும் விழாவில் அதிகமான விருதுகளை பாக்கியலட்சுமி சீரியல் குழு பெற்றிருக்கிறது. அதில் பாக்யாவை எதிர்த்து நெகட்டிவ் கேரக்டரில் நடித்து ராதிகா கேரக்டரில் நடித்து வரும் ரேஷ்மா பசிபுலேட்டிக்கு சிறந்த வில்லிக்கான விருது கிடைத்திருக்கிறது.
கோபி விட்டு சென்றாலும் குடும்பத்தை தனியாக நின்று நடத்தும் பாக்கியாவிற்கு சிறந்த ஹீரோயின் விருது கிடைத்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் எல்லாவற்றையும் சிரிக்க வைத்து கொண்டிருக்கும் செல்விக்கு சிறந்த காமெடியன் என்ற விருது கிடைத்திருக்கிறது. அதுபோல சிறந்த மகனுக்கான விருது எழிலுக்கும் கிடைத்திருக்கிறதாம்.

தற்போது இந்த அவார்ட் ஃபங்ஷனில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே நேரத்தில் இந்த சீரியலின் கதாசிரியரான பிரியா தம்பியும் தன்னுடைய கையில் அவார்டு வைத்திருப்பதால் அப்போது அவருக்கு சிறந்த கதாசிரியருக்கான விருது கிடைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சீரியலுக்கு சிறந்த சீரியலுக்கான விருதும் கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் கதாநாயகனாகவும் பல நேரங்களில் பலருடைய திட்டுக்களை வாங்கிக் கொண்டும் காமெடியாகவும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டு வரும் கோபிக்கு எந்த அவார்டும் கிடைத்த மாதிரி தெரியவில்லை. இதனால் சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில் கோபியாக நடித்துவரும் சதீஷும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் இந்த சீரியலில் இருந்து இன்னும் 10 அல்லது 15 எபிசோடுகளில் வெளியேறி விடுவேன் என்றும் கூறியிருக்கிறார். நான் எதற்காக வெளியேறி விட்டேன் என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அவற்றை இப்போது சொல்ல முடியாது என்றும் கூறியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications