குட்டீஸ்களை தூங்க வச்சுட்டு.. 10 மணிக்கு மேல "இதை" பார்த்து ரசிங்க.. மிரட்டும் அதே கண்கள்.. !

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் இரவு 10 மணிக்கு அதே கண்கள்னு திகில் சீரியல் ஒளிபரப்பாகி பரபரப்பை உண்டாக்கிட்டு இருக்கு.. பேயா, பிசாசான்னு குழம்பி பார்த்தாலும், மோகினி கதைன்னு உறுதி படுத்துறாங்க.

200 ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த ஒரு பெண் இளமையைத் தக்க வச்சுக்க மனிதர்களின் ரத்தத்தை குடித்து, இளமை பிளஸ் வசீகரத்துடன் வாழ்ந்து, இன்னும் இன்னும் என்று ரத்தம் குடிக்க அலைவதுதான் கதை.

Vijay TVs Athe Kangal rocks in night slots

இதற்கிடையில் ஒரு அழகிய இளைஞனிடம் காதல் வவயப்பட்டு, தான் சாதாரண பெண்தான் என்று, நம்ப வைத்து கல்யாணம் செய்து இரு குழந்தைகளையும் பெற்றுக் கொள்கிறாள்.தீய சக்தி தன்னுள் புக மறுபடியும் மனித ரத்தம் குடிக்க ஆசைப்பட்டு, புருஷனையே கொன்று ரத்தம் குடிக்கிறாள்.

பிள்ளைகள் பிழைக்கட்டும் என்று பையனை வேறு குடும்பம் வளர்க்க, நன்றாக சென்று கொண்டிடுந்த குடும்பத்தில் வளர்வது தமது பையன் என்றும், அவனுக்குள் ஒரு அபார சக்தி இருக்கிறது என்றும் கண்டுகொள்கிறாள்..இவர்கள் இருவருக்கும் கண்களில் குண்டு பல்ப் எரிந்தால் அது எதோ பயங்கரம் நடக்கப் போகிறது என்பதன் அறிகுறி

Read Also | அக்கா மாமியார் வம்புக்காரி.. தங்கச்சியோட வருங்கால மாமியார் பெரிய வம்புக்காரி.. கலகல கல்யாண வீடு!

அபார சக்தியை தீய சக்தி மாய வலை என்று மாற்றி மகனையும் கொல்ல துடிக்கும் ஒரு மோகினியின் கதை.. மோகினியின் நீண்ட தலைமுடி, அனுமன் வால் மாதிரி நீண்டு சென்று பல தீய செயல்களை செய்வது, திகிலாக இருந்தாலும் பேய் படம் பார்ப்பது போல சுவாரஸ்யமாக இருக்கிறது.

இரவு 10 மணிக்கு மேல் சீரியல்கள் பார்க்க குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்பதால் வீடுகளில் திகிலை விரும்புபவர்கள் அதே கண்களை தவறாமல் பார்த்து ரசிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+