விஜய் டிவியில் பிரியங்கா ஒரே ஒரு எபிசோடுக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா? அதிர்ச்சி அளிக்கும் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் சில வருடங்களாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பள விபரம் தற்போது வெளியாகி இணையவாசிகளை வாயை பிளக்க வைத்து இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டுமே தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா இப்போது பல நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறார். அதற்கு முக்கிய காரணமும் சம்பள விஷயம்தான் என்றும் சொல்லப்படுகிறது.

விஜே பிரியங்கா இப்போது விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று சொல்கிற மாதிரி விஜய் டிவியில் தான் பல வருடங்களாக வேலை செய்து வருகிறார். சமீபத்தில் கூட கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். அதற்கு பிறகு தனக்கு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா? என்று அந்த நிகழ்ச்சியில் பலமுறை புலம்பி கொண்டு இருந்தார். ஆனால் ஒரு சில மாதங்கள் மட்டுமே அமைதியாக இருந்த பிரியங்கா பிறகு அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து விட்டார்.

Vijay TV anchor Priyanka earns for just one episode

ஆரம்ப காலகட்டத்தில் விஜய் டிவியில் ஒரு சில தொகுப்பாளர்கள் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக இடம் பிடித்திருந்தனர். அதிலும் ரம்யா, பாவனி, டிடி என்ற திவ்யதர்ஷினி, பிரியா பவானி சங்கர் போன்ற பல தொகுப்பாளர்கள் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தனர். இப்போது அவர்கள் சின்னத்திரைக்கும் வெள்ளி திரைக்குப் போய்விட்ட காரணத்தால் பல வருடங்களாக இப்போது விஜய் டிவியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தது போல ரசிகர்களின் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே விஜய் டிவியில் முன்னோடி தொகுப்பாளராக வளர்ந்து வருகிறார்.

இவர் இதுவரைக்கும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு பிரியங்கா ஒரு எபிசோட்டை தொகுத்து வழங்க வாங்கும் சம்பளம் குறித்து இப்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் பிரியங்கா விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 உட்பட பல ரியாலிட்டி ஷோகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சி கலகலப்பாக காமெடியாக கொண்டு செல்வதற்கு பிரியங்கா தனிக்கலை தான் காரணம்.

இதனால் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதுபோல எப்படி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கலகலப்பாக இருக்கிறாரோ அதுபோல இன்ஸ்டா, youtube போன்ற சமூக வலைத்தளங்களிலும் பிரியங்கா ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, தன்னுடைய தொலைதூர பயணம், வேடிக்கை விளையாட்டு, சூட்டிங் ஸ்பாட்டில் நிகழும் ஜாலி நிகழ்வுகள் என்று பல வீடியோக்கள் அதில் அடிக்கடி போஸ்ட் போட்டுக் கொண்டிருப்பார்.

அதுபோல பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட பிரியங்கா ரன்னர் அப்பாக வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் அவர் இருக்கும் போது கூட தனக்கு மீண்டும் விஜய் டிவியில் வாய்ப்பு கிடைக்குமா என்று உள்ளே வந்த பிரபலங்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் வெளியே வந்த பிறகும் தனக்கு கிடைத்த வரவேற்பு பார்த்து பிரியங்காவே அதிசயப்பட்டு போனார்.

அதை தொடர்ந்து பிரியங்காவிற்கு வழக்கம் போல விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் பிரியங்கா ஒரு எபிசோடு தொகுத்து வழங்குவதற்கு 2 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது. ஆனால் இது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஐயோ ஆத்தாடி இவ்வளவு சம்பளமா? என்று அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.

ஆனால் இது குறித்து பிரியங்கா எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் ஒரு எபிசோட்டை தொகுத்து வழங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. காரணம் சில நேரங்களில் ஒரு எபிசோடு முடிவதற்கு பகலில் தொடங்கி இரவு முழுக்க ஆகிவிடுகிறது. ஆனாலும் அந்த நேரங்களில் முழுக்க நின்று கொண்டே தான் தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியை தொகுத்துக் வழங்க வேண்டியது இருக்கு.

சில நேரங்களில் தங்களுக்கு ஏற்படும் கை வலி கால் வலியை கூட அந்த கேமரா முன்பு அவர்கள் வெளிக்காட்ட முடியாது. அது குறித்து கூட பிரியங்கா சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். கேமராக்கு பின் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் கால் வலியோடு நின்று கொண்டு அழுது கொண்டிருந்த பிரியங்கா டேக் என்று சொன்னதும் ஓடி சென்று சிரித்த முகமாக அங்கு இருக்கும் போட்டியாளர்களை கலாய்த்து கொண்டிருப்பார். இந்த வீடியோ பெரிய அளவில் வைரலானது. அதனால் உண்மையில் பிரியங்காவிற்கு இவ்வளவு சம்பளம் உண்மையா? இல்லையா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+