பிக் பாஸுக்குள் நடந்த பிரச்சனை.. கமல்ஹாசன் அவர் சம்பளத்தையே தரேன்னு சொன்னாரு.. விக்ரமன் ஓபன்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த விக்ரமன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது உள்ளே நடந்த பிரச்சனைக்கு கமல்ஹாசன் தன்னுடைய சம்பளத்தை தரேன் என்று சொன்னார் என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் புகழின் உச்சத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். அதுவரைக்கும் வெளியே தெரியாத நபர்கள் கூட இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் பிரபலம் அடைந்திருக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக பலரை சொல்லலாம். தாமரை செல்வி போன்றோர் கிராமப்புறங்களில் பிரபலமாக இருந்த நிலையில் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி உலகெங்கும் ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது.

அதுபோல விக்ரமன் அரசியல் பிரமுகராகவும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தான் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. ஆனால் அவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்தாலும் வாக்குகள் குறைவாக இருந்ததாலேயே அவர் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றார். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் விக்ரமன் மற்றும் அசீம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் பலருக்கும் தெரிந்ததுதான்.
இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு கூட இவர்கள் இருவரும் பேட்டிகளில் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கி கொண்டு இருந்ததையும் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் விக்ரமன் கலந்து கொண்ட போது அவரிடம் பிக் பாஸ் பற்றி கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார் அது சரி என்று நினைக்கிறீர்களா? கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டாரே அது சரியா? தவறா? என்று கேள்வி கேட்க, அதற்கு விக்ரமன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையிலும் சரியாக கருத்து கூறியிருக்கிறார்.

ஒருமுறை பிக் பாஸ் வீட்டிற்குள் சாப்பாடு பிரச்சனை வந்தது. அப்போது கமல்ஹாசன் சேனல் தரப்பினரிடம் நீங்கள் சரியான சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் என்னுடைய சம்பளத்தை வேண்டுமென்றால் குறைத்துக் கொண்டு அந்த பணத்தில் இருந்து இவர்களுக்கு சரியான சாப்பாடு கொடுங்கள். எல்லோரும் வேலை பார்ப்பது சாப்பிடுவதற்கு தான். அந்த சாப்பாடு அவர்களுக்கு பஞ்சம் இல்லாமல் கொடுங்கள் என்று சொன்னார்.
இதுபோல வேறு யாராலும் சொல்ல முடியுமா? என்று கேட்டால் எனக்கு தெரியவில்லை. விஜய் சேதுபதி வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார் அவர் இந்த நிகழ்ச்சியில் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது அவருடைய நடவடிக்கையை பார்த்த பிறகு தான் தெரியும். கமல்ஹாசனுக்கே அதிகமான விமர்சனங்கள் வந்தது. அதையும் தாண்டி அவர் அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்தார். அதுபோல விஜய் சேதுபதிக்கு விமர்சனங்கள் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும் என்றும் விக்ரமன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications