விஜயகாந்த் மட்டும் அன்னைக்கு இல்லாமல் இருந்திருந்தால்!? நான் இல்ல... கதறி அழுத நடிகர் ஸ்ரீமன்
சென்னை: நடிகர் விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் உலகத்தையும் உலுக்கி எடுத்து இருக்கிறது.
நேற்று நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவினால் இறந்திருந்த நிலையில் அவருடைய இறப்பிற்கு பிரபலங்களும் ரசிகர்களும் கண்ணீரோடு தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
இதில் பிரபல நடிகர் ஸ்ரீமன் விஜயகாந்த் உடன் நடித்த அனுபவங்கள் மற்றும் அவர் பற்றி பல தகவல்களை கண்ணீரோடு பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒருவருடைய வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால் அந்த வாழ்க்கை முடியும் போது நம்மைப் பற்றி பலபேர் நினைக்கிற மாதிரி வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போக வேண்டும் என்பதை பலர் சொல்லி கேட்டிருப்போம். அதை பல மேடைகளில் கர்ச்சிக்கும் குரலோடு விஜயகாந்த் கம்பீரமாக சொல்லிக் கொண்டிருப்போம்.
விஜயகாந்த் பிறவியிலே பணக்கார வீட்டு பிள்ளையாக இருந்தாலும் பல இடங்களில் தன்னுடைய நிறத்தை வைத்து பட்ட அவமானங்கள் ஏராளம். ஆனாலும் தன்னுடைய ஆசை கனவை நிறைவேற்ற வேண்டும் என்று நடிப்பிற்காக எடுத்த முயற்சிகளில் ஆரம்ப காலகட்டத்தில் பல சோதனைகளை தாண்டி பிறகு போராடி வெற்றி கண்டு பிறகு தன்னை போலவே சாதிக்க துடிப்பவர்களுக்கு உறுதுணையாக இருந்ததோடு...
அவர்களுக்காக பல உதவிகளை செய்து பல பேரை வாழ வைத்த விஜயகாந்த் நேற்று இந்த உலகில் தான் செய்த செயல்கள் போதும் என்று நினைத்து விட்டு விண்ணுலகுக்கு சென்று அங்கு பசியோடு இருப்பவர்களுக்கு உணவருந்த சென்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த மண்ணுலகத்தில் பலபேருடைய பசியை தீர்த்த விஜயகாந்துடைய மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் பல பேர் வேதனையோடு துடித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் விஜயகாந்தோடு வல்லரசு, வாஞ்சிநாதன், நரசிம்மா, தவசி, சொக்கத்தங்கம் என பல படங்களில் ஒன்றாக நடித்த நடிகர் ஸ்ரீமன் கண்ணீரோடு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில் இந்த மாதிரி ஒரு நிலைமை வரும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லையே. இன்னைக்கு அண்ணன் விஜயகாந்த் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பலபேர் போல நானும் அவர் இப்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் ஆனால் மீண்டும் அதிலிருந்து எழுந்து பழையபடி வந்துவிடுவார் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் நாங்க எல்லாரும் பாசத்தோடு கூப்பிட்டு இருந்த கேப்டன் விஜயகாந்த் சார் நம்ம கூட இல்லை என்கிற செய்தி வந்திருக்கு. அதை என்னால ஏத்துக்க முடியல.. இப்ப நான் பெங்களூர் ஷூட்டிங்ல இருக்கிறேன். ஆனா என்னோட மனசு எல்லாம் அங்க தான் இருக்கு. பொதுவா ஒவ்வொரு நடிகருக்கும் அவங்களோட வளர்ச்சிக்கு ஒரு சிலர் இருப்பாங்க.

என்னுடைய வளர்ச்சிக்கு விஜயகாந்த் சார் தான் இருந்தாரு. ஒவ்வொரு இடத்திலும் என்னை பாத்து நீ நல்லா நடிக்கிற, சின்சியரா பண்ணுறேன்னு நிறைய அட்வைஸ் கொடுத்தாரு. பொதுவா ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்றால் அவரைப் பற்றி பல நல்ல விஷயங்களை எல்லோரும் பேசுவார்கள். அதில் சில நேரங்களில் மிகைப்படுத்தி பேச வேண்டிய நிலைமை இருக்கும்.
ஆனால் விஜயகாந்த் சாரை பற்றி மட்டும் அப்படி மிகப் படுத்தி பேசவே முடியாது. ஏன்னா அவர் செஞ்ச செயலை சொல்ல முடியாது. அவ்வளவு செஞ்சுருக்காரு. ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் அவரை நேருக்கு நேரா பார்த்து இருக்கேன். அவரோடு அருகில் இருந்து அவரை ரசித்து இருக்கேன். அவ்வளவு அழகாக அவர் பைய்ட் பண்ணுவாரு. ஆனா அவருக்கு இந்த நிலைமை என்பதை என்னால ஏத்துக்கவே முடியல.
கேப்டன பத்தி எல்லாரும் பேசிகிட்டு இருக்கிறது அவர் செஞ்சதுல்ல 20% தான் இன்னும் அவர் எவ்வளவு செஞ்சிருக்காருன்னு வெளியவே தெரியாது. அவ்ளோ விஷயத்தை விஜயகாந்த் செஞ்சி இருக்காரு. இன்னைக்கு அவர் நம்ம கூட இல்ல, இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவர் இன்னும் நல்லா வாழ்ந்திருக்கணும். ஆனால் அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கண்ணீரோடு அந்த பேட்டியில் பேசி முடித்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications