பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்களின் வேண்டுகோள் நிறைவேறியது! மாற்றப்பட்ட கதை! எதிர்பாராத முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்ததுபடி கதை வேகமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த சீரியலில் வந்த கதையே ரிப்பீட்டு மோடில் வந்து கொண்டிருப்பது குறித்து ரசிகர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்த நிலையில் சேனல் தரப்பில் இப்போது புது முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதை பற்றி பார்க்கலாம்.

பொதுவாக ஏதாவது ஒரு சில சீரியல்கள் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 1000 எபிசோடுகள் தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் அதுபோல நீண்ட நாட்களுக்கு ஒளிபரப்பாகும் சீரியல்களில் வந்த கதையே மீண்டும் வந்து ரசிகர்களை சோதனை செய்து விடுகிறார்கள். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

Baakiyalakshmi Serial vijay TV

ஆரம்பத்தில் இருக்கும் வரவேற்பு பிறகு மெல்ல மெல்ல குறைய தொடங்கி விடுகிறது. அது போல் தான் சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலிலும் கதை ஒரே டிராக்கில் பயணிப்பது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகி பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு பாக்யாவின் தோழியான ராதிகாவை கோபி இரண்டாவது திருமணம் செய்து விடுகிறார்.

அதற்கு பிறகு நடக்கும் பிரச்சனைகள் பற்றி தான் இந்த கதை பயணித்தது. ஆனால் விவாகரத்துக்கு பிறகு கோபி தன்னுடைய வீட்டை பாக்யாவிடம் விற்றுவிட்டு ராதிகாவுடன் போகிறார். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிவிட்டு மாதத்திற்கு ஒருமுறை பாக்கியா வீட்டிற்கு மீண்டும் வந்து விடுகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

பிறகு ஏதாவது பிரச்சனையாகி பாக்கியா கோபியை வீட்டை விட்டு துரத்துகிறார். ஆனாலும் அடுத்த மாதத்தில் மீண்டும் கோபி பாக்கியா வீட்டுக்கு வருவார். அவரைத் தொடர்ந்து ராதிகாவும் வருகிறார். இது ரிப்பீட் மோடில் மீண்டும் மீண்டும் வருவது குறித்து இணையத்தில் அதிகமான ட்ரோல்கள் எழுந்து வரும் நிலையில் சேனல் தரப்பில் இந்த சீரியல் முடிவுக்கு கொண்டு வர கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதனால் இந்த சீரியல் இந்த மாதத்தோடு முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. அதுபோல இந்த சீரியலில் பாக்யாவை கோபி விவாகரத்து செய்த பிறகு தான் பாக்கியாவின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. அதுபோல இப்பொழுது ராதிகாவும் கோபியை விவாகரத்து செய்து இருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் 8 மாதங்களுக்கு பிறகு என்று கதை வேகமாக தொடங்கப்பட்டிருக்கிறது

பாக்கியலட்சுமி: கோர்ட்டில் ராதிகா சொன்ன வார்த்தை.. பெரும் அதிர்ச்சியில் ஈஸ்வரி.. பாக்யா செய்த செயல்
அதில் ஜெனிக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருப்பது போன்று காட்டப்படுகிறது. எழில் தொடங்கிய படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று இருக்கிறது. அதில் கோபியை எழில் மன்னித்து ஏற்றுக் கொள்கிறார். அதுபோல பாக்கியாவையும் கோபியையும் மீண்டும் சேர்த்து வைப்பேன் என்று ஈஸ்வரி ராமமூர்த்தியின் போட்டோவில் சத்தியம் செய்து இருக்கிறார்.

இதனால் இந்த சீரியலில் முடிவில் எதிர்பாராத டுவிஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி எழில் படம் வெளியாகி வெற்றி அடைவது போன்று இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அது போல சீரியல் முடியும்போது இனியாவிற்கு திருமணம் நடப்பது போன்று காட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.

Baakiyalakshmi Serial vijay TV

எது எப்படியோ ரசிகர்கள் இந்த சீரியலுக்கு என்ட் கார்டு போடுங்க என்று வைத்த வேண்டுகோள் இப்போது நிறைவேற போகிறது. ஆனாலும் பாக்கியலட்சுமி சீரியல் முடிவு அடைவது குறித்து உங்க கருத்து என்ன? இந்த சீரியல் முடிவடைவது நல்லது என்று நீங்க நினைக்கிறீங்களா? அல்லது இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று நினைக்கிறீர்களா? உங்க கருத்தை தட்டி விடுங்க பாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+