Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினி சொன்ன மாதிரி, காது கேட்காத தவளையாக தான் நான் வாழ்ந்துட்டு இருக்கிறேன்! நெகிழ வைத்த விக்ரம் பிரபு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் நடிகர் விக்ரம் பிரபு சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட வெற்றி விழாவில் மிகவும் உணர்ச்சிகரமாக பேசியது தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் பிரபுவின் மகனும், நடிப்புத் திலகம் சிவாஜி கணேசனின் பேரனுமான விக்ரம் பிரபு, சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும் தனது வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்ததாக அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Vikram Prabhu Prabhu

ஸ்கூலில் ஒதுக்கி வைத்தார்கள்

சமீபத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிறை திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது அந்த படத்தின் வெற்றி விழாவில் பேசும்போது விக்ரம் பிரபு, "நான் நடிகர் ரஜினி சார் சொன்ன மாதிரி தான் என்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நான் ரொம்ப அமைதியாகவும், தனிமையாகவும் இருந்தேன். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே எல்லோரும் என்னை வேற மாதிரி பார்த்தார்கள்.

'இவன் அந்த நடிகரின் மகன்... அந்த நடிகரின் பேரன்' என்று சொல்லி என்னை ஒரு மாதிரி ஒதுக்கி வைத்தார்கள். அந்த நேரங்களில் ரொம்ப தனிமையாக இருந்தது," என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா சென்றாலும் அமைதி இல்லை

அந்த தனிமையை மறக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து வெளிநாட்டில் படிக்க முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். "அதற்குப் பிறகு நான் அமெரிக்காவுக்கு படிக்கப் போனேன். ஆனால் அங்கே போன பிறகும் மன அமைதி கிடைக்கவில்லை. சுற்றிலும் யாரும் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில் தான் மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்று முடிவு செய்தேன்," என்று விக்ரம் பிரபு கூறியுள்ளார்.

நடிப்புதான் என் பாதை

இந்தியாவிற்கு திரும்பிய பிறகு தான் இனி நடிப்புதான் தனது வாழ்க்கை என்று முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"வீட்டில் அப்பாவிடம் நான் நடிக்கப் போகிறேன் என்று சொன்னபோது முதலில் அவர் 'உன்னால முடியுமா?' என்று கேட்டார். நான் பள்ளியில் சந்தித்த அவமானங்களையும், என்னை ஒதுக்கி வைத்த சம்பவங்களையும் அப்போது அவரிடம் சொல்லவில்லை. 'பார்ப்போம்' என்று மட்டும் சொன்னேன்," என்று அவர் கூறினார்.

கும்கி தான் தொடக்கம்

அந்த தைரியத்தில்தான் தனது முதல் படமாக Kumki படத்தில் நடித்ததாகவும் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார். அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் இன்று தனது முயற்சியால் சினிமாவில் தனி இடத்தை உருவாக்கி வருகிறார்.

வாரிசு நடிகர்கள் சந்திக்கும் சவால்கள்

பொதுவாக சினிமா பிரபலங்களின் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்களும் குறைவில்லை.

"அவர்களுக்கு எல்லாம் சுலபம் தான்" என்ற ஒரு எண்ணம் பலரிடமும் இருக்கும். இதனால் அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவும், நடித்த ஒவ்வொரு படமும் அதிகமாக ஒப்பிடப்பட்டு பேசப்படும். அதேபோல் அவர்களின் வெற்றி கூட பல நேரங்களில் அவர்களின் திறமையால் அல்ல, குடும்ப பின்னணியால் வந்தது என்று விமர்சிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

தொடர்ந்து முயற்சி செய்து வரும் விக்ரம் பிரபு

இப்படியான சூழ்நிலைகளையும் கடந்து விக்ரம் பிரபு தனது முயற்சியால் தொடர்ந்து சினிமாவில் பயணம் செய்து வருகிறார். நடிப்புத் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் என்ற அடையாளத்தை தாண்டி, தனது திறமையால் ரசிகர்களிடம் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த இந்த வெற்றி விழாவில் அவர் உருக்கமாக பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது நேர்மையான பேச்சுக்கு பலரும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+