முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி சீரியல்! உருக்கமாக கோபி வெளியிட்ட வீடியோ! இனி நடக்கப்போவது இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் இதை உறுதி செய்யும் வகையில் கோபி கேரக்டரில் நடிக்கும் சதீஷ் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சமீபத்தில் வந்த கதையை ரிப்பீட்டு மோடியில் வருகிறது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. ஒரு பெண் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடும் வாழ்க்கையை தான் பாக்கியலட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே காட்டி வந்தனர்.

baakiyalakshmi serial vijay tv

ஆனால் சில மாதங்களாக இந்த சீரியலில் கதையில் பெரிய அளவில் சுவாரசியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ராமமூர்த்தியின் இறப்பிற்கு பிறகு கோபி பாக்யாவிற்கு அடுத்தடுத்து பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டிருந்தாலும் பாக்கியாவின் பிள்ளைகள் பாக்கியாவை உதறிவிட்டு கோபி பக்கம் சாய்வதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் இந்த சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்பது பலருடைய கேள்வியாகவும் இருந்தது. இணையத்தில் கூட இந்த சீரியல் பற்றி அதிகமான ட்ரோல் வெளியாகி வருவதை பார்க்க முடிகிறது. பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை கல்யாணம் செய்த பிறகும் கோபி, பாக்கியாவை பழிவாங்க வேண்டும் என்று பிரச்சனை மேலே பிரச்சனை செய்து கொண்டே இருந்தார்.

ஆனால் நேற்று தன்னுடைய வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போனதற்கு காரணம் ராதிகா தான் என்று மொத்த பழியையும் ராதிகா மீது தூக்கி போட்டு இருக்கிறார். அதோடு கோபிக்கு நெஞ்சுவலியும் வந்திருக்கிறது. பாக்யா தான் கோபியை ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கிறார். அதைத்தொடர்ந்து பாக்யாவின் குடும்பத்தினர் எல்லோரும் ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கின்றனர்.

இதனால் இனி கோபி மீண்டும் பாக்கியா வீட்டுக்கே போய்விடுவாரா? என்ற கேள்விகள் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா? இனி கோபி பாக்யாவை புரிந்துகொண்டு மனம் மாறப் போகிறாரா? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. இதற்கெல்லாம் விடை சொல்லும் வகையில் இன்று சதீஷ் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதில் எல்லோருக்கும் வணக்கம் பாக்கியலட்சுமி சீரியல் 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் கொஞ்ச நாட்களாக எதிர்பார்த்து இருந்த தருணம் இப்போ நடக்கப்போகிறது. இதுவரைக்கும் இந்த சீரியல் மூலமாக எங்களுக்கு ஆதரவு தந்த எல்லாருக்கும் நன்றி. சிலர் தொடர்ச்சியாக சில செயல்கள் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அதனாலேயே இந்த முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.

எது எப்படியோ இந்த சீரியலின் முடிவு இனி ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இருக்கும் என்று கூறி இருக்கிறார். அதைதொடர்ந்து அந்த வீடியோவுக்கு கீழே ரசிகர்கள் பல கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதில் ஒரு ரசிகர் இனியாவது பாக்யாவை நிம்மதியா வாழ விடுங்க என்று சொல்லி இருக்கிறார். அதற்கு ஓகே என்று அவர் சொல்லி இருக்கிறார். இதனால் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+