விஜய் குடும்பத்துக்குள் இதுதான் நடக்குது.. மனைவி லண்டனுக்கு போன காரணம்! விஜய்யின் சித்தப்பா ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் அவருடைய மனைவியை பிரிந்து விட்டதாக சில செய்திகள் பரவி வந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து விஜயின் சித்தப்பா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார் அதில் விஜய்யின் மனைவி எதற்காக லண்டனில் இருக்கிறார் என்பது பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பற்றி அதிகமான வதந்திகள் பரவி வருவது வாடிக்கையாக இருக்கிறது. அதிலும் சமூக வலைதளத்தின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க சின்ன சின்ன பிரச்சனைகளும் ஊதி பெரியதாக்கப்படுகிறது. அதுபோல நடிகர் விஜய் பற்றி அடிக்கடி சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.

vijay

அதிலும் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைக்க தொடங்கிய பிறகு அவரைப் பற்றி அதிகம் ட்ரோல்களும் வதந்திகளும் முன்பை விட அதிகரித்திருக்கிறது. நடிகர் விஜய் சமீபத்தில் ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். அதிலும் ஒரு படத்திற்கு 200 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே சினிமாவில் இருந்து விலகி அரசியலில் பயணிக்க முடிவெடுத்து இருக்கிறார். இதனால் விஜய் பற்றிய தனி மனித தாக்குதல் அவருடைய குடும்பத்தை பற்றி விமர்சனங்கள் அதிகமாக இருக்கிறது. ஆனாலும் அதற்கெல்லாம் விஜய் எந்த இடத்திலும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பது இல்லை.

தன்னுடைய அடுத்த பயணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். விஜய்யின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. அவருடைய மாநாட்டுக்கு பிறகு பல அரசியல் கட்சித் தலைவர்கள் விஜய் குறித்து விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

vijay

இந்த நிலையில் விஜய்யின் சித்தப்பா விஜய் பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவரிடம் விஜய் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக விஜய் அவருடைய குடும்பத்துடன் இல்லை, தனியாக இருக்கிறார் என்று கூறப்படுகிறதே அது உண்மைதானா என்று கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு விஜயின் சித்தப்பா பதில் அளிக்கையில் விஜய் தனது ஃபேமிலியுடன் தான் இருக்கிறார். அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஏனென்றால் விஜய்யின் மகன் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய மகள் லண்டனில் படிக்கிறார். இதனால் பெண் குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக மனைவி சங்கீதா மகளோடு இருக்கிறார்.

பையன் எப்படி என்றாலும் தைரியமாய் இருந்து கொள்வான் ஆனால் பெண் குழந்தையை தனியாக விட முடியாதே. இதனால்தான் ஒரு தாயாக தன்னுடைய பிள்ளைகளை கவனிப்பதற்காக விஜயின் மனைவி லண்டனில் இருக்கிறார். விஜயை பார்ப்பதற்கு ஓராயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அவருடைய பிள்ளைகளை பார்க்க அவருடைய தாய் சங்கீதா மட்டும்தான் இருக்கிறார். இந்த விஷயத்தை சும்மா ஊதி பெரிதாக்கிறார்கள் என்று பேசி இருக்கிறார். இதை விஜய்யின் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+