கிராமத்து வீட்டில் விஜயகுமார் பேத்தி ரிசப்ஷன்.. நெகிழ வைத்த அருண் விஜய்.. அக்கா அனிதாவின் நெகிழ்ச்சி பதிவு
சென்னை: பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தியின் திருமணம் சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. அதை தொடர்ந்து விஜயகுமார் தன்னுடைய கிராமத்து வீட்டில் பிரம்மாண்டமாக ரிசப்ஷன் நடத்தி வைத்திருக்கிறார். அது குறித்து விஜயகுமாரின் மகள் அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாக வெளியிட்டிருக்கிறார்.
அதில் தன்னுடைய தம்பி அருண் விஜய் தன்னுடைய தாத்தா பாட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும்போது கண் கலங்கிய வீடியோவையும் அனிதா பகிர்ந்து இருக்கிறார்.
சமீபத்தில் பிரம்மாண்டமாக திரைதுறையினர் வியந்து பார்த்த திருமணம் என்றால் அது விஜயகுமார் வீட்டு திருமணம் தான். நடிகர் விஜயகுமார் வீட்டில் எல்லோருமே நடிகர்களாக இருக்கும் நிலையில் அவருடைய இரண்டாவது மகள் அனிதா மட்டும் சினிமா துறையை விட்டுவிட்டு படிப்பை தேர்ந்தெடுத்து டாக்டராக மாறி இருக்கிறார்.

படிக்கும்போது தன்னோடு படித்த டாக்டர். கோகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அனிதா திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் மூத்த மகள் தியாவிற்கு இப்போது பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அவரோடு லண்டனில் ஒன்றாக படிக்கும்போது தீலன் என்பவரை காதலித்து வந்த நிலையில் இரண்டு குடும்பத்தினரும் சம்மதித்து தியாவின் திருமணத்தை கடந்த வாரத்தில் நடத்தி முடித்துள்ளனர்.
ஆனால் இவர்களுடைய திருமண ஏற்பாடுகள் கடந்த வருடத்திலிருந்து தொடங்கி விட்டதாம். அதிலும் கடந்த நவம்பர் மாதத்தில் தியா மற்றும் திலன் எங்கேஜ்மென்ட் எளிமையாக வீட்டில் நடைபெற்றிருக்கிறது. ஒரு வாரம் இவர்களுடைய வீட்டில் திருமணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் இரண்டு நாள் மெஹந்தி பங்க்ஷன், திருமண பந்தக்கால் நடுதல் என பல பங்க்ஷன்கள் வைத்து நடிகர் விஜயகுமார் குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு இருந்த நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிகமாக வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் திருமணம் முடிந்த பிறகு விஜயகுமாரின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அருகில் உள்ள நாட்டுச்சாலை என்ற கிராமத்தில் விஜயகுமார் பிரம்மாண்டமாக ஒரு வீடு கட்டி இருக்கிறார். அந்த வீட்டில் தன்னுடைய மொத்த குடும்பமும் வந்து தங்கி செல்லும் வகையில் எல்லாம் ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கும் விஜயகுமார் அந்த வீட்டில் 10 அறைகள் வைத்திருக்கிறாராம்.
அதில்தான் அடிக்கடி விஜயகுமாரின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக பங்ஷன்களை கொண்டாடுவது வழக்கமாம். அதோடு அந்த வீட்டில் விஜயகுமார் தன்னுடைய முதல் மனைவி நல்லகண்ணு மற்றும் இரண்டாவது மனைவி மஞ்சுளாவோடு இருப்பது போன்று ஒரு சிலை ஒன்றையும் வைத்து இருக்கிறாராம். அது மட்டும் அல்லாமல் அந்த வீட்டில் தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவுக்கும் விஜயகுமார் சிலை வைத்திருக்கிறாராம்.
அதுபோல நடிகர் விஜய் அருண் விஜய் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படமும் வெளியாகும் போதும் கூட அருண் விஜய் அந்த வீட்டிற்கு வந்து தன்னுடைய தாத்தா பாட்டிக்கு மாலை அணிவித்து வணங்கி விட்டு தான் செல்வார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த வீட்டில் வைத்து விஜயகுமாரின் பேத்தி தியாவிற்கு பிரம்மாண்டமாக ரிசப்ஷன் நடத்தி இருக்கிறார்.

அப்போது விஜயகுமாரின் மகளான அனிதா தன்னுடைய தங்கைகள் மற்றும் தம்பியோடு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு தன்னுடைய தம்பி தன் தாத்தா பாட்டிக்கு மாலை அணிவித்து கண்கலங்கிய வீடியோவையும் அதில் ஷேர் செய்து இருக்கிறார்.
அதுபோல இன்னொரு வீடியோவில் மணப்பெண்ணான தியா தன்னுடைய தாய் மாமாவோடு குழந்தையாக இருக்கும்போது எடுத்த புகைப்படத்தையும் தற்போது தன்னுடைய திருமணத்தில் எடுத்த புகைப்படத்தையும் ஒன்றாக சேர்த்து தாய் மாமனின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று அதில் கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications