பாக்கியலட்சுமி: பாக்யா ஹோட்டலை மூட சுதாகர் போட்ட பிளான்.. துணைக்கு வந்த குடும்பம்! கிடைத்த ஆதாரம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூலை 17ஆம் தேதிக்கான எபிசோடில் சுதாகர் பாக்யாவின் ஹோட்டல் மூட வைக்க வேண்டும் என்பதற்காக புரோக்கர் ஒருவர் மூலமாக பாக்யாவை சூழ்ச்சியில் சிக்க வைத்திருக்கிறார். ஆனால் பாக்கியாவிற்க்கு பக்க பலமாக அவருடைய மொத்த குடும்பத்தினரும் நிற்கின்றனர். கடைசியில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா ரெஸ்டாரண்டில் இருக்கிறார். அப்போது ஆகாஷிடம் நாளைக்கு உனக்கு எக்ஸாம் இருக்கு, ஆனா நீ படிக்காமல் இங்கு வந்து வேலை பார்த்துகிட்டு இருக்கிறியா என்று பாக்கியா திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது ஆகாஷ் நான் நேற்றே படிச்சிட்டேன். வேலையை முடிச்சிட்டு போய் இன்னும் கொஞ்சம் படிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் இனியா வருகிறார். ஆகாஷிடம் நலம் விசாரித்து விட்டு பாக்யாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது சுதாகர் பாக்யாவை ஏமாற்றுவதற்காக அனுப்பிய ஆள் கொடுத்த ஆர்டருக்காக பாக்யா கொட்டேஷன் வாங்கி விட்டதாக இனியாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நபர் அட்வான்ஸ் கொடுத்தால் அடுத்த வேலையை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு ஆர்டர் தந்த ஆளுக்கு போன் செய்து அட்வான்ஸ் எப்ப தருவீங்க என்று கேட்கிறார். அதற்கு அவர் சாப்பாடு செய்து முடிஞ்ச பிறகு தரேன் என்று சொல்கிறார்.
பாக்கியா அட்வான்ஸ் கொடுத்தால் தான் என்னால் வேலை செய்ய முடியும் என்று சொல்லிவிடுகிறார். மறுநாள் காலையில் பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு ஆர்டர் கொடுத்து ஆள் வந்து இன்னும் அட்வான்ஸ் தரவில்லை என்பதால் ஆர்டர் கேக்சல் பண்ண வேண்டியதுதான் என்று சொல்லிவிட்டு பாக்கியா கடைக்கு போகிறார். அந்த நேரத்தில் கோபி வருகிறார். பாக்யா இல்லை என்றதும் செல்வியை டீ போட சொல்லிவிட்டு அங்கு காத்திருக்கிறார்.
அந்த நேரத்தில் ஆர்டர் கொடுத்தவர் வந்து நான் ஏற்கனவே உங்களுக்கு அஞ்சு லட்சம் அட்வான்ஸ் கொடுத்து இருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு செல்வி இல்ல நீங்க ஐம்பதாயிரம் தந்தீங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது பாக்யாவும் அங்கு வந்து விடுகிறார். பாக்யாவிடமும் அந்த நபர் உங்களுக்கு அஞ்சு லட்சம் அட்வான்ஸ் கொடுத்தேன். நீங்க இன்னும் சாப்பாடு செய்யலையா? என்று கேட்டு பிரச்சனை செய்ய கோபி என்ன விஷயம் என்று கேட்கிறார்.
பிறகு பாக்கியா நடந்த விஷயத்தை சொன்னதும் நீங்க என்ன சொல்லுறீங்க என்று அந்த நபரிடம் கேட்க, அந்த நபர் நான் அஞ்சு லட்சம் கொடுத்தேன். ஆனால் இவங்க சாப்பாடு செஞ்சு தரல இல்லன்னா என்னுடைய பணத்தை கொடுக்க என்று பிரச்சனை செய்கிறார். ஆனால் பாக்கியா நீங்க தந்தது ஐம்பதாயிரம் தான் என்று பணத்தை எடுத்துக் கொடுக்க, அதை நான் வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு கோபமாக அந்த ஆள் அங்கு இருந்து கிளம்புகிறார்.
பிறகு பாக்கியவிற்க்கு கோபி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஆர்டர் கொடுத்தவர் போலீசுடன் அங்கு வந்து நிற்கிறார். அதை பார்த்ததும் எல்லோரும் அதிர்ச்சியாக, போலீஸ் நீங்க அட்வான்ஸ் 5 லட்சம் வாங்கினீங்களா என்று கேட்க, இல்ல நான் அம்பதாயிரம் தான் வாங்கினேன் என்று பாக்கியா சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போ அதற்கு பில் கொடுத்தீங்களா? என்று கேட்க, இல்லை அவசரத்தில் இவரு போயிட்டாரு என்று பாக்கியா சொல்லிக் கொண்டிருக்கும் போது இந்த அம்மா என்னை ஏமாற்றிவிட்டார், 5 லட்சம் கொடுத்தேன். என் மகள் கல்யாணத்துக்காக சேர்த்து வைத்த பணம் சார் என்று அந்த ஆள் செண்டிமெண்டாக பேசி அழுவது போல நடிக்கிறார்.
அந்த நேரத்தில் எழில் மற்றும் செழியன் இருவரும் வந்து பாக்கியாவிற்கு சப்போர்ட் பண்ணி பேசுகின்றனர். அதற்கு ஆர்டர் கொடுத்தவர் நீங்க அடி ஆட்களை வச்சு மிரட்டுறீங்களா? என்று கேட்க கோபி இவங்க என்னுடைய சொந்த பசங்க என்று சொல்கிறார். அந்த நேரத்தில் இனியாவும் அங்கு வந்து தான் பத்திரிகையாளர் என்பதை சொல்லிவிட்டு ஆர்டர் கொடுத்தவரிடம் நீங்க 5 லட்சம் கொடுத்ததற்கு என்ன ஆதாரம் இருக்கு என்று கேட்க, அதற்கு உங்க அம்மா எனக்கு பில்லு தரவில்லையே என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் போலீஸ் பாக்யாவின் ரெஸ்டாரண்டை மூடுகின்றனர். அதோடு ஆர்டர் கொடுத்தவர் மீதும் தப்பு இருக்கிறது நீங்க பில் வாங்காம போயிருக்கீங்க நீங்க பணம் கொடுத்ததற்கு எந்த ஆதாரம் இல்லாததால் இரண்டு பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க என்று போலீஸ் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications