Baakiyaalakshmi Serial: விஜய் டிவி நட்சத்திரங்கள் எல்லாரும் ஸாரிம்மான்னு கேட்கறாங்களே..!
சென்னை: விஜய் டிவியின் நடிக்கும் சீரியல் நட்சத்திரங்கள் பலரும் தங்களது அம்மாவுக்கு ஸாரிம்மா கேட்கிறார்கள். என்னவென்று பார்த்தால் மார்ச் 16 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் கதை அப்படி.
அந்த சீரியலை ப்ரொமோட் செய்யத்தான் அத்தனை நட்சத்திரங்களும் தங்களது அம்மாவுக்கும் இந்த வேளையில் ஸாரிம்மா கேட்கிறார்களாம். விஜய் டிவியில் பாக்கியலட்சுமி என்கிற சீரியல் ஒரு இல்லத்தரசியின் கதையாம்.
ஒரு இல்லத்து அரசியாக இருக்கும் பெண் பல ஸ்தானங்களில் இருந்து பொறுப்புடன் வேலைகளை பார்த்து பார்த்து செய்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை.. வெளியில் இருக்கும் இல்லத்தரசிகளின் கஷ்டம், சந்தோசம் என்று பல வகையிலும் படம்பிடித்துக் காட்டும் சீரியலாக இது இருக்கும் போல.

பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் இல்லத்தரசி என்பவர் அம்மாவாக, மனைவியாக, மருமகளாக இப்படி எத்தனை பொறுப்புகள் வகிக்கிறாள். அவர் படும் பாடுகள் என்ன.. சில சமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார் இல்லத்தரசியை எப்படி அவமதிக்கிறார்கள். பாக்கியலட்சுமி எல்லாத்தையும் எப்படி அனுசரித்துப் போகிறாள்...

முக்கியமாக பிள்ளைகள்
முக்கியமாக பிள்ளைகள் அம்மாவை எடுத்தெறிஞ்சு பேசி இருப்பார்கள். அப்படி ஒரு காட்சியைத்தான் பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோவில் போடுகிறார்கள். அதாவது சின்ன பெண் நேஹா இதில் பள்ளி மனைவியாக நடிச்சு இருக்கார். இதற்கு முன் இவர் ராதிகாவின் வாணி ராணி சீரியலில் தேனுவாக நடிச்சவர். இதிலும் அதே போல் பள்ளி மாணவியாக நடிச்சு இருக்கார்.

டீச்சர்ஸ் பேரன்ட்ஸ்
சாப்பிட்டுக்கொண்டே நேஹா, அப்பா இன்னிக்கு ஸ்கூலில் டீச்சர்ஸ் பேரன்ட்ஸ் மீட்டிங் இருக்கு வந்துருங்கன்னு சொல்றார். என்னால இன்னிக்கு முடியாது..ஏகப்பட்ட வேலை இருக்குன்னு சொல்றார் அப்பா. அப்பா வரலேன்னா என்னடி.. நான் வரேன்னு பாக்கியலட்சுமி சொல்றாங்க.ம்மா.. இது என்ன கேட்ல நின்னு லஞ்ச கொடுக்கற விவகாரமா... டீச்சர்ஸ் பேரன்ட்ஸ் மீட்டிங்.. வந்துட கிந்துட போறேன்னு சொல்றாங்க.

பிள்ளைகளை இப்படியான
பிள்ளைகளை இப்படியான பள்ளியில் சேர்த்துட்டு பெற்றோர் படும் அவஸ்தைகள் ஏராளம். அந்த கதைதான் இங்கே பாக்கியலட்சுமியின் கதை. இன்னும் ஒரு இட்லி வச்சுக்கோன்னு பையனிடம் கேட்க, இல்லை எனக்கு தோசைதான் வேணும்னு மகன் சொல்றான். உடனே தோசை ஊத்தித் தர்றாங்க பாக்கியலட்சுமி. இப்படி உதாசீனப் படுத்திய அம்மாவுக்கு எப்போதாவது நன்றி, ஸாரி சொல்லி இருக்கோமா.. இதுதான் பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications