பிரியங்கா கணவரை பிரிய காரணம் இதுதானா? அவரே சொன்ன விஷயம்.. கண்ணீரோடு அம்மா அட்வைஸ்
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா அவருடைய கணவர் குறித்து சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனால் தான் பிரியங்கா அவருடைய கணவரை பிரிந்து விட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் பிரியங்காவின் விவாகரத்து குறித்து அவருடைய அம்மாவும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பிரியங்கா விஜய் டிவி பிரபலமான பிரவீன் குமார் என்பவரை 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை சில வருடங்களாக இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் எந்த புகைப்படங்களையும் வெளியிடாமல் இருக்கின்றனர். அதே நேரத்தில் தன்னுடைய கணவர் குறித்து எந்த இடத்திலும் பிரியங்காவும் பேசாமல் தவிர்த்து வருகிறார்.

இந்த நிலையில் தொகுப்பாளனியாக பிரியங்கா 15 வருடங்களாக தன்னுடைய பயணத்தை தொடங்கி வருவதை வைத்து அவருக்கு பிரபல சேனல் ஒன்றில் விழா எடுக்கப்பட்டது. அதில் பிரியங்காவின் அம்மா கலந்து கொண்டிருந்தார். அப்போது பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை அதில் பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டு போய்க் கொண்டிருக்கும் பிரியங்காவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனை மையமாக வைத்து தான் பிரியங்கா பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொண்டால் அவருடைய கேரக்டர் மக்கள் மத்தியில் தவறாக போய்விடும் என்று அவருடைய நண்பர்கள் தடுத்து இருந்த நிலையிலும் அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு பிரியங்கா தைரியமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னராக தேர்வாகியும் இருந்தார். அதே நேரத்தில் பிரியங்கா விஜய் டிவி பிரபலமான பிரவீன் குமார் என்பவரை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவர் பற்றி பல வீடியோக்களில் பேசி வந்த பிரியங்கா கடந்த சில வருடங்களாக எந்த ஒரு பதிவிலும் புகைப்படத்திலும் தன்னுடைய கணவரை பற்றி பதிவிடாமல் இருக்கிறார். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா என்று பலரும் கேள்வி எழுப்பு வருகின்றனர். அதுபோல பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா இருக்கும் போது கணவர் பற்றி பேசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அங்கேயும் பிரியங்கா எந்த இடத்திலும் பேசவில்லை.
ப்ரீஸ் டாஸ்க்கில் கூட பிரியங்காவின் கணவர் கலந்து கொள்ளவில்லை. பிரியங்காவின் அம்மாவும் தம்பியும் மட்டும்தான் கலந்து கொண்டனர். இதனால் பிரியங்கா தன்னுடைய கணவரை பிரிந்து விட்டதாக பலரும் கேள்வி எழுப்பி வரந பிரியங்கா ஒரு வழியாக தன்னுடைய கணவரை பிரிந்து விட்டதாக ஒத்துக் கொண்டார். ஆனால் பிரிவுக்கான என்ன காரணம் என்பதை பற்றி சொல்லாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் பிரியங்கா ஆரம்பத்தில் பேசிய ஒரு வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை தன்னுடைய கணவர் தன்னை வெளியே எந்த இடத்துக்கும் கூட்டிட்டு போவதில்லை என்றும் வார இறுதி நாட்களில் தன்னுடைய நண்பர்களோடு வெளியே செல்வதுதான் அதிகமாக மகிழ்ச்சியாக இருக்கிறார் என்றும் பேசியிருக்கிறார்.
என்னதான் இந்த ஆண்களுக்கு டேஸ்ட்னே தெரியல எப்ப பார்த்தாலும் தன்னுடைய நண்பர்களோடு வெளியில் போறதை சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்காங்க. எப்பவாவது பொண்டாட்டியை கூட்டிட்டு போகணும்னு நினைக்க மாட்டாங்க. நம்ம ஊருக்கு போயிட்டா கூட என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு அவங்க குரூப்ல மெசேஜ் போட்டு சந்தோஷப்படுறாங்க. ஆனா அந்த குரூப்ல நான் இருக்கிறதை கூட மறந்து போயிட்டாங்க என்று அந்த வீடியோவில் அப்போது பிரியங்கா பேசியிருக்கிறார்.

அதை இப்போது சுட்டிக்காட்டி பிரியங்காவிற்கு அவருடைய கணவர் முக்கியத்துவம் கொடுக்காததால் தான் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பிரியங்கா 15 வருடங்களாக தொகுப்பாளியாக இருப்பதால் அவருக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பிரியங்காவின் அம்மாவும் அதில் கலந்து கொண்டிருந்தார்.
அதில் அவர் பிரியங்காவின் திருமண வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். அதாவது பிரியங்கா ஏற்கனவே தன்னுடைய வாழ்க்கையில் செய்த தவறை போல் இனி செய்யக்கூடாது. அவர் சரியான ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அந்த வாழ்க்கையில் பிரியங்கா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஏற்கனவே செய்த ஒரு தவறால் நான் அவரை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு இருக்கிறேன். இனி அது நடக்க கூடாதுன்னு நம்புறேன் என்று சொல்ல, அதற்கு பிரியங்காவும் அழுது கொண்டே தலையாட்டி இருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications