Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீயா நானா விவாகரத்து.. மணமுறிவுக்குப் பின் வெளிப்பட்ட அன்பு.. நட்போடு பழகலாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணமுறிவு என்கிற உச்சக்கட்டமான முடிவை தெளிவாகவும் தீர்க்கமாகவும் எடுத்த பிறகு அதைப் பற்றி வருந்துவதில், அனத்துவதில் ஒரு உபயோகமுமில்லை என்று சுரேஷ் கண்ணன் கூறியுள்ளார். மணமுறிவு செய்தவர் என்பதாலேயே இரு தனிநபர்களும் எதிரிகள் ஆகி விடுவதில்லை என்று விஜய் டிவி நீனா நானா நிகழ்ச்சி பற்றி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் சுரேஷ் கண்ணன்.

விஜய் டிவியில் ஞாயிறன்று ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் விவாகரத்து பெற்றவர்கள் தங்கள் எண்ணங்கள் வேதனைகளை வெளிப்படுத்தினர். அதில் ஒருவர் விவாகரத்து பெற்று பல ஆண்டுகள் ஆன பின்னரும் தனது துணை மீது காதலுடன் இருப்பதை வெளிப்படுத்தினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்த நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சி பற்றி பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் சுரேஷ் கண்ணன்.

Vijay TV Neeya Naana Divorce and Society suresh kannan facebook post

மணமுறிவு பெற்ற பெண் Vs சமூகம் என்கிற தலைப்பில் ஒளிபரப்பான 'நீயா நானா' நிகழ்ச்சி பார்த்தேன். சட்டென்று தோன்றியது இதுதான். டைவர்ஸ் என்பது நார்மலைஸ் செய்யப்பட வேண்டிய அதே சமயத்தில், இது ஃபேஷன் ஆகி விடக்கூடாத அபாயத்தையும் பார்க்க வேண்டும்.

பெண்கள், குடும்பத்தை குறிப்பாக கணவரைச் சார்ந்திருக்க வேண்டிய காலக்கட்டங்களில், விவாகரத்து என்பது குறைவான சதவீதத்தில் இருந்தது. அவர்கள் பல்வேறு துயரங்களையும் புழுக்கங்களையும் வேறு வழியில்லாமல் உள்ளுக்குள் சகித்துக் கொண்டிருந்தார்கள்.

பிறகு நிலைமை மாறிய பின்பு, நவீன காலத்து பெண்கள் பொருளாதார சுதந்திரமும் விழிப்புணர்வும் பெறத்துவங்கிய பிறகு விவாகரத்தின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. 'வெச்சா குடுமி, சிரைச்சா மொட்டை' என்பது மாதிரி இரண்டுமே ஆரோக்கியமல்லாத சூழல்தான்.

இந்த நிகழ்ச்சியின் தலைப்பை பெண்கள் மணமுறிவு என்று குறிப்பிட்ட பாலினத்தை வைத்து தேர்வு செய்ததிலேயே தன்னிச்சையான சார்பு நிலை வந்து விட்டது. ஒரு பெண் விவாகரத்து கோருகிறார் என்றால், ஆணின் தரப்பில்தான் தவறு இருக்கும் என்று முற்போக்கு மனங்கள் தன்னிச்சையாக கணக்குப் போட்டு விடுகின்றன.

இரு தனிநபர்கள் சம்பந்தப்பட்ட வாழ்க்கையை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் யூகிப்பதும் தீர்வு சொல்வதும் சிரமமானது மட்டுமல்ல, முறையானதும் அல்ல. விவாகரத்து பெற்ற, இரண்டு ஆண்கள் தங்களின் தனிப்பட்ட மனப்புழுக்கங்களை இதில் பகிர்ந்து கொண்ட பின்னர்தான் நிகழ்ச்சியின் தராசு சற்றாவது சமநிலைக்கு வந்தது.

'விவாகரத்து என்பது ஒரு பெண்ணுக்கு சுதந்திரம் அளிப்பது' என்று பொதுவாக நம்பப்பட்டாலும் இதில் வெளிப்பட்ட தரப்புகள் வேறு கோணங்களை அளித்தன. 'சற்று நிதானித்திருந்தால் மணமுறிவை தவிர்த்திருக்கலாமோ?" என்று காலங்கடந்து பலர் துயரப்பட்டனர். தங்களின் முன்னாள் இணையர் மீதிருந்த அன்பின் ஏக்கத்தை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினர்.

எனில் ஏதோவொரு உணர்ச்சி வேகத்தில், புற அழுத்தம் காரணமாகவே அந்த முடிவு அப்போது எடுக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது. அவர்கள் ஏன் இன்னொரு துணையைத் தேடிக் கொள்ள முடிவு செய்யவில்லை என்கிற கேள்வியும் எழுந்தது. மணமுறிவு பெற்றவர்களுக்கு சமூகம் தரும் அழுத்தங்களையும் பலர் சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்.

ஓர் உறவு முற்றிலுமாக துண்டிக்கப்படுவதென்பது உச்சக்கட்டமான முடிவு. இதில் இரு தரப்பிலும் தெளிவு இருக்க வேண்டும். அகங்காரம், உணர்ச்சியின் அழுத்தம், மற்றவர்களின் ஆலோசனை போன்றவை இவற்றில் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கவே கூடாது. விட்டுக்கொடுத்தலும் சகித்தலும் என்பது இரு தரப்பிலும் சமமாக நடக்க வேண்டும். பொதுவாக பெண்கள்தான் இந்தச் சுமையை அதிகம் சுமக்கிறார்கள் என்பதை ஆண்கள் உணர வேண்டும்.

மணமுறிவு என்கிற உச்சக்கட்டமான முடிவை தெளிவாகவும் தீர்க்கமாகவும் எடுத்த பிறகு அதைப் பற்றி வருந்துவதில், அனத்துவதில் ஒரு உபயோகமுமில்லை. மணமுறிவு செய்தவர் என்பதாலேயே இரு தனிநபர்களும் எதிரிகள் ஆகி விடுவதில்லை. அதுவொரு ஒப்பந்த முடிவு மட்டுமே. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவர்கள் சந்தித்து நட்புணர்ச்சியோடு அளவளலாம்.

தன்னுடைய முன்னாள் துணையின் மேன்மையான குணங்களைப் பற்றி ஒரு பெண்மணி (டாக்டர்?!) மிகச் சிறப்பாக சிலாகித்துச் சொன்னார். "எனில் உங்கள் கணவரோடு நீங்கள் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா?" என்பதை கோபிநாத் கேட்ட போது அதை உறுதியாக மறுத்து விட்டுச் சொன்னதில் தெளிவான லாஜிக்கும் தீர்மானமும் இருந்தது. 'ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது' என்று பதிவிட்டுள்ளார் சுரேஷ் கண்ணன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+