Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்மலா சீதாராமன் கால்ல ஒருத்தர் விழுந்தாரே? திமுக முத்திரை குத்தப்பட்ட விஜய் டிவி கோபிநாத்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை பெண் ஒருவர், பாட்டு போட்டியில் முதல் பரிசு பெற்றிருந்தார்.. ஆனால், மனசாட்சியே இல்லாமல் அந்த பெண்ணை 2வது இடத்துக்கு தள்ளிவிட்டது விஜய் டிவி.. இலங்கை அகதி பெண் எப்படி முதல் பரிசு வாங்கலாம்? என்பதுதான் இதன் நோக்கம்.. அந்தவகையில், பாஜகவின் பிடியில் விஜய் டிவி உள்ளது.. கோபிநாத் மீது திமுக முத்திரை குத்தப்பட்டுள்ளது" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

Kingwoods சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன்.. அதில்,"மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தமிழகத்தில் அதிகமாக உள்ளது.. தாய்மொழி & ஆங்கிலம், என இரு மொழி கொள்கை மட்டுமே போதும் என்று பலரும் சொல்கிறார்கள்.. ஹிந்தி தேவையில்லை என்கிறார்கள்.
வடஇந்தியாவில் ஆங்கிலமே கற்பிக்கப்படுவதில்லை.. வெறும் இந்தி மட்டும்தான் உள்ளது.. அப்படியிருக்கும்போது எதுக்காக அவங்களுக்கு மும்மொழி கொள்கை? பல மொழிகளை இந்தி அங்கு அழித்துள்ளது..

Television Gopi nath Vijay TV

எல்.முருகனுக்கு தரப்பட்ட பதவி

பாஜகவை பொறுத்தவரை பாசிச கட்சி.. தனக்கு எதிராக எந்த கருத்தும் உருவாகிட கூடாது என்று நினைக்கிறது.. ஆர்எஸ்எஸ் பிஜேபியை பொறுத்தவரை, திட்டமிட்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது.. அதன் தொடர்ச்சியால்தான் விஜய் டிவி மிரட்டப்பட்டுள்ளது.

எல்.முருகனுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் பதவியை ஒதுக்க காரணமே இதுதான். தமிழ்நாட்டில் தொலைக்காட்சிதான் ஆளுமை செலுத்துகிறது.. அரசியலை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறது.. அதனால்தான், அவைகளை கட்டுப்படுத்துவதற்காகவே இணை அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.


அரசியல் + திரைப்படங்கள்

திமுகவுக்கு கலைஞர் டிவி, சசிகலாவுக்கு ஜெயா டிவி, சிறுத்தைகளுக்கு வெளிச்சம், மதிமுகவுக்கு மதிமுகம், பாமகவுக்கு ஒரு சேனல் என ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு சேனல் உள்ளது..

எனவே, அதிகமாக அரசியல் செய்ய இவர்களுக்கு தொலைக்காட்சிதான் உதவுகிறது.. அதுமட்டுமலலாமல, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, சீமான், விஜய், என அனைவருமே சினிமாவை சார்ந்தவர்கள். இதனால் திரைத்துறையின் ஆதிக்கமும், அரசியலில் அதிகமாக உள்ளது. இவைகளை எல்லாம் கட்டுப்படுத்திவிட்டால், தமக்கு எதிரான கருத்து மக்களிடம் உருவாகாது என்று பாஜக நம்புகிறது.

முத்திரை குத்தப்பட்ட கோபிநாத்

வடஇந்தியாவில் பாஜக சொல்வதுதான் வேதம். அங்கு பாஜகவுக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது. பாஜக ஆட்கள் ஊடுருவாத இடமே இல்லை.. திமுகவின் அஜென்டாவுக்கு வேலை செய்கிறீர்கள் என்று விஜய் டிவி கோபிநாத் மீது பிஜேபி, குற்றச்சாட்டை வைத்திருக்கிறதாம்.

ஏற்கனவே பாஜகவுக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் வேலை செய்கிறார் என்று குற்றஞ்சாட்டிதான், புதிய தலைமுறை சேனலிலிருநது குணசேகரனை நீக்கினார்கள். எல்லா விவாதமும் திமுகவுக்கு ஆதரவாக உள்ளதாக, குணசேகரன் மீது அப்போது குற்றஞ்சாட்டப்பட்டது.

இப்போது, கோபிநாத்துக்கும் அதே அழுத்தம் தரப்பட்டுள்ளது. விஜய் டிவியில் கோபிநாத் இருக்கும்வரை, திமுகவுக்கு ஆதரவாகத்தான் நிகழ்ச்சியை நடத்துவார் என்று பாஜக நினைக்கிறது. ஆகமொத்தம் திமுக நபராகவே கோபிநாத் முத்திரை குத்தப்பட்டுள்ளார்.


கம்பெனி பாலிசி

ஆனால் உண்மை அதுவல்ல. இங்கே இயற்கையாகவே மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு இருக்கிறது. மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அதிகமா? இருமொழி கொள்கைக்கு ஆதரவு அதிகமா? என்று பாஜகவே ஒரு சர்வே எடுத்து பார்க்கட்டுமே?

விஜய் டிவியின் முகமாக கோபிநாத் விளங்கி வருகிறார் என்றாலும், நிறுவனத்தை பொறுத்தவரை பாலிசி மிகவும் முக்கியம். பாஜக சொல்வதை தட்டவும் முடியாது. பச்சமுத்துவுக்கு அப்படியொரு நிலைமை அன்று வந்ததால்தானே குணசேகரனை வெளியேற்ற வேண்டியிருந்தது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அன்னபூரணா ஓட்டல் நிறுவனர், நிர்மலா சீதாராமன் காலில் விழுந்தாரே? ஒரு பெண்ணின் காலில், மிகப்பெரிய தொழிலதிபர் விழவைக்கப்பட்டார். அதேபோலத்தான், கோபிநாத்தும், அண்ணாமலையின் காலில் விழுந்தால் மன்னிக்கப்படுவார்.. ரட்சிக்கப்படுவார். அல்லது வேறு தொலைக்காட்சியை கோபிநாத் தேடி செல்ல வேண்டிவரும்.

இலங்கை பெண் ஒருவர், பாட்டு போட்டியில் முதல் பரிசு பெற்றிருந்தார்.. ஆனால், மனசாட்சியே இல்லாமல் அந்த பெண்ணை 2வது இடத்துக்கு தள்ளிவிட்டது விஜய் டிவி.. இலங்கை அகதி பெண் எப்படி முதல் பரிசு வாங்கலாம்? என்பதுதான் இதன் உள்நோக்கம்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+