Saregamapa: விஜயபிரபாகரன் ரிங்டோனை கேட்டு! "என்ன பிரேமா பையனுக்கு Love Failure-ஆ"னு கேட்ட விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மயங்கினேன் சொல்ல தயங்கினேன்..." பாடலை ரிங் டோனாக விஜய பிரபாகரன் தனது போனில் வைத்திருந்த போது, விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவிடம் என்ன கேட்டார் என்பதை கூறி அரங்கத்தையே கலகலப்பாக்கிவிட்டார். விஜயகாந்தின் ஹூமர் சென்ஸை கேட்டு சரிகமப அரங்கமே அதிர்ந்தது.

விஜயகாந்த்- கேப்டன், கருப்பு எம்ஜிஆர் என அழைக்கப்பட்டவர். இவர் பெயரை சொன்னாலே மக்களுக்கு நினைவுக்கு வருவது அவர் செய்த அன்னதானம்தான். அவர் நிறைய பேருக்கு கல்வி உதவியையும் செய்துள்ளார். தனது பொறியியல் கல்லூரியில் எத்தனையோ பேருக்கு இலவச சீட் கொடுத்துள்ளார்.

television vijayakanth

விஜயகாந்த் ஒரு படத்தில் நடித்தால் அந்த படத்தில் பணியாற்றும் கடை நிலை ஊழியர் முதல் கஷ்டப்படும் நபர் வரை யாராவது ஒருவராவது அவரால் பயன்பெற்றிருப்பர். அந்த அளவுக்கு கொடை வள்ளல். அதே நேரத்தில் மிகவும் எளிமையானவர்.

சிம்பிள்

ஏழை, பணக்காரன், பெரிய ஹீரோ, சிறிய நடிகர் என்றெல்லாம் எந்த பாகுபாடும் பார்க்க மாட்டார். அவரது நல்ல குணத்திற்கு அவரது இறப்புக்கு வந்தவர்களே சாட்சி. அவரது இறப்பை அவருடைய குடும்பத்தினர், பொதுமக்கள், ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் என யாராலும் ஏற்க முடியவில்லை.

கேப்டன் பிரபாகரன்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட கேப்டன் பிரபாகரன் படம் ரீரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு ஏகோபித்த வரவேற்பை மக்கள் கொடுத்துள்ளனர். அது போல் விஜயகாந்த் தோன்றிய காட்சிக்கு ரசிகர்கள் விசில் அடித்துக் கொண்டாடினர்.

படம் பார்த்த கேப்டன் குடும்பம்

அது போல் கடலூரில் ஒரு தியேட்டரில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன் விஜய பிரபாகரன், மைத்துனர் சுதீஷ், தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி உள்ளிட்டோர் பார்த்து ரசித்தனர்.

கண்ணீர் விட்ட விஜயபிரபாகரன்

அப்போது பிரேமலதா, விஜய பிரபாகரன் ஆகியோர் விஜயகாந்தை பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த நிலையில் ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சியில் விஜயகாந்த் நடித்த பாடல்களை பாடும் ரவுன்டில் நடிகை அம்பிகா, விஜய பிரபாகரன், தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சரிகமப பவித்ரா

அப்போது அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர் பவித்ரா, விஜயகாந்த்- ராதிகா நடித்த படமான நானே ராஜா நானே மந்திரி படத்தில் இடம்பெற்ற மயங்கினேன் சொல்ல தயங்கினேன் பாடலை பாடினார்.

லவ் ஃபெயிலியரா

பாடல் பாடிய பிறகு விஜய பிரபாகரனிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், "இந்த பாடலை நான் ரிங்டோனாக வைத்திருந்தேன். அப்போது அப்பா, "என்ன பிரேமா, நம்ம பையனுக்கு ஏதாவது லவ் ஃபெயிலியரா?" என கேட்டார்.

என்ன பாட்டு

அதற்கு நான் "இல்லைப்பா, எத்தனையோ காதல்களை சேர்த்து வைத்திருக்கிறீர்கள். என் காதலை சொன்னால் செய்ய மாட்டீர்களா" என்ன என கேட்டேன்" என விஜய பிரபாகரன் சொன்னதும் அரங்கில் இருந்தவர்கள் எல்லாம் சிரித்து விட்டனர்.

பவித்ரா யார்

அத்துடன் பவித்ரா, கணவரை இழந்து தனது மகள் நட்சத்திராவை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு வருவதாக கூறியிருந்தார். அவரது நிலையை அறிந்த விஜயபிரபாகரன், "பவித்ரா எனக்கு அக்கா, நட்சத்திராவுக்கு தேவையான கல்வி உதவியை நான் செய்கிறேன். எப்போது எது தேவையானாலும் என்னிடம் கேளுங்கள். சீக்கிரமே நல்ல நாள் பார்த்து சொல்லுங்கள், நட்சத்திராவுக்கு என் மடியில் உட்கார வைத்து காது குத்திடலாம்" என்றார். உதவுவதில் அப்படியே அப்பா விஜயகாந்தை போல் விஜய பிரபாகரன் இருப்பதை கண்டு அரங்கில் இருந்தோர் நெகிழ்ந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+