விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் பிரைம் டைம் சீரியல்.. கதாநாயகன் வெளியிட்ட பதிவு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக செய்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் சமீர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சீரியல்கள் நாளுக்கு நாள் மக்கள் மனதில் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில சீரியல்கள் திடீரென்று அடுத்தடுத்து முடிவுக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே கடந்த வாரத்தில் சன் டிவியில் டாப் சீரியலாக இருக்கும் எதிர்நீச்சல் சீரியல் திடீரென முடிவுக்கு வந்தது.

அதை தொடர்ந்து இப்போது விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த ஒரு சீரியலும் முடிவுக்கு வர இருக்கிறது. அது மோதலும் காதலும் சீரியல்தான். இந்த சீரியல் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்று சீரியலில் சாயல் தான். இந்த சீரியலில் நடித்து தான் நடிகை பிரியா பவானி சங்கர் வெள்ளி திரையில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதுபோல இப்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. ஆனால் இந்த சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர இருப்பதாக செய்தியை வெளியாகி இருக்கிறது. இது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பொதுவாக விஜய் டிவி சீரியலுக்கு அதிகமான இளைஞர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். அதுபோல இளைஞர்களை கவரும் வகையிலேயே மோதலும் காதலும் சீரியல் இருந்து வருகிறது. ஆனாலும் இந்த சீரியல் திடீரென முடிவுக்கு வருவதற்கு காரணம் என்னவென்று அதிகாரப்பூர்வமாக சேனல் தரப்பில் இருந்து எதையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் சமீரிடம் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் உண்மையாகவே மோதலும் காதலும் சீரியல் முடிவுக்கு வர இருக்கிறதா? என்று கேட்டிருந்த நிலையில் அதற்கு சமீர் ஆமாம் என்று சொல்லி சிரிக்கிற ஒரு இமோஜியை பதில் கொடுத்து இருக்கிறார். இது இந்த சீரியலின் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி இருப்பதாக அதிகமான கமெண்டுகள் குவிந்து வருகிறது.
மோதலும் காதலும் சீரியலில் விக்ரம் வேதாவிற்கு அதிகமான ஃபேன்ஸ் பாலோவர்ஸ் இருக்கின்றனர். அவர்கள் இந்த செய்தியை வருத்தமாக பகிர்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த சீரியல் முடிவுக்கு பிறகு பணிவிழும் மலர்வனம் என்ற சீரியல் இதே நேரத்தில் ஒளிபரப்பாக இருக்கிறதா? என்ற கேள்விகளும் எழும்பி வருகிறது.
காரணம் பணிவிழும் மலர்வனம் என்ற சீரியலின் ப்ரோமோ ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது. அந்த சீரியலில் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் கதாநாயகனாக நடித்த நடிகர் சித்தார்த் தான் இந்த சீரியலிலும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். ஆனாலும் மோதலும் காதலும் சீரியல் முடிவடைந்த பிறகு என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications