3 முறை செத்து பிழைத்தேன்.. ரஜினி, அமிதாப்புக்கு அடுத்து அதிக ஊதியம் பெற்றது நான்தான்.. விஜயசாந்தி
ரஜினி, அமிதாப்புக்கு பிறகு நானும் அதிக சம்பளம் வாங்கியவர்களில் ஒருவராக இருந்தேன்- விஜயசாந்தி
ஹைதராபாத்: டாப் 3 நடிகர்களில் ரஜினி, அமிதாப்புக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நானும் இருந்தேன் என நடிகையும் அரசியல்வாதியுமான விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.
ஹீரோக்கள் மட்டுமே போலீஸ் உடை அணிந்து கொண்டு பறந்து பறந்து சண்டை காட்சிகளில் நடித்த காலத்தில் விஜயசாந்தி எனும் நடிகை போலீஸ் வேடத்தில் கலக்கினார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.
அதிரடி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவர் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். இவர் இந்திய தேசிய திரைப்பட விருதை வென்றார். சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதை 5 முறையும் ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை 4 முறையும் பெற்றுள்ளார்.

வைஜெயந்தி ஐபிஎஸ்
இவர் நடித்த வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தின் மூலம் ஆக்ஷனில் இறங்கினார். இவர் ராஜாங்கம், நெற்றிக்கண், நெஞ்சிலே துணிவிருந்தால், சிவப்பு மல்லி, இளஞ்ஜோடிகள், மன்னன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மன்னன் படத்தில் திமிர் பிடித்த பணக்கார வீட்டு பெண்ணாக நடித்திருப்பார். அவரை ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்டு தன் வழிக்கு கொண்டு வருவார்.

முதல் படம்
இந்த நிலையில் விஜயசாந்திக்கு முதல் படமான கல்லுக்குள் ஈரம் படத்தில் அவருக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ 5000. ஆனால் அவரை ஏமாற்றி ரூ 3000 மட்டுமே கொடுத்தனராம். இவர் 3 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தொடங்கி கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். அந்த காலத்திலேயே இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கிய டாப் 3 நடிகர்களில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சனுக்கு அடுத்து விஜயசாந்தி இருந்ததாக தெரிவித்துள்ளார். இதை பெருமையாக சொல்லிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

செத்து பிழைத்தேன்
மேலும் பல முறை தான் செத்து பிழைத்தேன் என தெரிவித்திருக்கிறார். ஒரு முறை விமான விபத்தில் சிக்கினாராம். மறுமுறை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாராம். அதற்கு அடுத்த முறை தீயில் சிக்கிக் கொண்டாராம். இத்தனை சம்பவங்கள் நடந்த போதிலும் தான் உயிர் பிழைத்து வாழ்ந்து வருவதாகவும் விஜயசாந்தி தெரிவித்துள்ளார். மேலும் இவர் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 180 படங்ளில் நடித்துள்ளாராம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கவே தனக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சினிமாவுக்கு முழுக்கு
விஜயசாந்தி சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு காஷ்மீர் பைல்ஸ் குறித்து நடிகை சாய் பல்லவி பேசிய கருத்துக்கு விஜயசாந்தி பதிலடி கொடுத்துள்ளார். சாய் பல்லவி பேசிய போது காஷ்மீரில் அந்த காலத்தில் பண்டிதர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பேசுகிறது.

மத முரண்கள் பிரச்சினை
அதே போல் மத முரண்களை பிரச்சினையாக எடுத்துக் கொண்டால் அண்மையில் பசுக்களை வாகனத்தில் ஏற்றிச் சென்ற முஸ்லீம் இளைஞரை தாக்கி ஜெய்ஸ்ரீராம் என முழங்க கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த இரு சம்பவங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார். சாய் பல்லவியின் இந்த கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சாய் பல்லவிக்கு விஜயசாந்தி பதில்
இந்த விவகாரத்தில் சாய் பல்லவிக்கு எதிராக மாநிலங்களவை உறுப்பினர் விஜயசாந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பசுக்கள் கொல்லப்படுவதும், காஷ்மீர் பண்டிதர்கள் கொல்லப்பட்டதும் ஒன்றல்ல. நீ சற்று சிந்தித்து பார்த்தால், உண்மை புரியும். ஒரு தாய் தவறு செய்த தனது மகனை அடிப்பதையும், ஒரு திருடனை திருடியதற்காக அடித்ததும் எப்படி ஒன்றாகும்? இந்த பிரச்சினை குறித்து முழுமையாக தெரியாவிட்டால் கருத்து சொல்லாமல் ஒதுங்கியிருப்பது நல்லது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications