உடையுது பிம்பம்.. பிரியங்கா சம்பளம் ரூ.3 லட்சம் கிடைக்கலாம்! கலாச்சார சீரழிவை தந்த விஜய் TV: பிரபலம்
சென்னை: தமிழ்நாட்டில் கலாச்சார சீரழிவுக்கு 100 சதவீதம் காரணம் விஜய் டிவிதான். வடஇந்திய ஆதிக்கத்தின் பிடியில், அதிலும் ஒரு கட்சியின் கன்ட்ரோலில் சேனல் உள்ளது.. எனினும், கலாச்சார சீரழிவின் உருவாக்கமே விஜய் டிவிதான் என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
கடந்த வாரம் Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "அம்பானியின் கலர்ஸ் டிவி, ஸ்டார் விஜய்யை வாங்கியிருக்கிறது.. இதனால் கலர்ஸ் டிவி நிகழ்ச்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையையும் பாதியாக குறைத்துவிட்டனர்.. கலர்ஸ் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளை சுருக்கிவிட்டு, ஒரு டம்மி டிவியாக கலர்ஸ் சேனலை வைத்து கொண்டு, விஜய் டிவியின் பிரதான நிகழ்ச்சிகளை அதில் ஒளிபரப்பு செய்யக்கூடும்.

நீயா நானா ஒளிபரப்பாகுமா
அப்படியானால் நீயா நானா கோபிநாத் தலை தப்பிப்பாரா? மகாபா தப்பிப்பாரா? தெரியவில்லை. நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத்துதான் நடத்த வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். எனவே புதிய நிர்வாகம் முடிவு செய்தால், கோபிநாத் தொடரவும் வாய்ப்புள்ளது.
கோபிநாத்தை பொறுத்தவரைக்கும், அவருக்கு ஒரு மன வருத்தம் உள்ளது.. அதாவது, தமிழ்நாட்டில் இருந்து, தமிழ் பிரமுகர்களை தலைமை பொறுப்பில் வைத்தே விஜய் டிவியை இதுநாள் வரை செயல்படுத்தினார்கள்.. ஆனால், இனிமேல் மும்பையிலிருந்து விஜய் டிவியை நடத்த போகிறார்களாம். அதாவது மும்பையிலிருந்து வரும் உத்தரவுகளின்படியே, இங்கு சென்னையில் விஜய் டிவி சேனல் செயல்படும்" என்றெல்லாம் கூறியிருந்தார்.
பாஜக பிம்பம்
இந்நிலையில் King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "விஜய் டிவியை விலைக்கு வாங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.. நீயா நானா நிகழ்ச்சியை சன்டிவி நடத்த மாட்டார்கள்.. ஏனென்றால் அது திமுகவின் அக்மார்க் டிவி.. விஜய் டிவியில் பார்ப்பனர் ஆதிக்கம், குறிப்பாக வட இந்தியர்களின் ஆதிக்கம் உள்ளது.. அதனால், அந்த சேனல ஆர்எஸ்எஸ்-ன் பிம்பமாக, பிஜேபியின் பிம்பமாக உள்ளது.
கோபிநாத் போன்றோர் சன் டிவிக்கு போய்விட்டால், திமுகவை ஆதரிப்பதை தவிர அவருக்கு வேற வழியில்லை. எல்லாருடைய ஆட்டமும் இத்துடன் அடங்க போகிறது. அதனால்தான் பிரியங்காவும், வசியை கல்யாணம் செய்து கொண்டு, லண்டன் போய்விட்டார்,. இதெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு விட்டார்கள். லண்டன் குடியுரிமை பிரியங்காவுக்கு கிடைக்கும்.. அங்கே எந்த வேலை பார்த்தாலும் 3 லட்சம் சம்பளம் கிடைக்கும்.
உடையுது பிம்பங்கள்
விஜய் டிவி நிர்வாகத்துக்கு மிகவும் வேண்டியவர் பிரியங்கா.. அதை எதிர்த்துதான், பல மணிமேகலைகள் வெளியேறினார்கள்.. நிர்வாகத்துக்கு தேவையான அனைத்து மறைமுக வசதிகளையும் பிரியங்கா மூலம் நடந்து கொண்டிருந்தது. அதற்காகவே விஜய் டிவி நிர்வாகத்தினால் பிரியங்கா பாதுகாக்கப்பட்டார். இப்போது அந்த பிம்பங்கள் எல்லாம் உடையுது..
தமிழ்நாட்டில் கலாச்சார சீரழிவுக்கு 100 சதவீதம் காரணம் விஜய் டிவிதான். வடஇந்திய ஆதிக்கத்தின் பிடியில், அதிலும் ஒரு கட்சியின் கன்ட்ரோலில் சேனல் உள்ளது.. எனினும், கலாச்சார சீரழிவின் உருவாக்கமே விஜய் டிவிதான். அம்பானியின் கைக்கு இப்போது சேனல் போய்விட்டது. ஆனால் அனைத்தையும் மக்களே பார்த்து கொள்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications