பாக்கியலட்சுமி: நிதிஷை புரட்டி எடுத்த எழில்.. சுதாகர் கொடுத்த அதிர்ச்சி.. பாக்கியா செம பதிலடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூலை 9ஆம் தேதிக்கான எபிசோடில் சுதாகர் வீட்டிற்கு சென்ற எழில், நிதிஷை போட்டு அடித்திருக்கிறார். அதற்கு சுதாகர் என்ன சொன்னார் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா டைனிங் டேபிளில் குடும்பத்தினர் அனைவருக்கும் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது நிதிஷை ரிலீஸ் பண்ணிட்டாங்க என்று பாக்கியா சொல்ல, ஈஸ்வரி விடுதலை பண்ணிட்டாங்களா என்று கேட்க, இல்ல ஜாமீன்ல வெளியே வந்து இருக்கிறானான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது இனியா வந்ததும் எல்லோரும் இனியாவிடம் என்ன விஷயம் நடந்தது என்று கேட்க, நிதிஷ் தன்னுடைய ஆபீசுக்கு வந்து கலாட்டா செய்ததை சொல்கிறார்.

எனக்கு வேலை செய்ற இடத்துல இது மாதிரி பண்றது கஷ்டமா இருக்கு என்று சொல்ல, இனிமேல் ஆபீஸ்லயும், எங்கயுமே உன்னை பார்த்து பேசக்கூடாது அதுக்கு நாங்க பொறுப்பு என்று சொல்கிறார். கோபியும் அதையே இனியாவிற்கு சொல்கிறார். நானும் செழியனும் போய் அவனை அடிக்கப் போறோம் என்று எழில் சொல்ல அதற்கு பாக்கியா இருவரும் இப்போதைக்கு அது மாதிரி எதுவும் பண்ணக்கூடாது, பெரிய பிரச்சனையாகிடும் என்று சொல்கிறார்.
அதற்கு கோபி நான் போய் சுதாகரை பார்த்துட்டு பேசிட்டு வரேன் என்று கிளம்ப பாக்யாவும் வருகிறேன் என்று சொன்னதும் வேண்டாம் நான் மட்டும் போறேன் நாங்களும் வருவோம் என்று சொல்கிறார்கள். அடுத்ததாக இனியாவும் எழிலும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நீ என்கிட்ட எல்லா விஷயத்தை சொல்லுவா ஆனா இந்த விஷயத்தில் ஏன் சொல்லல இனியா? இப்ப கூட இந்த பிரச்சனை பெருசா ஆகலனா நீ அவனை சகிச்சிகிட்டு வாழ பழகி இருப்பியோ என்று கேட்க, அதற்கு இனியா தெரியல என்று சொல்கிறார்.
அவங்க அப்பா அம்மா இதை பத்தி எதுவுமே பேசலையா என்று கேட்க, அவங்க என் மேல பழியை போடுறதிலேயே தான் இருந்தாங்க ஆகாஷ் விஷயம் தெரிஞ்சதால அதனாலதான் இன்னைக்கு இப்படி ஆகிட்டான்னு என்ன ப்ளோம் பண்ணிக்கிட்டே இருந்தாங்க என்று சொல்லி, கண் கலங்க எழில் ஆறுதல் சொல்கிறார். பிறகு இந்த கல்யாண வாழ்க்கை மறந்துடனும் நான் பழைய மாதிரி வேலைக்கு போயிட்டு இருந்திக்கிறேன் என்று சொன்னதும், கண்டிப்பா நீ சந்தோஷமா இருப்ப என்று எழில் சொல்கிறார்.
மறுபக்கத்தில் சுதாகர் நிதிஷை கூப்பிட்டு சாப்பிட கூப்பிட சுதாகர் எனக்கு சாப்பாடு வேண்டாம் உன் மகனை கூட்டிட்டு போய் அவனுக்கு ஊட்டி விடு என்று கோபப்படுகிறார். அதற்கு என்ன ஆச்சு என்று சந்திரிகா கேட்க, நான் அந்த இனியாவை கூட்டிட்டு வரல என்கிற கோவத்துல இவரு இப்படி பேசுறாரு. நான் அதற்காகத்தான் முயற்சி பண்ணுனேன் ஆனா அவ என்ன செக்யூரிட்டியை வச்சு துரத்தி விட்டு இருக்கா என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது கோபியும் செழியன், எழில் எல்லோரும் வருகின்றனர்.
சுதாகர் அவரை உட்கார சொல்ல நாங்கள் உக்கார வரல பேச வருகிறோம் என்று சொல்கின்றனர். அப்போது இனியா ஆபீஸ்க்கு எதுக்கு போனா என்று கேட்க, அவன் வைஃபை பார்ப்பதற்காக அவன் போனான் என்று சந்திரிகா சொல்கிறார். என் தங்கச்சிக்கு இந்த கிரிமினல் புருசனா ன்று எழில் கோபப்பட கோபி அமைதியாக இருக்க சொல்கிறார். அதற்கு நித்திஷ் அப்படித்தான் போவேன் என்று சொன்னதும் எழில் கோபப்பட்டு அடிக்கிறார். அதனால் அங்கு அடிதடி ஏற்படுகிறது. பிறகு எழிலை கோபி சமாதானம் செய்து வெளியே அழைத்து வரும்போது சுதாகருக்கு வார்னிங் கொடுத்து விட்டு வருகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications