பிரியங்கா திருமணத்தில் கலந்து கொள்ளாத மாகாபா! இதுதான் காரணமா? இப்படியும் நடந்ததா? வெளியான தகவல்
சென்னை: விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாக இருக்கும் பிரியங்காவிற்கு நேற்று வசி என்பவர் உடன் இரண்டாவது திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் பிரியங்காவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பிரியங்காவின் நீண்ட நாள் நண்பரான மாகாபா கலந்து கொள்ளவில்லை. இது குறித்து மாகாபா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஸ்டார் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிரியங்காவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவி பிரபலமான பிரவீன் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன சில வருடங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து நடைபெற்று இருக்கிறது. ஆனால் அந்த தகவலை பிரியங்கா வெளியே சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார்.

ரகசியம்
பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட தன்னுடைய கணவர் குறித்து பேசவில்லை இதனால் அந்த நேரத்தில் அதிகமாக கேள்விகள் எழுந்தது. ஆனால் அதற்கும் பிரியங்கா பதில் சொல்லவில்லை. இந்த நிலையில் தான் கடந்த வருடத்தில் பிரியங்காவின் அம்மா ஒரு பேட்டியில் பேசும்போது பிரியங்கா மீண்டும் திருமணம் செய்ய வேண்டும் அவர் மகிழ்ச்சியாக வாழ்வதை நான் பார்க்க வேண்டும், அதுதான் என்னுடைய ஆசை என்று பேசியிருந்தார். அதற்கு பிறகு தான் பிரியங்கா அவருடைய கணவரை பிரிந்து விட்டார் என்று உறுதியாக தெரிய வந்தது.
பிரியங்காவின் திருமணம்
இந்த நிலையில் நேற்று டிஜே வசி என்பவரை பிரியங்கா திருமணம் செய்து இருக்கிறார். இவருடைய திருமண புகைப்படங்களை பிரியங்கா தான் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருந்தார். அதை சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வாழ்த்தி இருந்தனர். அதுபோல இவருடைய திருமண பங்க்ஷனில் பிக்பாஸ் பிரபலமான பாவனி, அமீர், நிரூப் உட்பட விஜய் டிவி பிரபலங்கள் சிலர் மட்டும்தான் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

கேள்விகள்
ஆனால் பிரியங்காவின் நெருங்கிய நீண்ட நாள் நண்பரான மகாபா இந்த பங்க்ஷனில் கலந்து கொள்ளவில்லை. அதனால் இவர்கள் இருவருக்கும் ஏதேனும் பிரச்சனையா? அதனால் தான் இவர் இந்த பங்க்ஷனில் கலந்து கொள்ளவில்லையா? பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து கொண்டது மாகாபாவிற்கு பிடிக்கவில்லையா? அதனால் தான் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லையா என்ற கேள்விகள் காலையில் இருந்து எழுந்து வருகிறது.
நண்பரின் சந்தோஷம்
இது குறித்து மாகாபா விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று சொன்னதும் அவருடைய குடும்பத்தினரை போல அதிகமாக சந்தோஷப்பட்டது நான்தான். அதுபோல பிரியங்கா திருமணம் செய்திருக்கும் டிஜே வசி எனக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்தான். அவரும் ரொம்பவும் அன்பானவர்.

மாகாபா விளக்கம்
பிரியங்காவின் திருமணத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டேன் ஆனால் என்னுடைய தனிப்பட்ட வேலையின் காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் திருமணத்திற்கு போக முடியவில்லை இதனால் பிரியங்கா என் மீது கோபத்தில் தான் இருக்கிறார். போன் செய்து என்னை அதிகமாக திட்டிவிட்டார். ஆனாலும் எனக்கு சூழ்நிலை சரியில்லாததால் தான் என்னால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.
கோபப்பட்ட பிரியங்கா
பிரியங்காவிற்கு என்னுடைய ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும். பிரியங்கா எப்போதும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது ஒரு நண்பராக என்னுடைய ஆசை என்று மாகாபா கூறி இருக்கிறார்.பிரியங்கா தன்னுடைய இரண்டாவது திருமணத்தை பற்றி எந்த இடத்திலும் பேசாமல் அமைதியாக இருந்து நேற்று திருமணத்தை முடித்து புகைப்படங்களை வெளியிட்டது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

பிரியங்காவின் கணவர்
அதைத் தொடர்ந்து பிரியங்காவின் கணவர் யார் என்று ரசிகர்கள் தேட தொடங்கி இருந்த நிலையில் பிரியங்காவின் கணவர் டிஜேவாக இருக்கிறார். பல திருமண நிகழ்ச்சிகளுக்கு இவர்தான் டி.ஜேவாக இருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. அதுபோல ஹோட்டல் மேனேஜ்மென்ட்டும் நடத்திக் கொண்டிருக்கிறார். பிரியங்கா மற்றும் வசி இருவருக்கும் 10 வருடங்கள் வயது வித்தியாசம் இருக்கிறது. வசியின் தலை முடி எல்லாம் வெள்ளையாக இருப்பதை பார்த்ததும் அவருக்கு அதிக வயது இருக்கும் என்று பலர் கூறி வருகிறார்கள். ஆனால் அவருடைய வயது 44 தானாம்.












Click it and Unblock the Notifications