தமிழும் சரஸ்வதியும் சீரியலை விட்டு விலகும் கதாநாயகி.. இதுதான் காரணமாம்..!இப்படி ஆகிவிட்டதே..?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசு கேரக்டரில் நடிகை தர்ஷனா ஸ்ரீபால் நடித்து வருகிறார்.
சரஸ்வதியோடு இந்த சீரியலில் வசு இருக்கும் பாசத்தை பார்த்து ரசிகர்கள் அதிகமாக இவரை பாராட்டி வந்தனர்.
இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து தர்ஷனா விலகப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக தமிழும் சரஸ்வதியும் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் கடந்த வாரம் வெளியான பிரமோ ரசிகர்கள் அதிகமாக பார்க்கப்பட்டு ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்தது.

தற்போதைய சூழ்நிலையில் அரிதாக இருக்கும் ஒரே வீட்டில் வாக்கப்பட்ட இரண்டு மருமகள்களின் பாசம் இந்த சீரியலில் காட்டப்படுகிறது. அதுவும் வசு மற்றும் சரஸ்வதி இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் தன்மையை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒவ்வொரு பிரச்சனைகளிலும் இவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் தற்போது தான் வசுவிற்க்கு குழந்தை பிறந்திருக்கிறது வசுவின் உயிரை காப்பாற்றியது சரஸ்வதி தான்.
விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் இந்த சீரியலில் இருந்து வசு விலக போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிகர் தீபக், நட்சத்திரா நாகேஷ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். அந்த கேரக்டரில் இந்த சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் தர்ஷனா ஸ்ரீபால். வட இந்தியாவை சேர்ந்த இவர் திருச்சியில் தனது படிப்பை முடித்து பேஷன் டிசைனுக்காக சென்னை வந்திருக்கிறார். அப்போதான் இவருக்கு சன் டிவியில் தொகுப்பாளி வேலை கிடைத்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து ஆதித்யா சேனலில் இவர் வேலை செய்து கொண்டிருக்கும் போது தான் ராதிகாவுடன் சித்தி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் இவர் சாதுவாக இருந்து பிறகு வில்லியாக மாறும் கேரக்டரில் நடித்து இருப்பார். அதை தொடர்ந்து தற்போது தமிழுன் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கதாநாயகி சரஸ்வதிக்கு இருக்கும் ரசிகர்களை விட இவருக்கு தான் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவருடைய பெயரில் பேன்ஸ் பேஜ் சமூக வலைத்தளத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீரியலை விட்டு விலகுகிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் கதாநாயகியாக இவர் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்னும் எந்த தகவல்களையும் அதிகாரப்பூர்வமாக தர்ஷனா விளக்கம் கொடுக்கவில்லை. அதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications