கோபிநாத் மீது திமுக முத்திரை? விஜய் டிவியில் இனி வர மாட்டாரா.. சேனலின் புளிச்ச நிகழ்ச்சிகள்: பிரபலம்
சென்னை: விஜய் டிவி அம்பானி கைக்கு கைமாறி 4 மாதம் ஆகிவிட்டதாகவும், எனவே, விஜய் டிவியின் சேனல் பொலிவுப்பட்டு, புத்தும் புதிய நிகழ்ச்சிகளுடன் வெளியாகும் என்கிறார்கள்.. இதுகுறித்து 3 மாசத்தில் முடிவு எடுக்கப்பட்டுவிடும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோபிநாத் நடத்திய நீயா நானா நிகழ்ச்சி மீண்டும் இடம்பெறுமா? கோபிநாத் மீண்டும் அதை நடத்துவாரா? என்பது குறித்த விவாதம் சோஷியல் மீடியாவில் வெடித்துள்ளது.
விஜய் டிவியை கலர்ஸ் டிவி வாங்குவதாக தெரிகிறது.. கலர்ஸ் டிவியின் நிகழ்ச்சிகளை சுருக்கிவிட்டு, டம்மி சேனலாக வைத்துக்கொண்டு, விஜய் டிவியின் பிரதான நிகழ்ச்சிகளை அதில் ஒளிபரப்பு செய்வார்கள்.

இதில், நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் நடத்த வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். மும்பையிலிருந்து வரும் உத்தரவுகளின்படியே, விஜய் டிவி சேனல் செயல்பட போவதாக தெரிகிறது. இந்த பரபரப்புக்கு நடுவில் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, Fine TIme Cine என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அதில், மும்மொழி கொள்கையை, கோபிநாத் கையில் எடுத்ததால்தான், விஜய் டிவியை விட்டு வெளியேற்றம் செய்யப்படுகிறாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சேகுவேரா, "மும்மொழி கொள்கையை பேசியதால்தான், நீயா நானா கோபியை விஜய் டிவயிலிருந்து வெளியேற்ற போவதாக கூறுகிறார்கள்.. அப்படியெல்லாம் இருக்காது.. அவருக்கு நெருக்கடி வந்தது உண்மைதானே தவிர, இதற்காகவே சேனலை விட்டு வெளியேற்றுவதாக சொல்வதை ஏற்க முடியாது. நிகழ்ச்சி மாற்றப்பட நேர்ந்தால், அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.
மும்மொழி கொள்கை
நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை.. எல்லா வகையான டாபிக்குகளையும் எடுத்து விவாதித்தாகிவிட்டது. எல்லா தலைப்பிலும் பேசியாச்சு.. அதிலும் வருஷக்கணக்காக பேசியாகிவிட்டது. இதுபோக, நீயா நானா போன்ற விவாத நிகழ்ச்சிகளை மற்றவர்களும் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்..
இதற்கு பிறகு வேறு என்னென்ன கண்டென்ட்களை வைத்து அவரால் நிகழ்ச்சி நடத்த முடியும்? அதனால்தான் சமீபகால பிரச்சனையான மும்மொழி கொள்கையை எடுத்து விவாதத்தை நடத்தினார்.. ஆனால், அதை ஒளிபரப்ப அனுமதிக்கவேயில்லை.. அப்படியானால், டாபிக்கும் இல்லாமல், எடுத்த டாப்பிக்கையும் ஒளிபரப்பு செய்ய விடாமல் போனால், கோபிநாத் என்னதான் செய்வார்?
கோபிநாத் திறமைசாலி
ஒன்று, நீயா நானா நிகழ்ச்சியை மாற்றியமைக்கணும்? அல்லது கோபிநாத்துக்கு சுதந்திரம் தரவேண்டும். அப்படி கோபிநாத்துக்கு சுதந்திரம் தந்தால், இறங்கி அடிப்பார்.. புதுபுது கன்டென்ட்களை அவரால் எடுத்து பேச முடியும். அந்த அளவுக்கு திறமைசாலி..
அவ்வளவு ஏன்? தவெகா இளைஞர்கள் ஒருபக்கமும், திமுக தொண்டர்கள் மறுபக்கமும் என இரு தரப்பினரையும் உட்கார வைத்துக்கூட நீயா நானா நிகழ்ச்சியையும் அவரால் செய்ய முடியும்.. இந்த அளவுக்கு அனுபவம் வாய்ந்த நபராக கோபிநாத் இருந்தாலும், அவருக்கான சுதந்திரம் கிடையாது. இனிமேல் நீயா நானா நிகழ்ச்சியையும் அவரால் நடத்த முடியாது. ஏனென்றால், அந்த நிகழ்ச்சியையே நிறுத்தும் அளவுக்கு சென்றுவிட்டார்கள்.. இனிமேல் கோபிநாத் என்ன செய்வார்?
குக் வித் கோமாளி
யாரை எங்கே எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாதவர்கள் விஜய் டிவியிலுள்ள மேனேஜிங் ஒருங்கிணைப்பாளர்கள் .. ஏனென்றால், கோபிநாத்தை குக் வித் கோமாளிக்குகூட ஒருமுறை அழைத்து சென்றது. செஃப் தாமுவை வைத்து, நீயா நானா நிகழ்ச்சியையும் கூட இவர்கள் நடத்துவார்கள்.
கலக்க போவது யாரு நிகழ்ச்சியில பங்கேற்ற போட்டியாளர்களையே, ஜட்ஜ் ஆகவும் உட்கார வைக்கிறார்கள். மொத்தத்தில் விஜய் டிவி நிகழ்ச்சிகள் புளித்த மாவாகிவிட்டது. புதுசா ஏதாவது சிந்தித்தால்தான் இனி முடியும்.. பிராண்டுகள் விழுந்துவிட்டதால், அதை இன்னொரு சேனல் விலைக்கு வாங்கி கொள்கிறது. இனி இந்த நிகழச்சிகளை வைத்து அவர்கள் என்ன செய்ய போகிறார்கள், அது எப்படி இருக்கபோகிறது? என்பது இனிமேல்தான் தெரியும்" என்றார்.
மும்மொழிக்கொள்கை
சில நாட்களுக்கு முன்பு Kingwoods சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தந்திருந்த பேட்டியில், "விஜய் டிவியில் கோபிநாத் இருக்கும்வரை, திமுகவுக்கு ஆதரவாகத்தான் நிகழ்ச்சியை நடத்துவார் என்று பாஜக நினைக்கிறது. எனவே, திமுக நபராகவே கோபிநாத் முத்திரை குத்தப்பட்டுள்ளார்.
ஆனால் உண்மை அதுவல்ல. இங்கே இயற்கையாகவே மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு இருக்கிறது. மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அதிகமா? இருமொழி கொள்கைக்கு ஆதரவு அதிகமா? என்று பாஜகவே ஒரு சர்வே எடுத்து பார்க்கட்டுமே?
டிவியின் பாலிசி முக்கியம்
விஜய் டிவியின் முகமாக கோபிநாத் விளங்கி வருகிறார் என்றாலும், நிறுவனத்தை பொறுத்தவரை பாலிசி மிகவும் முக்கியம். பாஜக சொல்வதை தட்டவும் முடியாது. பச்சமுத்துவுக்கு அப்படியொரு நிலைமை அன்று வந்ததால்தானே குணசேகரனை வெளியேற்ற வேண்டியிருந்தது.
அன்னபூரணா ஓட்டல் நிறுவனர், நிர்மலா சீதாராமன் காலில் விழுந்தாரே? ஒரு பெண்ணின் காலில், மிகப்பெரிய தொழிலதிபர் விழவைக்கப்பட்டார். அதேபோலத்தான், கோபிநாத்தும், அண்ணாமலையின் காலில் விழுந்தால் மன்னிக்கப்படுவார்.. ரட்சிக்கப்படுவார். அல்லது வேறு தொலைக்காட்சியை கோபிநாத் தேடி செல்ல வேண்டிவரும்" என்று தெரிவித்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி












Click it and Unblock the Notifications