துல்கர் நடித்த ...கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.. ஏப்ரல் 14ல்.. விஜய்யில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் டிவி துல்கர் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை ஒளிபரப்ப உள்ளது. இளமை துள்ளலான இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி ரிலீசான புத்தம்புது படம்.

உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக விஜய் டிவி இந்த படத்தை ஒளிபரப்ப உள்ளது.ஓகே ஓகே படத்துக்கு பிறகு துல்கர் சல்மானுக்கு வெற்றியை தந்த படம் இது.

vijay tv to telecast dulqar salmans kannum kannum kollai adithal on april 14

என்றாலும், மார்ச் மாதம் 15 ம் தேதியில் இருந்தே தியேட்டர்கள் மால்கள் லாக்டவுன் ஆரம்பித்துவிட... படம் எதிர்பார்த்த வெற்றியை தொடமுடியவில்லை.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஓகே ஓகே படத்தின் மூலம் இளம் பெண்கள், ஆண்கள் என்று இரு பாலாருக்கும் பிடித்த ஹீரோவாக துல்கர் இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படமும் பெரும் எதிர்பார்ப்புடன் திரையிடப் பட்டது.

vijay tv to telecast dulqar salmans kannum kannum kollai adithal on april 14

கடந்த பிப்ரவரி மாதத்தின் கடைசி இரண்டு நாளில் இப்படம் வெளியிடப்பட்டது. ஆரம்ப நாட்களில் ஏகோபித்த ஆதரவுடன் படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருந்தது. திடீரென லாக்டவுன் அமலுக்கு வர மொத்தமே 15 லிருந்து 18 நாட்கள் வரை மட்டுமே தியேட்டர்களில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் ஓடியது.

vijay tv to telecast dulqar salmans kannum kannum kollai adithal on april 14

லாக்டவுனில் தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் என்று எதுவும் இல்லை. வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தான்டு தினத்துக்கு தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு புதுப்படங்களை ஒளிபரப்புவது வழக்கம். இந்த வருடம் அப்படி முடியவில்லை. என்றாலும், விஜய் டிவி ஏப்ரல் 14 அன்று துல்கர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் புதுப் படத்தை ஒளிபரப்ப உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+