பாக்கியலட்சுமி: இனியாவுக்காக நிதிஷுக்கு தண்டனை கொடுத்த எழில்.. ஜெயிலுக்கு போகும் கோபி.. பரபரப்பு சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூலை 11ஆம் தேதிக்கான எபிசோடில் இனியா மற்றும் ஆகாஷ் பேசுவதை பார்த்து நிதிஷ் பிரச்சனை செய்ய, அதற்கு எழில் மற்றும் செழியன் இருவரும் கோபப்பட்டு நிதிஷை அடித்து இருக்கின்றனர். அதனால் கோபிக்கு பிரச்சனை வருகிறது என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஆகாஷும் இனியாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஆகாஷ் உனக்கு நல்ல பிரண்டா வெல்விஷராகவும் நான் இருப்பேன். எந்த விஷயமா என்றாலும் என்கிட்ட சொல்லு என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வந்த நிதிஷ் இதை பார்த்து கோபமாகி காரை விட்டு இறங்கி வந்து வேலைக்கு போற இடத்தில போய் பார்த்தேன் நீ அங்கே இல்லை. ஆனால் நீ இங்கே இவன் கூட பேசிக்கிட்டு இருப்பான்னு கெஸ் பண்ணுனேன் அதேபோல நீ கரெக்டா வந்து அதையேதான் பண்ணிட்டு இருக்குற, என்று இருவரையும் தப்பா பேச அப்போது செல்வி வந்து இங்கிருந்து கிளம்பி போக சொல்கிறார்.

அதற்கு நிதிஷ் வீட்டுக்கு போகலாம் என்று இனியா கையை பிடித்து இழுக்க இனியா வர மறுக்கிறார். அதற்கு நீ என்ன நெனச்சிட்டு இருக்க? எந்த விதத்தில் இவன் என்னை விட உனக்கு பெருசா போயிட்டான்? அழகுலயா? இல்ல வசதியா? எனக்கு ஒண்ணுமே புரியல என்று நிதிஷ் சொல்ல, ஆகாஷ் எதுவாக இருந்தாலும் பார்த்து பேசுங்க வயலன்ஸ் வேண்டாம் என்று சொல்ல, நிதிஷ் ஆகாஷை பிடித்து தள்ளிவிட இனியா முறைத்து பார்க்கிறார்.
அதற்கு நிதிஷ் உன்னை ஏதாவது சொன்னா அவன் கோபப்படுறான், அவனை ஏதாவது சொன்னா நீ கோபப்படுற? என்ன நடக்குது என்று மீண்டும் தப்பாக பேசி இனியாவை கையை பிடித்து இழுக்க அப்போது அங்கு வரும் பாக்கியா நீ இப்ப எதுக்கு நீ இங்க வந்தா? என்று கேட்க, இனியாவை கூட்டிட்டு போக வந்தேன் என்று சொல்றார். இதனை சிலர் வீடியோ எடுத்துக் கொண்டு இருக்கும் போது கவுன்சிலர் வந்து நிதிஷை விரட்டி அனுப்புகிறார்.
பிறகு பாக்கியா இனியாவிடம் நீ கவலைப்படாத இதுக்கு நான் ஒரு முடிவு கட்டுறேன் என்று வீட்டுக்கு வந்து குடும்பத்தினரிடம் விஷயத்தை சொல்ல, அதற்கு எழில் மற்றும் செழியன் இருவரும் கோபப்படுகின்றனர். உடனே இவனை சும்மா விட கூடாது என்று எழில் கிளம்ப, பாக்கியா எங்கேயும் போக வேண்டாம் என்று சொல்ல, நான் வாக்கிங் போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். உடனே பாக்யா செழியனை போய் பார்க்க சொல்ல, இருவரும் சேர்ந்து நிதிஷ் வீட்டிற்கு போக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது அங்கு காரில் வந்த நிதிஷ் காரை விட்டு இறங்கி வந்து அவர்களிடமே இனியாவை பற்றி தப்பா பேச இருவரையும் நிதிஷ் அடித்து வெளுத்துள்ளார். பிறகு இந்த சம்பவம் சந்திரிகாவிற்கு தெரிய வந்ததும் சந்திரிகா நான் இவங்களை சும்மா விட மாட்டேன் இதற்கு சரியான கண்டன கொடுப்பேன் என்று கோபப்படுகிறார். அடுத்த நாள் காலையில் கோபிக்கு போலீஸ் போன் செய்து விசாரணைக்கு வரும்படி சொல்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications