பாக்கியலட்சுமி: நிதிஷ் சுதாகர் பையனே இல்லையா? சொத்துக்காக நடந்த நாடகம்! இனியாவுக்கு தெரிந்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 30-ம் தேதிக்கான எபிசோடில் சுதாகர் குடும்ப ரகசியம் எல்லாவற்றையும் இனியா கேட்டு விடுகிறார். அதோடு நிதிஷ் இனியாவை அடித்திருக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யா ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது இனியாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு இனியா சொன்ன ரெஸ்டாரண்ட் போட்டியில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று பாக்யா சொல்லிக் கொண்டிருக்கும் போது உன்னால் கண்டிப்பாக முடியும்மா என்று இனியா மோட்டிவேஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக பாக்யா வீட்டில் ஈஸ்வரிக்கு சாப்பாடு போட செழியன் வரலையா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபி அங்கு வந்து ஈஸ்வரிக்கு மாத்திரை கொடுத்து விட்டு பேசிக் கொண்டிருக்கும் போது இனியா பாக்யாவின் அம்மா மற்றும் அவருடைய குடும்பத்தை பற்றி இனியா கேட்டது நினைவுக்கு வர, பாக்யாவிடம் கோபி உன்னுடைய அம்மா நல்லா இருக்காங்களா? குடும்பத்துகாரங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா? என்று நலம் விசாரிக்கிறார்.
இது பாக்கியாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கோபி அங்கிருந்து போனதும் ஈஸ்வரி நான் சொன்னேன் பார்த்தியா இப்போ கோபி ரொம்பவே மாறிட்டான். உன் குடும்பத்து மேல எல்லாம் அக்கரை காட்டுறான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் இனியா பாக்யாவுக்கு போன் செய்கிறார். அப்போது பேச்சுவாக்கில் கோபி மன மாற்றம் குறித்து பாக்கியா இனியாவிடம் சொல்ல, அதற்கு இனியா நான் பாட்டி பற்றி கேட்டேன், அதற்கு உன்னுடைய குடும்பத்தை பற்றி அப்பாவுக்கு எதுவும் தெரியலையே என்று ரொம்ப வருத்தப்பட்டார். அதனால் உன்கிட்ட விசாரிச்சு இருப்பாரா இருக்கும் என்று சொல்கிறார்.
அந்த நேரத்தில் சுதாகர் நிதிஷை திட்டும் சத்தம் கேட்டதும் போனை அவசரமாக கட் பண்ணி விட்டு கீழே வந்து பார்க்கிறார். அப்போது நிதீஷ் போதையில் இருக்க அதற்கு சுதாகர் கோபப்பட்டு திட்டிக் கொண்டிருக்கிறார். இந்த பழக்கத்தை விட்டுரு என்று எத்தனை முறை சொன்னேன்? நீ மீண்டும் மீண்டும் இப்படியே பண்ணிட்டு இருக்குற? இவனுக்காக இனி யாருகிட்ட போய் நான் பேசமாட்டேன் என்று கோபமாக திட்டிக் கொண்டிருக்கிறார்.
அதோடு அம்மாவும் பையனும் என் வாழ்க்கையில வந்த பிறகு என்னுடைய நிம்மதியே போயிடுச்சு என்று சுதாகர் திட்ட, அதற்கு கோபமான சந்திரிகா நாங்க ஒன்னும் சும்மா இருக்கல நாங்க பணம் காசோடு தான் இருந்தோம், அதை தெரிஞ்சுக்கிட்டு தானே எங்க கூட வந்து சேர்ந்தீங்க என்று திட்டுகிறார். இதைக் கேட்டு இனியா அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். பிறகு இனியா நிற்பதை சுதாகர் பார்த்ததும் சமாளிக்கிறார். உடனே நிதிஷை ரூமுக்கு கூட்டிட்டு போகிறார்.
பிறகு அங்கிருந்து சுதாகரும் அவருடைய மனைவியும் போனதும் இனியா நிதிஷிடம் சென்று இந்த பழக்கத்துக்கு அடிமையானவங்க இதிலிருந்து வர முடியாதுன்னு சொல்றாங்க நீங்க ப்ளீஸ் இதை மறந்துடுங்க. ஏற்கனவே போலீஸ் வரைக்கும் போயிருக்கீங்க என்று நிதிஷ் பக்கத்தில் போக நிதிஷ் இனியாவை பிடித்து தள்ளி விடுகிறார். இதனால் இனியா கீழே விழுந்து அவருக்கு அடிபட்ட சத்தம் கேட்டு சுதாகர் மற்றும் அவருடைய மனைவி ஓடி வருகின்றனர்.
பிறகு இனியாவை வெளியே அனுப்பிவிட்டு மீண்டும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது சுதாகரின் மனைவி உங்களுடைய பிளான் எனக்கு தெரியாதா? நீங்க எப்பவும் சுயநலகாரன், இனியா அம்மாவின் ரெஸ்டாரண்ட் வேணும்னு ஆசைப்பட்டீங்க அதை அவங்க கிட்ட விலைக்கு கேட்ட போது அவங்க தரல என்கிறதுக்காக தானே நீங்க இனியாவை என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க?
நீங்க ஒன்னும் பாசத்துல பண்ணல என்று சொல்ல, அதற்கு சுதாகர் நிதிஷ் போதை வழக்குல ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்கிறான். அவனுக்கு யாரு பொண்ணு கொடுப்பாங்க? யாருமே கொடுக்கல என்றதால தான் நான் இந்த கல்யாணத்திற்கு முடிவு எடுத்தேன் என்று சொல்கிறார். இதை எல்லாம் இனியா கேட்டு அதிர்ச்சியில் நிற்க்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications